jaga flash news

Saturday, 26 January 2013

கஜகேசரி யோகம்

கஜகேசரி யோகம்
கஜகேசரி யோகம்! மிகச்சிறந்த யோகங்களில் கஜகேசரி யோகமும் ஒன்று. கஜம் என்றால் யானை, கேசரி என்றால் சிங்கம். யானையின் தோற்றத்தையும், சிங்கத்தின் பலத்தையும் கொடுக்கக்கூடிய யோகம் கஜகேசரி யோகம். பெருந்தன்மை, புத்திசாலித்தனம். கெளரவம், பெயர், புகழ், செல்வாக்கு, சொல்வாக்கு, ஆகியவற்றை ஜாதகனுக்கு இந்த யோகம் கொடுக்கும். This yoga gives the native, qualities of a both animals - magnanimous and intelligent as an elephant and majestic as a lion. Such people would earn a lot of name and fame in life. A quality of generosity would also be associated with them. மொத்தம் உள்ள மூன்று சுபக்கிரகங்களில் இரண்டு சுபக்கிரகங்கள் - குரு’வும், சந்திரனும் சம்பந்தப்பட்டு ஏற்படுவதால் இந்த யோகத்திற்கு அந்தப் பெயர் வழங்கப்பட்டிருக்கலாம். இந்த யோகம் எப்போது உண்டாகும்? குரு பகவானும், சந்திரனும் ஒருவருடைய ஜாதகத்தில் அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் 1, 4, 7,10 ஆகிய கேந்திர வீடுகளில் அமர்ந்திருந்தால் இந்த யோகம் உண்டாகும். Gaja Kesari Yoga is caused by Moon and Jupiter coming together in a chart by being in Kendras (1st, 4th, 7th, or 10th) from each other. இந்த யோகம் உள்ள அனைவருக்கும் ஒரே மாதிரிப் பலன் உண்டா? இல்லை! அந்த இரு கிரகங்களும் ஜாதகத்தில் அமைந்திருக்கும் தன்மையைப் பொறுத்துப் பலன் மாறுபடும். அவைகள் நீசம் பெறாமலும், பகை வீட்டில் இல்லாமலும், வக்கிரம் பெறாமலும், அஸ்தமனமாகாமலும், தீய கிரகங்களின் கூட்டணி மற்றும் பார்வை பெறாமலும் இருக்க வேண்டும். அதோடு அவைகளில் இரண்டில் ஒன்று ஜாதகத்தில் 6, 8,12 ஆம் வீடுகளில் உட்கார்ந்திருக்கக்கூடாது This yoga depends on the strength, position and house lordship of the two planets involved - Moon and Jupiter. The yoga would also be best shown in life if both these planets are in their exaltation sign and are at an angle not just from each other but from Lagna as well. Neechabhanga Chandra and Guru would be considered good. The two planets would need to be benefic in the charts and suitably disposed to the lord of Lagna as well. They themselves should be free from any negative aspect, particularly Rahu and Saturn should not be associated with Moon. This yoga would not work if Jupiter is in regression - as benefic planets become considerably weaker when they are retrograde. Moon and Jupiter should not be in neech awastha or in combust state. If that is the case, the effects of this yoga are nullified and the person would lead a fairly ordinary life. அப்படி இருந்தால் என்ன அளவில் (ratio) பலன்? அப்படி இருந்தால் என்ன அளவில் (ratio) பலன் என்பதைத் தருமியிடம்தான் கேட்கவேண்டும்! அவர்தான் திருவிளையாடல் தருமி! எப்போது பலன் கிடைக்கும்? குரு மற்றும் சந்திரனின் மகா தசைகளிலும், புத்திகளிலும் பலன்கள் கிடைக்கும்

No comments:

Post a Comment