jaga flash news

Saturday, 26 January 2013

லக்ஷ்மியோகம்

லக்ஷ்மியோகம்லக்ஷ்மியோகம் எல்லோரும் விரும்பும் யோகம் இந்த யோகம். இந்த யோகம் இருப்பவன் ஜாதகத்தைக் கையில் எடுக்க வேண்டிய அவசியம் இருக்காது. இந்த யோகத்திற்கான ஜாதக அமைப்பு என்ன? லக்கினாதிபதி வலிமையாக இருக்க வேண்டும். அத்துடன் 9ஆம் அதிபதி சொந்த அல்லது உச்ச வீட்டில் இருக்க வேண்டும் (அது கேந்திர வீடாக அல்லது திரிகோணவீடாக இருக்க வேண்டும். அது லக்கினத்தில் இருந்தும் இருக்கலாம். அல்லது லக்கினாதிபதி இருக்கும் இடத்தில் இருந்து இருக்கலாம் If the lord of Lagna is powerful and the lord of the 9th occupies own or exaltation sign identical with a Kendra or Thrikona, Lakshmi Yoga is caused. பலன் என்ன? பலன் 1 ஜாதகன் அரவிந்தசாமியைப் போல (ரோஜா/தளபதி படங்களில் வரும் அரவிந்தசாமியைப் போல) அழகாக இருப்பான். பெண்ணாக இருந்தால் மிகவும் அழகாக இருப்பாள். பார்ப்பவர்களைத் திரும்பிப் பார்க்க வைக்கும் விதமான அழகுடன் இருப்பாள். பெண்ணுக்குப் பெண்ணே பொறாமைப்படும் விதத்தில் அழகுடன் இருப்பாள். கையெடுத்துக் கும்பிட வைக்கும் அழகோடு இருப்பாள்.( அதனால்தான் எந்த நடிகையையும் உதாரணமாகச் சொல்லவில்லை) 2 ஜாதகன் செல்வத்தோடு இருப்பான். உயர்ந்த குணங்களை உடையவனாக இருப்பான். நன்கு கற்றவனாக இருப்பான். மதிப்பும் மரியாதையும் மிக்கவனாக இருப்பான். நல்ல ஆளுமைத் திறமை கொண்டவனாக இருப்பான். வாழ்க்கையின் எல்லா வசதிகளையும் உடையவனாக இருப்பான். அதைவிட முக்கியமாக எப்பொதும் மகிழ்ச்சியை உடையவனாக இருப்பான். பெண்ணாக இருந்தாலும் இதே பலன்கள் உண்டு! The person will be wealthy, noble, learned, a man of high integrity and reputation, handsome appearance, a good ruler, and enjoying all the pleasures and comforts of life. பலன் எப்போது? லக்கினாதிபதி மற்றும் ஒன்பதாம் அதிபதி ஆகியவர்களின் தசை/ புத்திக் காலங்களில் பலன்கள் உண்டாகும்/கிடைக்கும் மேலதிகத்தகவல்கள்: Different definitions of the Lakshmi Yoga. Lakshmi Yoga will arise by the mutual association of lords of Lagna and the 9th; (b) by the lord of the 9th occupying Kendra, Thrikona, or exaltation and the lord of Lagna being disposed powerfully; and (c) by the lord of the 9th and Venus being posited in own or exaltation places which should be Kendras or Trikonas. Obviously, Lakshmi Yoga presumes the strength of lord of Lagna, Venus, and the lord of the 9th. Lakshmi has predominantly to do with wealth and one born in this combination will be wealthy, the degree of wealth varying with regard to the degree of strength or weakness of the planets causing the Yoga. The most powerful type of Lakshmi Yoga will give immense wealth, while the mutual association of or aspect between the lords of Lagna and the 9th in houses other than 3, 6 and 8 would also result in an ordinary type of Lakshmi Yoga which might be fortified by the presence of other Dhana Yogas அந்த இருவரும், பகை நீசம், அஸ்தமனம், வக்கிரம் என்று ஏதாவது டேமேஜ் ஆகியிருந்தால் இந்த யோகம் இருக்காது! பாதியாவது இருக்காதா? என்று யாரும் கேட்கவேண்டாம். பாதி அழகாக இருந்தால் எப்படி இருக்கும் யோசித்துப்பாருங்கள். தலையில் பாதி முடி இருந்தால் எப்படி இருக்கும் யோசித்துப் பாருங்கள் பாதிக் கிணறு தாண்டினால் என்ன ஆகும் யோசித்துப் பாருங்கள் ஆகவே உங்கள் ஜாதகத்தைவைத்து நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் வேறு அமைப்புக்களை இதனுடன் கோந்து போட்டு ஒட்டி, கேள்விகள் எதுவும் கேட்க வேண்டாம் லக்ஷ்மி யோகம் இருந்தால் இருக்கட்டும். இல்லையென்றால் போகட்டும் என்ன இருந்தாலும் இல்லாவிட்டாலும் அனைவருக்கும் மதிப்பெண் 337 மட்டுமே. அதை மனதில் வையுங்கள் லக்ஷ்மி இல்லாவிட்டால் உங்கள் ஜாதகத்தில் பராசக்தி இருப்பார் அல்லது சரஸ்வதி இருப்பார். யார் இருக்கிறார் என்பது போகப்போகத் தெரியும்.

No comments:

Post a Comment