jaga flash news

Wednesday 15 April 2015

விவாகரத்து

 நமது இந்திய பண்பாட்டில் திருமணம் என்பது சடங்காக மட்டுமில்லாமல், இரு ஜீவன்கள் கடவுள் கொடுத்த ஆயுள் வரை இன்ப-துன்பங்களில் இணைந்து வாழ்க்கை நடத்த வேண்டும் என்பதை அடிப்படையாக கொண்டுள்ளது. அதே சமயத்தில் ஒவ்வொருவர் வாழ்விலும் பிரச்னைகள் வரும் சமயத்தில் அதன் தீர்வுக்கு சட்டம் அவசியமாகும். அதை கருத்தில் கொண்டு பல சாதி, மதம், மொழியினர் ஒருமரத்து பறவையாக கூடி வாழும் இந்திய திருநாட்டில், ஒவ்வொரு மதத்தினருக்கும் தனித்தனியாக திருமண சட்டங்கள் வகுத்து செயல்படுத்தி வருகிறோம். அதன்படி இந்து திருமண சட்டம் 1955ன் கீழ் என்னென்ன அம்சங்கள் சொல்லப்பட்டுள்ளது என்பதை தெரிந்துகொள்வோம்.

இந்து திருமண சட்டம்-1955:-

திருமணம் மற்றும் விவாகரத்து தொடர்பாக நமது நாட்டில் இந்து, இஸ்லாமியர், கிறிஸ்துவர், பார்சி, யஹொதி ஆகிய மதங்களுக்கு தொடர்புடைய வெவ்வேறு சட்டங்கள் உள்ளது. அதன்படி இந்து திருமண சட்டம்-1955, (இது இஸ்லாமியர், கிறிஸ்துவர், பார்சி, யஹொதி மதங்களை தவிர்த்து) இந்து மதத்தை சேர்ந்த 1. வீரசைவர், லிங்காயத்து, ஆர்யா, சமாஜம், பிராமண சமாஜம் உள்பட இந்து மத வழிபாடுகளை பின்பற்றும் அனைத்து சாதி, மொழியினருக்கும். 2. பவுத்தம், ஜெயின், சீக்கிய மதங்களை சேர்ந்தவர்களுக்கும் பொருந்தும் வகையில் உள்ளது.

சட்டப்படி இந்து திருமணம் செய்வோர் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்:-

1. திருமணம் செய்து கொள்ளும் ஆண் அல்லது பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி உயிருடன் துணை இருக்ககூடாது.

2. திருமணம் நடக்கும் சமயத்தில்.

* மணமகன், மணமகள் இருவரும் மனரீதியாக தெளிவானவர்களாக இருக்க வேண்டும். திருமணம் செய்து கொள்ள இருவரின் மனபூர்வமான ஒப்புதல் இருக்க வேண்டும். மணமக்கள் ஒருவரை ஒருவர் விருப்பமில்லாமல் திருமண பந்த்திற்குள் செல்பவர்களாக இருக்ககூடாது.

* மணமக்கள் மற்றவர்களின் கட்டாயத்தின் பேரில் திருமணம் செய்பவர்களாக இருக்ககூடாது.

* திருமணம் செய்து கொள்ளும் சமயத்தில் மணமகனுக்கு 21, மணமகளுக்கு 18 வயது முழுமையாக பூர்த்தியாகி இருக்க வேண்டும்.

* மணமக்கள் பொருந்தாத உறவினர்களாக இருக்ககூடாது.

* மணமக்கள் உறவினர்களாக இருக்ககூடாது.

* மணமக்கள் ஒரே வகுப்பை சேர்ந்தவராக இருந்து, அவரவர் சம்பிரதாயங்களுக்கு உட்பட்டு திருமணம் செய்து கொண்டால், அது சட்டபூர்வ திருமணமாகும். ஒருவேளை வெவ்வேறு வகுப்பினராக இருக்கும் பட்சத்தில் 7 ஆண்டுகள் முடிந்தால் மட்டுமே சட்டப்படியான திருமணமாக அங்கீகரிக்கப்படும்.

திருமணம் பதிவு மற்றும் பதிவு திருமணம்:-

திருமண பதிவு கட்டாயமல்ல:-

திருமணம் செய்து கொள்பவர்கள் அதை அரசாங்கத்திடம் பதிவு செய்ய வேண்டும் என்பது கட்டாயமல்ல. ஆனால் பதிவு செய்வதின் மூலம் தம்பதியரின் திருமணம் சட்டப்படி அங்கீகரிக்கப்படுகிறது. இது எதிர்கால தலைமுறையினருக்கும் நல்ல வழிகாட்டியாகவும் அமையும்.

