jaga flash news

Saturday 4 October 2014

செவ்வாய் தோஷம் செவ்வாய் தோசம் என்றால் என்ன ?

ஒரு பெண்ணின் ஜாதகத்தில் 2,4,7,8,12 போன்ற இடங்களில் செவ்வாய் இருந்தால், அந்த பெண்ணிற்கு கெடுபலன்கள் உண்டாகவே செய்கின்றன.

எழிலும் எட்டிலும் இருந்தால் மிக கடுமையான தோஷம்,

நாலாம் இடம் கடுமையான தோஷம் ,

பன்னிரெண்டாம் இடம் தோஷம் ,

இரண்டாம் இடம் தோஷம் குறைவு.

ஒரு பெண்ணிற்கு செவ்வாய் தோஷம் இருந்தால் ஆணுக்கும் செவ்வாய் தோஷம் இருக்க வேண்டும்.

செவ்வாய் தோஷம் உள்ள பெண்ணுக்கு செவ்வாய் தோஷம் இல்லாத வரனை திருமணம் செய்தால் அவருடைய வாழ்வு மிகவும் சோதனையை உண்டாக்குகிறது.

செவ்வாய் தோஷம் சரி பார்க்காமல் அல்லது பொருத்தம் இல்லாமல் திருமணம் செய்தால் , திருமணமான சில வருடங்களில் கணவன் மனைவி பிரிவு, கணவனை இழக்கும் நிலை, விதவை வாழ்வு போன்றவை உண்டாகிறது.

   ஒரு பெண்ணிற்கு 2,4,7,8,12 இல் செவ்வாய் அமைய பெற்று செவ்வாய் திசை நடை பெறுவது நற்பலன் என்று சொல்ல முடியாது.

அப்படி செவ்வாய் திசை நடைபெற்றால் கணவருக்கு கெடுதி குறிப்பாக சொல்லபோனால் மாரகம் போன்ற கெடுபலன்கள் உண்டாகிறது.

பெண்ணிற்கு 8 இல்  செவ்வாய் அமைய பெற்று செவ்வாய் திசை நடைபெரும் போது மாங்கல்யம் இழக்கும் அபாயம் உண்டாகிறது.

No comments:

Post a Comment