சிவனுக்கு மல்லிகை பூ அர்ச்சனை செய்யுங்கள்
🌼சிவனை பத்துக்கோடி மலர்களால்
அர்ச்சனை செய்பவர்கள் ராஜயோகம்
பெறுவார்கள்.
அர்ச்சனை செய்பவர்கள் ராஜயோகம்
பெறுவார்கள்.
🌼ஐந்து கோடி மலர்கள்
அர்ச்சனை செய்தால் முக்தி பெறலாம்.
அர்ச்சனை செய்தால் முக்தி பெறலாம்.
🌼ஒருகோடி மலர்களால் அர்ச்சனை செய்தால்
ஞானம் பெறலாம்.
ஞானம் பெறலாம்.
🌼 அரைக் கோடி மலர்களால்
அர்ச்சனை செய்து ம்ருத்யுஞ்ஜய
மந்திரத்தை ஐந்து லட்சம் தடவை ஜபித்தால்
சிவன் அருள் கிடைக்கும்.
அர்ச்சனை செய்து ம்ருத்யுஞ்ஜய
மந்திரத்தை ஐந்து லட்சம் தடவை ஜபித்தால்
சிவன் அருள் கிடைக்கும்.
🌼லட்சம் அருகம்புல் அர்ச்சித்தால் தீர்க்காயுள்
ஏற்படும்.
ஏற்படும்.
🌼 லட்சம்
கரு ஊமத்தையை கொண்டு அர்ச்சனை செய்தால்
குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
கரு ஊமத்தையை கொண்டு அர்ச்சனை செய்தால்
குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
🌼லட்சம் கரவீர
புஷ்பத்தால் அர்ச்சனை செய்தால் நோய்கள்
நிவர்த்தியாகும்.
புஷ்பத்தால் அர்ச்சனை செய்தால் நோய்கள்
நிவர்த்தியாகும்.
🌼லட்சம் மல்லிகை பூக்களால்
அர்ச்சனை செய்தால் அழகிய
மனைவி கிடைப்பாள்.
அர்ச்சனை செய்தால் அழகிய
மனைவி கிடைப்பாள்.
🌼ஐம்பதினாயிரம் மலர்களால் அர்ச்சித்தால்
வியாதிகள் நிவர்த்தியாகும்.
வியாதிகள் நிவர்த்தியாகும்.
🌼பன்னீராயிரத்து ஐந்நூறு மலர்களால்
அர்ச்சனை செய்தால் கல்வி, கேள்விகளில்
சிறந்தவனாவான்.
அர்ச்சனை செய்தால் கல்வி, கேள்விகளில்
சிறந்தவனாவான்.
🌼பத்தாயிரம் மலர்களால்
அர்ச்சிக்க சத்ருபயம் நீங்கப் பெறுவார்கள்
அர்ச்சிக்க சத்ருபயம் நீங்கப் பெறுவார்கள்
🌼என்று சிவபுராணம் கூறுகிறது🌼.
*சிவ புராணம்* என்றாலே நாவில் தேனூறும். ஏனென்றால் மாணிக்கவாசகர், திருவாசகத்தின் வாயிலாக, நம் எம்பெருமானை அழகாக வாழ்த்துகிறார்.
ReplyDeleteநமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் − தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க − ஏகன் அனேகன் இறைவன் அடி வாழ்க. என்று பாடினார்.
பொருள்: *நமச்சிவாய* வாழ்க. நாதன் திருவடி வாழ்க. கண்ணிமைக்கும் நேர
மும், என் நெஞ்சம் பிரியாதவனுடைய திருவடி வாழ்க. திருவாவடுதுறை ஆண்டருளும் குருவாகிய மாணிக்கத்தின் திருவடி வாழ்க ஒருவனாகியும், பலவுருக்கொண்டும், இருக்கும் இருக்கும் இறைவனின் திருவடி வாழ்க என்று, மாணிக்கவாசகர் எவ்வளவு அழகாக சிவபெருமானை புகழ்ந்திருக்கிறார்.
சிவம் வாழ்க என்றுகூடத் துவங்காமல், வணக்கத்திற்குரிய *நம* முதலில் கூறி, இறைவனின் *சிவ* என்ற திருநாமத்தைச் சொல்வது, இறைவன்பால் கொண்ட பணிவும், அன்புமே.
மாணிக்கவாசகர், தம்முடைய திருவாசகத்தின் முதல் ஒலியாக *நமச்சிவாய* என்ற திருஐந்தெழுத்தை சொன்னது மிகவும் இனியது என்று சிவபுராணத்தின் புகழைச் சொல்லிக் கோண்டே போகலாம்...
Mon. 9, June, 2025 at 2.47 pm.
ReplyDelete1. சிவபுராணம்
சிவனது அநாதி முறைமையான
பழைமை.