திருமண பதிவு சிறப்பு திருமண சட்டம்-1954க்கு பொருந்தும்:-

இந்த சட்டத்தின்படி ஒரே வகுப்பை சேர்ந்த அல்லது மதத்தை சேர்ந்த ஆண், பெண் மட்டுமில்லாமல் பிற சாதி, மதத்தை சேர்ந்தவர்களும் திருமணம் செய்துகொள்ளலாம். இப்படி திருமணம் செய்து கொள்பவர்கள் அதை முறைப்படி பதிவு செய்ய விரும்பினால், ஆண் மற்றும் பெண் இருவரும் உண்மையான தகவல்களை திருமண பதிவு அதிகாரியிடம் தெரிவிக்க வேண்டும். அவர் கொடுக்கும் விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். அவர் பரிசீலனை செய்து இருவரின் திருமணத்தை சட்டப்படி அங்கிகரித்து பதிவு செய்தபின், அதற்கான பதிவு சான்றிதழ் வழங்குவார். மேலும் வேறு வழிகளை பின்பற்றி திருமணம் செய்து கொண்டவர்கள், முறைப்படி தங்கள் திருமணத்தை சட்டப்படி பதிவு செய்ய விரும்பினால், அரசாங்கத்தால் நியமனம் செய்யப்பட்டுள்ள அதிகாரியை அணுகி அவர் சொல்லும் வழிமுறையை பின்பற்றி பதிவு செய்து கொண்டு சான்றிதழ் பெறலாம்.

Void marrage:

* திருமணம் செய்யும் சமயத்தில் மணமகனுக்கு ஏற்கனவே மணமாகி உயிருடன் மனைவி இருந்தாலோ அல்லது மணமகளுக்கு திருமணமாகி உயிருடன் கணவர் இருந்தாலோ-அல்லது

* திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகள் பொருந்தாத உறவினர்களாக இருந்தாலோ- அல்லது

* அவர்கள் ஒத்துபோகாத உறவினர்களாக இருந்தால், அப்படிப்பட்டவர்களின் திருமணம் 'சட்டப்படி ஏற்றுகொள்ளகூடாத திருமணம்' என்று கருதப்படுவதுடன், அத்தகைய திருமணத்திற்கு சட்டப்படி எந்த அங்கீகாரமும் வழங்கப்படுவதில்லை.

* தம்பதிகளில் யாராவது ஒருவர் தமது திருமணத்தை கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஏதாவது ஒரு காரணத்தை முன்வைத்தும் அல்லது முக்கிய காரணத்தை முன்வைத்தும் நீதிமன்றத்தில் மனு கொடுத்து திருமணத்தை ரத்து செய்துகொள்ள முடியும்.

திருமண சமயத்தில்:-


* கணவன் அல்லது மனைவி ஆகிய இருவரில் தீராத நோய் இருக்கும் பட்சத்தில், தம்பதிகளில் ஒருவர் சேர்ந்து வாழ விரும்பாவிட்டாலும்

* மலட்டு தன்மை இருக்கும் பட்சத்தில், தம்பதிகளில் யாராவது மனநிலை பாதிக்கப்பட்டிருந்தால்

* கணவருக்கு ஆண்மை பலம் இல்லாத பட்சத்தில், திருமணம் நடந்த சமயத்தில் தம்பதிகளில் யாராவது ஒருவரின் விருப்பத்தை பலவந்தமாக பெற்றிருந்தால் திருமணத்தை ரத்து செய்ய முடியும்.

சட்டபூர்வ திருமணத்தினால் ஏற்படும் நன்மைகள்:-

* தம்பதியரின் திருமணம் சட்டப்படி அங்கீகரிக்கப்படுகிறது மற்றும் தம்பதியரின் சொத்துக்கு உண்மையான வாரிசுதாரராகும் உரிமை கிடைக்கிறது. அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளும் உண்மையான வாரிசுகளாக சட்டத்தாலும், சமூகத்தாலும் அங்கீகரிக்கப்படுகிறார்கள்.

* தம்பதியர் சட்டப்படியான அனைத்து உரிமைகளும் பெறும் அதிகாரம் கொண்டவராகிறார்கள்.

