jaga flash news

Saturday, 26 January 2013

துளசி இலையைப் பறிக்கும்போது என்ன சொல்ல வேண்டும்?

துளசி இலையைப் பறிக்கும்போது என்ன சொல்ல வேண்டும்?
""துளஸி அம்ருத ஸம்பூதே ஸதா த்வம் கேசவப்ரியே கேசவார்த்தம் லுநாமி த்வாம் வரதா பவ ஸோபனே -துளசித் தாயே! நீ அமுதத்துடன் தோன்றினாய். கேசவனுக்குப் பிரியமானவள் நீ. மங்களம் மிகுந்தவளே, உன்னை கேசவனுடைய பூஜைக்காகப் பறிக்கிறேன். எனக்கு வரம் தா... - என்பது இதற்குப் பொருள். துளசியைப் பறிப்பதற்குக்கூட பெரியவர்கள் நேரம் காலம் விதித்திருக்கிறார்கள். பூஜை செய்துவரும் துளசிச் செடியிலிருந்து இறைவனின் பூஜைக்காக துளசியைப் பறிக்கக் கூடாது. துளசியை கொத்துக் கொத்தாக ஒடித்துப் பறிக்கக் கூடாது. மதியத்துக்கு மேலும், துவாதசி திதி, செவ்வாய், வெள்ளிக் கிழமைகளிலும் பறிக்கக் கூடாது. வில்வம் போல் மூன்று இலைகளுடன் துளசியைப் பறித்து பூஜை செய்யலாம். மாலையாகத் தொடுத்து விஷ்ணுவுக்கு சாத்துதல் சிறந்தது. துளசிக் கட்டை உலர்ந்த பின் கடைசல் பிடித்து மாலையாகச் செய்து போட்டுக் கொள்ளலாம். துளசிக் கட்டையால் ஆன மாலை அணிதல் சிறந்தது. பிரசாதமாகக் கிடைக்கும் துளசியை ஒவ்வோர் இலையாகக் கிள்ளி, அது பல்லில் படாதவகையில் அப்படியே விழுங்க வேண்டும்

No comments:

Post a Comment