jaga flash news

Tuesday 21 April 2015

சந்திராஸ்டமம் சிறு விளக்கம்

சந்திராஸ்டமம் சிறு விளக்கம்
கோட்சாரத்தில் ராசிக்கு 8ல் சந்திரன் வரும்போது சந்திராஸ்டமம்தான்,
அப்போது கண்டிப்பாக, மன நிலை கோபமாக அல்லது வருத்தமாக மேலும் குழப்பமாக இருக்கும், அதனால் புதிய முடிவு அதிக தூரம் பயணம் கூடாது,
சந்திராஸ்டமத்தை மறுப்பவர்கள், உங்களுக்கு சந்திராஸ்டமம் நடக்கும் போது புதிதாக ஒரு விசயத்தை முடிவு செய்து, செயல்படுத்தி பாருங்கள் அப்போது புரியும்,
நீங்கள் அதிக தூரம் பயணம் செய்து பாருங்கள், அப்போது புரியும்,
மேலும் சந்திராஸ்டமம் நடக்கும்போது, காதலிப்பவர்கள் உங்கள் காதலை சொல்லிப்பாருங்கள் புரியும்,
அன்று
இன்டர்வ்யூ இருந்தால் சென்று பாருங்கள் புரியும்,
இதில் தவறு இருந்தால் உங்கள் ராசி தவறாக கூட கணிக்கப்பட்டு இருக்கலாம், அதனால் அதை சரிபாருங்கள்,
சந்திர திசை, அல்லது சந்திர புத்தி, அல்லது சந்திர அந்தரம் நடந்தால் சந்திராஸ்டமம் பாதிப்பு இல்லை என்று நானும் புத்தகங்களில் படித்துள்ளேன், ஆனால் அது எனது அனுபவத்திற்கு சரியாக வரவில்லை,
மேலும் கோட்சாரத்தில் ராசிக்கு 8ஆம் வீட்டிற்கு குரு பார்வை இருந்தால், சந்திராஸ்டமம் பாதிப்பு இல்லை என்றும் புத்தகங்களில் படித்துள்ளேன்,
தற்போது கோட்சாரத்தில் கடகம் ராசியில் இருக்கும் குருபகவான், விருச்சிகம், மகரம், மீனம் ராசிகளை பார்க்கிறார்,
அதனால், தற்போது மேஷம், மிதுனம், சிம்மம் ராசிக்கு சந்திராஸ்டமம் நடந்தால் பாதிப்பு இல்லையா? ,பாதிப்பு உண்டு, ஆனாலும் குரு பார்வை இருப்பதால் அதில் ஓரளவு நன்மையும் உண்டு,
நன்றாக கவனியுங்கள், தற்போது கோட்சாரத்தில் மேஷம், மிதுனம் சிம்மம் ராசிகளில், மிதுனம் ராசிக்கு மட்டுமே குரு சாதகமாக உள்ளார், அதனால், தற்போது மிதுனம் ராசிக்கு மட்டுமே குருப்பார்வையோடு இருக்கும் சந்திராஸ்டமம் அதகமான பாதிப்பு இல்லை, ஆனாலும் பாதிப்பு இல்லாமல் இருக்காது, பாதிப்பின் அளவு குறைவாக இருக்கும்,
ஜாதகத்தில் சந்திரன் ஆட்சி, உச்சம், மூலதிரிகோணம், நட்பு,சமம், நீசம் என எந்த நிலையில் இருந்தாலும், சந்திராஸ்டமம் நடக்கும்போது பாதிப்பு உண்டு...!!!
சந்திராஸ்டமம் நடக்கும்போது,
வணங்க வேண்டிய தெய்வங்கள் :- என்னதான் சந்திரன் மனக்காரஹன் என்றாலும், அனைவருக்கும் மன உளைச்சல் ஏற்படுத்துவது கேது தான்,
சந்திராஸ்டமம் நடக்கும்போது மன ரீதியாக தான் அதிக பாதிப்பு அதனால் விநாயகர் வழிபாடு, மேலும் 8ஆம் அதிபதியின் அதி தேவதை, சந்திரனின் அதி தேவதையான பார்வதி தேவி வழிபாடு, கேதுவின் அதி தேவதையான இந்திரன் வழிபாடு,
மேலும் 8ஆம் வீட்டில் சந்திரன் எந்த நட்சத்திர சாரத்தில் செல்கிராறோ அந்த நட்சத்திர அதிபதியின் வழிபாடு,
இங்கே சொல்லப்பட்ட எல்லா வழிபாடும் செய்ய வேண்டியதில்லை,
உங்களால் முடிந்ததை செய்யுங்கள்...!!!
இன்னொரு முக்கியமான. விசயம்,
8ல் சந்திரன் எந்த நட்சத்திரத்தில் செல்கிராறோ, அந்த நட்சத்திர அதிபதி, கோட்சாரத்தில் ராசிக்கு சாதகமான இடங்களில் இருந்தால், சந்திராஸ்டமம் பாதிப்பு குறைவு...!!!
இது தான் எனது அனுபவத்தின் சந்தராஸ்டமம் பற்றிய சிறு விளக்கம்,

No comments:

Post a Comment