* எதிர்பாராத சூழ்நிலையில் தம்பதியர் பிரிய நேர்ந்தால் கணவரிடம் முறைப்படி ஜீவனாம்சம் பெறும் தகுதியை மனைவி பெறுகிறார்.

தம்பதியின் உரிமைகள் (Restitution of Conjugal Rights)

சட்டப்படி திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகள் பரஸ்பர ஒற்றுமையுடன் வாழும் உரிமை பெறுகிறார்கள். எதிர்பாராத சூழ்நிலையில் கணவன், மனைவி இடையில் பிரச்னை வந்து தனித்தனியாக வாழும் நிலை ஏற்பட்டாலும், தம்பதியரில் யாரும் நீதிமன்றத்தை நாடி தங்களை ஒன்றாக வாழ உத்தரவிடும்படி முறையிடும் உரிமை பெற்றுள்ளனர்.

தவிர்க்க முடியாத நிலையில் நீதிமன்றம் மூலம் விவாகரத்து பெறலாம் (Judicial Separation and Divorce):


திருமணமான தம்பதியர் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் தனித் தனியாக வசிப்பதை Judicial Separation என்று கூறப்படுகிறது. அதே சமயத்தில் தம்பதியர் நிரந்தரமாக பிரிவதை விவாகரத்து என்று அழைக்கப்படுகிறது. தவிர்க்க முடியாத சூழ்நிலையில் தம்பதியரில் யாராவது ஒருவர் கீழ் காணும் காரணங்களை முன்வைத்து தனியாக பிரிந்து வாழ்வது அல்லது நிரந்தரமாக பிரிந்துவிட விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய முடியும்.

திருமணமான தம்பதிகள்:-

* கணவர் வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தாலோ அல்லது மனைவி வேறோரு ஆணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தால்

* தம்பதியரில் யாராவது ஒருவர் அதிகார தோரணையுடன் கொடுமைபடுத்தினால்

* இரண்டாண்டுகளுக்கு மேல் யாராவது ஒருவர் அடிமை தனத்துடன் நடந்துகொண்டால்

* தம்பதியரில் யாராவது ஒருவர் இந்து மதத்தை விட்டு வேறு மதத்தை பின்பற்றினால்

* தம்பதியரில் யாராவது மனநோயாளியாக பாதிக்கப்பட்டால், எய்ட்ஸ் உள்பட பாலின நோய் பெற்றிருந்தால், தொழுநோயால் பாதிப்பு அல்லது குணப்படுத்த முடியாத நோய் தாக்கும் பட்சத்தில்

* யாராவது உலக பற்றில்லாமல் வாழ்ந்தால், தம்பதியரில் யாராவது ஒருவர் மற்றொருவர் மீது திருமண விவகார உரிமையை மீண்டும் பெறுவதற்கு நீதிமன்றத்தில் டிகிரி பெற்றுகொண்டு பின் ஓராண்டு முடிந்தால் கணவர் அல்லது மனைவி ஆகிய இருவரில் ஒருவர் வேறொருவருடன் வாழ்ந்தால்

* தம்பதியரில் யாராவது ஒருவர் 7 ஆண்டுகள் காணாமல் போய் இருந்து, அவர் உயிருடன் இருக்கும் தகவல் உறுதியாக தெரியாத பட்சத்தில்

* நீதிமன்ற உத்தரவின் பேரில் யாராவது ஒருவர் ஓராண்டு பிரிந்து வாழ்ந்து வாந்தால்
மனைவிக்கு மட்டும் இருக்கும் கூடுதல் உரிமைகள்:-

* திருமணம் ஆனபின் கணவருக்கு ஏற்கனவே திருமணமாகி முதல் மனைவி உயிருடன் இருப்பது தெரிந்தால்

* கணவர் வேரு யாராவது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்திருந்தாலோ அல்லது சபல புத்தியுடன் திரிந்தாலோ

* எதிர்பாராத சூழ்நிலையில் கணவரிடம் ஜீவனாம்சம் அல்லது டிக்ரி நீதிமன்றத்தில் பெற்றுக்கொண்ட ஓராண்டு காலத்தில் தம்பதிகள் தாம்பத்திய வாழ்வில் ஈடுபடாமல் இருந்தால்

* திருமணம் செய்துகொண்ட சமயத்தில் 15 வயதிற்கும் குறைவாக இருக்கும் பட்சத்தில் 18 வயது நிரம்பும் வரை திருமணத்தை நிராகரிக்கலாம்.

