jaga flash news

Tuesday, 14 October 2014

முகூர்த்தம் கணிக்க

திருமண மற்றும் சுபகார்ய முகூர்த்தம் கணிக்க "வளர்பிறை முகூர்த்தம் கவனியுங்கள் "
தேய்பிறையில் "திருமண மற்றும் சுபகார்ய நிகழ்ச்சிகள் செய்யலாமா ??செய்யக்கூடாதா ??
சிறு விளக்கம்  ;-
அமாவாசை முடிந்து வளர்பிறை துதியை திதி முதல் சூரியனிடம் தான் பெற்ற சக்தியை முழு வேகத்தில் ((output )) பூமியின் மேல் செலுத்த ஆரம்பிக்கிறார்...
இந்த வேகம் வளர்பிறை தசமிதிதி வரை ((இங்கே சந்திரன் சுபர் )))மிக வேகமாகவும் பின்னிட்டு தேய்பிறையில் வரும் பஞ்சமி திதி வரை மிதமான வேகத்தில் தன்னிடம் இருக்கும் சக்தியை வெளிப்படுத்துகிறார் ((output )) இந்த காலகட்டத்தில் சந்திரன் சமன் ஆகிறார் ....
அதன்பின்னர் தன்னிடம் இருந்த சக்தியை எல்லாம் வெளிப்படுத்தி தன்னிடம் எந்தவொரு சக்தியும் இல்லாமல் ((Battery low ))சூரியனிடம் இருந்து சக்தியை பெற ஆரம்பிக்கிறார் ((Input ))ஆகையால் முன்னோர்களால் தேய்பிறையில் பஞ்சமி திதி வரை சுபகார்ய முகூர்த்தம் கணிக்கிட்டு கொடுத்து இருக்கிறார்கள் ...
எப்படி நாம் நம்முடைய செல்போனில் அதன் சக்தி குறைந்த பின்னர் ((charge low ))சக்தியை ஏற்றுகிறோமோ ..எப்படி அப்போது எல்லாம் செல்போனை Charge ஏற்றும்போது பேசாமல் இருக்கிறோமோ அதுபோலவே தேய்பிறையில் பெளர்ணமி முதல் பஞ்சமி திதிவரை திருமண மற்றும் சுபகார்ய நிகழ்ச்சிகள் நடத்துவதில் எந்த பாதகமும் இல்லை ....வளர்பிறையில் கூட சில நாட்களுக்கு நேத்ர (கண் )ஜீவன் (உயிர் )இருப்பதில்லை ....ஆனால் பெரும்பாலான தேய்பிறையில் வரும் முகூர்த்தம் நேத்ரம் 2 ..ஜீவன் 1.அமையப்பெற்றுள்ளது..
தேய்பிறையில் பஞ்சமி திதிக்கு மேலே சஷ்டி திதி கூட விவாஹ முகூர்த்தம் செய்யலாம் அதற்கு மேலே வரும் நாட்களில் சந்திரன் தன்னிடம் இருந்து சக்தியை வெளிப்படுத்தாது சூரியனிடம் இருந்து சக்தியை உள்வாங்கி கொள்ளும் காலகட்டத்தில் மட்டுமே சுபகார்ய முகூர்த்தம் செய்விக்ககூடாது...(((அங்கே சந்திரன் பாவர் ஆகிறார் ))... ....மேலும் தாராபலன் மிகமிக அவசியம் ....ஜோதிடர்களை கொண்டு சுபகார்ய மற்றும் திருமண முகூர்த்தம் கணிக்கப்பட்ட வேண்டும் .....
தன்னிச்சையாக எதையும் செய்யக்கூடாது

No comments:

Post a Comment