jaga flash news

Tuesday 1 March 2016

கருப்பட்டியின் பயன்கள்

கருப்பட்டியின் பயன்கள்:
பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத்தால்… இடுப்பு வலுப்பெருவதுடன், கருப்பையும் ஆரோக்கியமாக இருக்கும்.
சீரகத்தை வறுத்து சுக்குக்கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால், நன்கு பசி எடுக்கும். ஓமத்தை கருப்பட்டியுடன் சேர்த்துச் சாப்பிட்டால் வாயுத்
தொல்லை நீங்கும்.
குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் வறட்டு இருமல், நாள்பட்ட சளித்தொல்லை நீங்கும்.
ஆண்மையை வீரியப்படுத்துவதிலும் கருப்பட்டிக்கு தனிப்பங்கு உண்டு. காபிக்கு சீனிக்கு பதிலாக கருப்பட்டிப் போட்டுக் குடித்தால்… உடலில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாடாக இருக்கும். சர்க்கரை நோயாளிகளும் கூட கருப்பட்டி காபி குடிக்கலாம். இதில் சுண்ணாம்புச் சத்தும், நோய் எதிப்பு சக்தியும் அதிகமாக இருக்கிறது.
சர்க்கரை நோயாளிகள், கைக்குத்தல் அரிசி சாதத்துடன் கருப்பட்டியைக் கலந்து சாப்பிட்டு வந்தால்… சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருப்பதுடன், அடிக்கடி சிறுநீர் போவதும் குறையும். கருப்பட்டி பணியாரம் குழந்தைகளுக்கு ஏற்றது.

1 comment:

  1. இப்போ தானே சீனி. அந்தகாலத்தில், கருப்புக்கட்டி தானே பயன்படுத்துவோம். கருப்புக்கட்டியில் தானே காப்பியே. இப்படி எதற்கெடு்தாலும், கருப்புக்கட்டியைதான் உபயோகப்படுத்துவோம். ஆகையால் தான் அந்த காலத்தவர்கள், திடமாக இருந்தார்கள் என்று கூட சொல்லலாம்.

    சளிக்கு நல்ல மருந்து:~

    சுக்கு, மிளகு, திப்பிலி, அதிமதுரம், சாரணவேர், கருஞ்சீரகம், ஓமம் ஆகியவற்றை (திப்பிலி அதிகம் சேர்க்க் கூடாது) அளவோடு எடுத்து, சிறிய துண்டு தேங்காயும் சேர்த்து, நைசாக அம்மியில் வைத்து அரைத்து, அடுப்பில் சிறிது தண்ணீர் ஊற்றி, கருப்புக்கட்டியை பொடித்துப் போட்டு வைத்து, கிளறி, இறக்கும் போது,ஒரு முட்டையை அதில் உடைத்து ஊற்றி, ஆறவைத்து கொடுத்தால், சளி முறிந்துவிடும். இதை அனைவருமே சாப்பிடலாம்.இதைவிட நல்ல மருந்து வேறொன்றுமில்லை என்றே சொல்லலாம். இது தெரியாமல், சிலர்
    கண்டங்கத்தரி, தூதுவளை(கற்பூரவல்லி), துளசி, என்று குடிநீர் வைத்து கொடுக்கிறார்கள். இதைவிட மேற்கூறியவை சிறந்த மருந்தாக எடுத்துக் கொள்ளலாம்.

    ReplyDelete