தம்பதிகள் இருவர் விருப்பத்தின் பேரில் விவாகரத்து:-

திருமணமான தம்பதிகள் எதிர்பாராத சூழ்நிலையில் ஒன்றாக வாழவே முடியாது எனும் பட்சத்தில் அவர்கள் தங்களின் திருமண உறவை முறித்து கொள்ள முடியும். இருவரும் பிரிந்துவிட ஒன்றாக சுய விருப்பத்துடன் நீதிமன்றத்தில் விவாகரத்து மனு தாக்கல் செய்யலாம்.

* விவாகரத்து மனுவை திருமணமாகி ஓராண்டு முடிவதற்குள் தாக்கல் செய்ய முடியாது.

* விவாகரத்து பெற்றபின் இருபாலரும் தங்கள் விரும்புவோரை திருமணம் செய்து கொள்ளலாம்

* இந்து திருமண சட்டத்தின்படி திருமணமான தம்பதிகள் நீதிமன்றத்தின் மூலமே விவாகரத்து பெற முடியுமே தவிர, வேறு வழியில் விவாகரத்து பெற முடியாது. அப்படி பெற்றால் அது சட்டப்படி செல்லாது.

* தம்பதிகள் ஒன்றாக வாழ முடியாத நிலையில் விவாகரத்து பெறுவதாக எழுத்து மூலம் பத்திரம் எழுதி கொண்டு பிரிந்துவிடுவது சட்டபடியான விவாகரத்து என்று ஏற்றுகொள்ள முடியாது.

ஜீவனாம்சம் மற்றும் வழக்கு செலவு:-


தம்பதிகள் இடையில் மனகசப்பு ஏற்பட்டு இருவர் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்துவரும் சமயத்தில் தனது தேவைகளுக்காக கணவரிடம் ஜீவனாம்சம் பெறும் தகுதி மனைவிக்கு உள்ளது. மேலும் வழக்கு செலவுக்கான தொகையும் பெறலாம். இந்த சலுகை மனைவி வேறொருவரை திருமணம் செய்துகொள்ளும் வரை மட்டுமே வழங்க முடியும். வழக்கு காலத்தில் பெண் வேறொருவரை திருமணம் செய்து கொண்டால், ஜீவனாம்சம் பெறும் உரிமையை இழந்துவிடுகிறார்.

