மொபைல்ல சார்ஜ் நிக்கலையா?
வைஃபை, புளூடூத், ஹாட்ஸ்பாட், லொகேஷன் இது போன்ற ஆப்ஷன் எல்லாவற்றையும் ஆஃப் செய்ய வேண்டும். இவற்றை தேவைப்படும் போது மட்டும் ஆன் செய்யவும். குறிப்பாக இரவு நேரங்கள், மொபைல் பயன்படுத்தாத சூழல்களில் மேற்கண்ட அம்சங்களை ஆஃப் செய்தால் பேட்டரி நீடித்து உழைக்கும்.
உங்க மொபைலில் 'கீ பேட்' டோன், வைப்ரேஷன் ஆகியவை ஆன் நிலையில் இருந்தால், உடனே ஆஃப் பண்ணுங்க. இதனாலயும் உங்க போன்ல சார்ஜ் நிக்காம போகலாம். இரவு முழுவதும் சார்ஜ் போடுவதால் உங்க போன் சூடாகும், கூடவே சேர்ந்து பேட்டரியும் சூடாகும். இதனால பேட்டரி லைஃப் விரைவில் குறைந்துவிடும்.
மொபைலில் சார்ஜ் முழுமையாக காலி ஆன பின்பு சார்ஜ் போட்டுக் கொள்ளலாம் என்று இருக்கும் பழக்கத்தையும், 100% சார்ஜ் ஏற்றும் பழக்கத்தையும் கைவிட வேண்டும். தொழில்நுட்ப வல்லுனர் இதுகுறித்து கூறுகையில், மொபைலில் சார்ஜ் 20% வரும் போதே சார்ஜ் போட்டுவிட வேண்டும். 20% க்கு கீழ் செல்லக்கூடாது. அதே போல், 90% சார்ஜ் ஏறியதும் அதை பிளக்கில் இருந்து இடுத்துவிட வேண்டும். இவ்வாறு 20 முதல் 90 சதவீதத்திற்குட்பட்டு சார்ஜ் ஏற்றி வந்தாலே, பேட்டரியின் ஆயுள் நீடித்து நிற்கும்.
உங்களது மொபைல் நிறுவனம் வழங்கும் சார்ஜரை மட்டும் பயன்படுத்தி சார்ஜ் போட வேண்டும், மாறாக, மற்ற கம்பெனி சார்ஜரை பயன்படுத்தும் போது சார்ஜ் ஆகும் நேரமும் அதிகமாகும், பேட்டரியின் ஆயுள் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
தேவை இல்லாத எல்லா செயலிகளையும் உடனடியாக அன்இன்ஸ்டால் செய்யுங்கள். அதிகமான செயலி இருந்தால், அவை பேக்கப்பில் இயங்கி கொண்டே இருக்கும், பேட்ரியின் சக்தியையும் அவை உறிந்து விடும். இதனாலயும் பேட்டரி மோசமாகும்.
பேட்டரி சேமிப்பு (Battery Saver) அம்சத்தில் நீங்கள் சேர்த்துள்ள எல்லா ஆஃப்களையும் உடனே நீக்க வேண்டும். பேட்டரிய பாதுகாக்குறதுக்கான ஆப்சன்களை செல்போன் நிறுவனங்களே இப்போது மேம்படுத்திட்டாங்க. அதனால இந்த ஆஃப் எல்லாத்தையும் டெலிட் பண்ணுங்க.
லைவ் வால்பேபர் (Live Wallpaper) பயன்படுத்துவதை உடனே நிறுத்த வேண்டும்.
ஆட்டோ பிரைட்னஸ் ஆன் நிலையில் இருந்தால், அதையும் உடனே நிறுத்த வேண்டும்.
3 அல்லது 4 நாளைக்கு ஒருமுறையாவது உங்க போனை ஒரு மணி நேரத்துக்கு ஆப் செய்து வைத்தால், உங்கள் பேட்டிரியின் நிலை நன்றாக இருக்கும். நீடித்து உழைக்கும்.
No comments:
Post a Comment