jaga flash news

Saturday, 26 January 2013

ஜாதகத்தை வைத்து நல்ல காலம் எப்போது என்பதை எப்படிப் பார்ப்பது?

ஜாதகத்தை வைத்து நல்ல காலம் எப்போது என்பதை எப்படிப் பார்ப்பது?
நடப்பது எந்தக் கிரகத்தின் திசை, எந்தக் கிரகத்தின் புத்தி என்பதை முதலில் குறித்துக் கொள்ளுங்கள். ஜாதகத்தில் அந்த தசா நாதனும், அந்த புத்திநாதனும் ஒருவருக்கொருவர் 6/8 பொஸிசனில் இருக்கக்கூடாது. அல்லது 1/12 பொஸிசனிலும் இருக்கக்கூடாது. இருந்தால் அந்த திசையில் அந்த புத்தி நன்மையைச் செய்யாது. இதுதான் குறுக்குவழி ஃபார்முலா! இதை வைத்து அதாவது இந்த ஃபார்முலாவை வைத்து, அடுத்தடுத்து வரப்போகும் புத்திகளுக்கும் குறித்துக் கொண்டே வாருங்கள், உங்களுக்கு நல்ல நேரமும், கெட்ட நேரமும் பிடிபட்டு விடும். தசாபுத்திப் பலன்களைக் கொடுத்துள்ளேன். பார்க்க. 1ம் வீடு, 5ம் வீடு, 9ஆம் வீடு, 4ஆம் வீடு, 7ஆம் வீடு, 10ஆம் வீடு ஆகிய வீட்டு அதிபதிகளின் தசா அல்லது புத்தி நடைபெற்றாலும், அவர்கள் ஜாதகத்தில் வலுவாக இருந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும். எல்லாவற்றையும் விட, 11ஆம் வீட்டு அதிபரின் தசா அல்லது புத்தி நடைபெற்றால், அவர் ஜாதகத்தில் வலுவாக இருந்தால் மிக நல்ல பலன்கள் கிடைக்கும். ஜாதகத்தில் உச்சமாக உள்ள கிரகங்களின் தசா அல்லது புத்தி நடைபெற்றாலும் நல்ல பலன்கள் கிடைக்கும். நீசமாக உள்ள கிரகங்களின் தசா அல்லது புத்தி நடைபெற்றால் நல்ல பலன்கள் கிடைக்காது. தசாபுக்திதான் முக்கியம். அதற்கடுத்தபடிதான் கோச்சாரப் பலன்கள். கோச்சாரத்தில் (in transit) குரு பகவானின் சஞ்சாரம் முக்கியமானது. குருவானவர் சந்திர ராசிக்கு 5ஆம் இடம், 7ஆம் இடம், 9ஆம் இடம், 11ஆம் இடம் ஆகிய இடங்களில் வாசம் செய்யும் காலங்களில் நல்ல பலன்களைத் தருவார். 1ஆம் இடம், 3ஆம் இடம், 6ஆம் இடம் 4ஆம் இடம் 8ஆம் இடம், 10ஆம் இடம் 12ஆம் இடம் ஆகிய இடங்களில் சஞ்சாரம் செய்யும் காலங்களில் குரு பகவான் நன்மை செய்ய மாட்டார். மூன்றாம் இடச் சஞ்சாரத்தில் குரு பகவான் தீமையான பலன்களைத்தான் நல்குவார். குருவின் 3ஆம் இட சஞ்சாரத்தின் தன்மையை விளக்கும் பாடல் "கேளப்பா குருபதியும் மூன்றிலேறக் கெடுதிமெத்த செய்வானடா வேந்தன்தானும் ஆளப்பா அகத்திலே களவுபோகும் அப்பனே அரிட்டமடா சிசுவுக்குத் தான் கூளப்பா குவலயங்க ளெல்லாம் ஆண்ட குற்றமிலாகாந்தாரி மகனும் தானும் வீளப்பா வீமன் கை கதையினாலே விழுந்தானே மலைபோல சாய்ந்தான் சொல்லே!" - புலிப்பாணி பாடல்

No comments:

Post a Comment