 இந்து திருமண சட்டம் 1955:*
இச்சட்டம் இந்துக்கள், ஜைனர்கள், பௌத்தர்கள் மற்றும் சீக்கியர்களுக்கும் பொருந்தும். இந்த சட்டத்தின்படி திருமணம் செய்து கொள்ளும் மணமக்கள் இருவரும் ஒரே மதத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். திருமணம் தடை செய்யப்பட்ட நெருக்கமான உறவு முறைக்குள் இருக்ககூடாது. அவர்கள் சார்ந்த சமூகத்தின் பழக்கவழக்கப்படி சடங்குகளை செய்து மணம் முடித்துக் கொள்ள வேண்டும். பொதுவாக ‘சப்தபதி’ அதாவது ஓமகுண்டத்தை சுற்றி ஏழாவது அடியை முடிக்கும் போது திருமணம் முடிவடைந்ததாக கருதப்படுகிறது.
*கிறிஸ்தவ திருமணச்சட்டம் 1872:*
இந்திய கிறிஸ்தவ திருமணச்சட்டம் 1872 மற்றும் இந்திய விவாகரத்து சட்டம் 1869 ஆகியவை கிறிஸ்தவர்களுக்கு பொருந்தும். இச்சட்டத்தின் படி, திருமணம் செய்து கொள்ளும் மணமக்களில் ஓருவரேனும் கிறிஸ்தவராக இருக்க வேண்டும். தேவாலயத்தில் அல்லது வெளியிடங்களில் கிறிஸ்தவ மதச்சடங்குகளை அனுசரித்து ஆலயப் பாதிரியார்கள் இவர்களுக்கு திருணம் செய்து வைக்கலாம். மாநில அரசால் நியமிக்கப்பட்ட கிறிஸ்தவ திருமண பதிவு அதிகாரிகள் முன்பு, திருமணத்தை பதிவு செய்து கொள்ளலாம். இப்படி திருமணம் செய்து கொள்பவர்கள் எழுத்து மூலம் அறிக்கை கொடுக்க வேண்டும். இருசாட்சிகள் முன்னிலையில் நிகழும் திருமணத்தில், மணமக்களில் ஒருவர் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்க வேண்டும். கிறிஸ்தவ திருமணங்கள் எங்கு நடந்தாலும் பதிவேடுகளில் பதிவு செய்யப்படுகிறது. இந்த பதிவின் சான்று மணமக்களுக்கு கொடுக்கப்படுகிறது.
*
முஸ்லிம் திருமணங்கள்:*
முஸ்லிம் திருமணங்கள் ஒரு ஒப்பந்தமாகவே கருதப்படுகிறது. திருமணத்தை ‘நிக்கா’ என்றும், திருமண ஒப்பந்தத்தை ‘நிக்காநாமா’ என்றும் படிவத்தில் பதிவு செய்கிறார்கள். இத்திருமணத்தின் போது ஒரு தரப்பினர் திருமணத்தை முன்மொழிய வேண்டும். இன்னொரு தரப்பினர் இதை ஒத்துக்கொள்ள வேண்டும். இரண்டும் ஒரே நேரத்தில் நடைபெற வேண்டும்.
திருமணத்தின் போது மணமகளுக்கு மணமகனால் ஒரு குறிப்பிட்ட தொகை கொடுக்கப்படும். இதற்கு ‘மொஹர்’ என்று பெயர். இந்த மொஹர் தொகை திருமணப்பதிவேட்டிலும், நிக்காநாமாவிலும் எழுதி வைக்கப்படும்.
*
சிறப்பு திருமணசட்டம்:*
மதத்தின் அடிப்படையில் இல்லாமல் எந்தமதத்தை, சாதியை சேர்ந்தவராக இருந்தாலும் எந்தவித தங்கு தடையும் இல்லாமல் சிறப்பு திருமணம் செய்து கொள்ளலாம். இந்த சட்டப்படி திருமணம் செய்து கொள்ள விரும்பும் மணமக்கள், தாங்கள் வசிக்கும் இடத்திற்கு அருகில் உள்ள திருமணப் பதிவாளரிடம் பெயர், வயது, முகவரி ஆகிய விபரங்களுடன் திருமண அறிவிப்பை கொடுக்க வேண்டும். அப்படி அறிவிப்பு கொடுப்பவர் 30நாட்களுக்கு முன், அந்த பதிவாளர் அலுவலகம் இருக்கும் பகுதியில் குடியிருந்திருக்க வேண்டும். அந்த அறிவிப்பை பொதுமக்கள் பார்க்ககூடிய இடத்தில் பதிவாளர், பார்வைக்கு வைப்பார்.
இத்திருமணத்திற்கு ஆட்சேபம் தெரிவிப்பவர்கள், அறிவிப்பு வெளியிடப்பட்ட 30நாட்களுக்குள் பதிவாளரிடம் தெரிவிக்க வேண்டும். 30தினங்களுக்குள் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கப்படவில்லை என்றால் பதிவாளர் திருமணத்தை பதிவு செய்யலாம். மணமக்களும், 3சாட்சிகளும் திருமணப்பதிவேட்டில் கையொப்பம் இட்டவுடன் திருமணம் பூர்த்தியாகிவிடும்.
*
சுயமரியாதை திருமணம்:*
மதச்சடங்குகள் இல்லாமல் செய்து கொள்ளும் திருமணமே சுயமரியாதை திருமணம் அல்லது சீர்திருத்த திருமணமாகும். சுயமரியாதை திருமணத்தை செல்லுபடி ஆக்குவதற்காக இந்து திருமணசட்டம் 7ஏல் திருத்தம், 1967ல் கொண்டுவரப்பட்டது. நண்பர்கள், உறவினர்கள் முன்னிலையில் சுயமரியாதை திருமணம் செய்து கொள்ளலாம். மணமக்கள் தாம் ஒருவரை கணவன் அல்லது மனைவியாக ஏற்றுக்கொள்கிறோம் என்று தனக்கு தெரிந்த மொழியில் உறுதிமொழி ஏற்க வேண்டும். வேறு சடங்குகள் அவசியமில்லை.
தமிழ்நாட்டில் உள்ள இந்துக்களுக்கு மட்டுமே இது பொருந்தும். பெரியவர்கள், உற்றார் உறவினர்கள் முன்னிலையில் உறுதிமொழி எடுத்தும் சுயமரியாதை திருமணம் செய்து கொள்ளலாம்.



