jaga flash news

Saturday, 25 April 2015

மனோரீதியிலான இறைவழிபாடு..........

குடிப்பழக்கத்தில் இருந்து விடுபடுவது மனோரீதியிலான விஷயம் இருந்தாலும் இறைவழிபாடும் சேர்ந்து கை கொடுத்தால்தான்
இந்த தீயபழக்கத்தில் இருந்து விடுபடமுடியும்.

திருவெண்காடு ஆலயத்தின் தனிச்சிறப்புக்கு உரியவர் அகோர மூர்த்தி. இவர் மருத்துவாசுரனை அடக்குவதற்காக சிவனின் ஈசான்ய முகத்திலிருந்து தோன்றியவர். இவரது வீரக் கோலம் இங்கு சிறப்பாக இருக்கிறது.

சிவபெருமான் தன் பக்தர்கள் பொருட்டு 64 வித உருவங்களில் காட்சியளித்து வருகிறார்.இது 43 வது உருவம் ஆகும்.இறைவனின் வீரச் செறிவை காட்டும் கோலம்.பெயரில் சற்று கடுமை இருந்தாலும் அருள் நிலையில் இந்த மூர்த்தி உள்ளார். மூலவரைப் போலவே உற்சவரும், நடப்பவர் ஒருவர் இடது காலை முன்வைத்து எப்படி வலது காலைப் பெயர்த்து அடியெடுத்து வைக்க முனைவாரோ அதே போல் பெருமான் தன் நடையழகைக் காட்டும் விதமாக உள்ளார் என்பது சிறப்பு.
அட்ட வீரட்டதலங்களில் இத்தலம் சேராவிட்டாலும் சிவபெருமானின் வீரச்செயல் நிகழ்ந்த தலம் இது.இந்த அகோர மூர்த்தியை திருவெண்காடு தலத்தை தவிர்த்து வேறு எங்கும் கண்டு விட முடியாது.

குடி பழக்கத்திற்கு அடிமையான ஒவ்வொருவரும் வளர் பிறை திங்கள் அன்று விரதம் இருந்து இந்த திரு தளத்திற்கு சென்று முக்குள நீராடி அகோர மூர்த்தி சன்னதியில் 108 நெய் விளக்கேற்றி வழிபாடு செய்வோருக்கு நிச்சயம் நல்ல வழி பிறக்கும், அன்றைய தினத்திலிருந்து ஜாதகருக்கு அறிவில் விழிப்புணர்வு ஏற்பட்டு இந்த தீமை பழக்கத்திலிருந்து விடுதலை நிச்சயம் கிடைக்கும் . இந்த வழிபாடு செய்வதற்கு நிறைய தடைகள் ஏற்படலாம் , கடுமையான முயற்சி மேற்கொண்டு வழிபாடு செய்து தங்களின் வாழ்க்கையில் நலம் பெறலாம்.

No comments:

Post a Comment