தம்பதிகள் விவாகரத்து பெறுவது என உறுதியாக முடிவு செய்த பின்னர், அந்த மனுவை குறிப்பிட்ட நாளில் தாக்கல் செய்வது எதிர்பார்க்கும் பலனைத் தரும். குறிப்பாக சனி ஓரை, செவ்வாய் ஓரைகளில் விவகாரத்து மனுவை தாக்கல் செய்யலாம்.

அதேபோல் 6வது வீட்டில் பாவ கிரகங்கள் இருக்கும் போதும், சந்திரன் இருக்கும் போதும் விவாகரத்து மனுவில் கையெழுத்திடுவதும், அன்றைய தினத்தில் மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதும் விரைவாக விவாகரத்து பெற உதவும்.

ஜாதகருக்கு என்ன தசா புக்தி நடக்கிறது என்பதைப் பார்த்து விட்டு அதற்கு தகுந்தது போல் வழக்கறிஞரை நியமிக்க வேண்டும். உதாரணமாக மூத்த வழக்கறிஞரிடம் வழக்கை அளித்தால் உடனடிப் பலன் கிடைக்குமா? அல்லது இளம் வழக்கறிஞரிடம் சென்றால் விரைவாக விவாகரத்து கிடைக்குமா? என்பதைக் கூட கணித்து விட முடியும்.

ஒரு சிலருக்கு பெண் வழக்கறிஞர் வாதாடினால் நிச்சயமான பலன்கள் கிடைக்கும் என்று கூறுகிறோம். அவர்களது ஜாதகத்தில் சில கிரகங்கள் சிறப்பாக இல்லாததால் இப்படிக் கூறுவோம். அவர்கள் ஆண் வழக்கறிஞரிடம் சென்றால் நீண்ட இழுபறிக்கு பின்னரே விவாகரத்து கிடைக்கும். இதற்கு பெண் ஆதிக்க கிரகங்களின் தன்மையை ஆராய வேண்டும்.


திருமண சட்டத்திருத்த மசோதா, கடந்த 2010ல், ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர், இந்த மசோதா சட்டம் மற்றும் நீதித்துறைக்கான பார்லிமென்ட் நிலைக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது. இதை பரிசீலித்த நிலைக் குழு, இந்த மசோதாவில் நான்கு திருத்தங்களை செய்யும்படி பரிந்துரை செய்துள்ளது. இதற்கு ஏற்ப, மசோதாவை மாற்றி அமைக்க, மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, பிரிந்த தம்பதியர் விரைவில் விவாகரத்து பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.தற்போது, பிரிந்த தம்பதியர் பரஸ்பரம் விவாகரத்து கோரி விண்ணப்பித்தால், குறைந்தபட்சம் ஆறு மாதம் முதல் 18 மாதங்கள் வரை, அவர்கள் விவாகரத்து பெற காத்திருக்க வேண்டும். இனி அந்த நிலைமை இருக்காது. "

இனி சேர்ந்து வாழவே முடியாத திருமணம்' என்ற புதிய விதிமுறை, சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளதால், பிரிந்தவர்கள் விரைவில் விவாகரத்து பெற்று விட முடியும். அவர்கள் இனி ஒன்று சேர முடியாது என, கோர்ட் தீர்மானித்தால், உடனடியாக விவாகரத்து வழங்கலாம். இதன் மூலம், ஆறு மாதம் முதல் 18 மாதம் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படாது. பரஸ்பரம் விவாகரத்து கோரி விண்ணப்பித்தால், உடனே கிடைக்கும்.இதே போல, "சேரவே முடியாது' என்ற புதிய பிரிவின்படி, கணவன் விவாகரத்து கேட்டால், அதை எதிர்க்க, மனைவிக்கு உரிமை உண்டு. ஆனால், மனைவி இதே காரணத்திற்காக விவாகரத்து கோரும் போது, அதை எதிர்க்க கணவனுக்கு உரிமை இல்லை.

1 comment:

  1. தெரிந்த விஷயம் தான். ஆனாலும், இந்த தலைப்பு எனக்கு பிடிக்கவில்லை. விவாகம்+ரத்து = விவாகரத்து. Why?

    All is well that ends well.

    ReplyDelete