திருச்சிற்றம்பலம்
நமச்சிவாய வாஅழ்க ! நாதன்தாள் வாழ்க !
இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க !
கோகழி ஆண்ட குருமணிதன் தாள்வாழ்க !
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள்வாழ்க !
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க
2. வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க
புறத்தார்க்குச் சேயோன்தன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழுங் கோன்கழல்கள் வெல்க
சிரங்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல்வெல்க − 10
3. ஈசன் அடிபோற்றி எந்தை அடி போற்றி
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
மாயப் பிறப்பறுக்கும் மன்னன் அடிபோற்றி
சீரார் பெருந்துறைநம் தேவன் அடிபோற்றி − 15
4. ஆராத இன்பம் அருளும் மலைபோற்றி
சிவன்அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன்தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவபுராணந் தன்னை
முந்தை வினைமுழுதும் மோய உரைப்பன்யான் − 20
5, கண்நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி
எண்ணுதற்கு எட்டா எழில்ஆர் கழல்இறைஞ்சி
விண்நிறைந்து மண்நிறைந்து மிக்காய் விளங்குஒளியாய்
எண்ணிறந்து எல்லை இலாதானே நின்பெருஞ்சீர்
பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றறியேன் − 25
6. புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரம் ஆகிப்
பல்விருகம் ஆகிப் பறவையாய்ப் பாம்புஆகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லா அ நின்ற இத்தாவர சங்கமத்துள் − 30
7. எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன் எம்பெருமான்
மெய்யேஉன் பொன்அடிகள் கண்டுஇன்று வீடுற்றேன்
உய்யஎன் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா என ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே − 35
8. வெய்யாய் தணியாய் இயமானனாம் விமலா
பொய்ஆயின எல்லாம் போய்அகல வந்தருளி
மெய்ஞ்ஞானம் ஆகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்அறிவே − 40
9. ஆக்கம் அளவுஇறுதி இல்லாய் அனைத்துஉலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே
மாற்றம் மனம்கழிய நின்ற மறையோனே − 45
10. கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்துஅடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று
பிறந்த பிறப்புஅறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்கள் ஓர் ஐந்துடையாய் விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் தன்னை − 50
11. மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அருங்கயிற்றால் கட்டிப்
புறந்தோல் போர்த்துஎங்கும் புழுஅழுக்கு மூடி
மலஞ்சோறும் ஒன்பது வாயிற் குடிலை
மலங்கப் புலன்ஐந்தும் வஞ்சனையைச் செய்ய − 55
12. விலங்கு மனத்தால் விமலா உனக்குக்
கலந்த அன்பாகிக் கசிந்து உள்உருகும்
நலந்தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலந்தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காட்டி
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் − 60
13. தாயிற் சிறந்த தயாவான தத்துவனே
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேனார் அமுதே சிவபுரனே
பாசமாம் பற்றுஅறுத்துப் பாரிக்கும் ஆரியனே
நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் − 65
14. பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே
ஆறா அமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே − 70
15. அன்பருக்கு அன்பனே யாவையுமாய் அல்லையுமாம்
சோதியனே துன்இருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுஆகி அல்லானே
ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்தமெய்ஞ் ஞானத்தால் கொண்டுணர்வார் தங்கருத்தின் −75
16. நோக்குஅரிய நோக்கே நுணுக்கரிய நுண்உணர்வே
போக்கும் வரவும் புணர்வும்இலாப் புண்ணியனே
காக்கும்எம் காவலனே காண்பரிய பேர்ஒளியே
ஆற்றின்ப வெள்ளமே அத்தாமிக்காய் நின்ற
தோற்றச் சுடர்ஒளியாய்ச் சொல்லாத நுண்உணர்வாய் − 80
17. மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவே என்சிந்தனையுள்
ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
வேற்று விகார விடக்குடம்பின் உட்கிடப்ப
ஆற்றேன் எம்ஐயா அரனே ஓ
என்றுஎன்று − 85
18. போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்யானார்
மீட்டுஇங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பைக் கட்டுஅழிக்க வல்லானே
நள்இருளில் நட்டம் பயின்றுஆடும் நாதனே
தில்லையுள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே −90
19. அல்லற் பிறவி அறுப்பானே ஓஎன்று
சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச்
சொல்லிய பாட்டின் பொருள்உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன்அடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து. − 95
திருச்சிற்றம்பலம்
Jansikannan438@gmail.com.
Mon. 9, June, 2025 at 4.49 pm.
ReplyDeleteதிருவாசகம்
தில்லையில் அருளியது
கீர்த்தித் திருவகவல்
திருச்சிற்றம்பலம்
1. தில்லை மூதூர் ஆடிய திருவடி
பல்உயிர் எல்லாம் பயின்றனன் ஆகி
எண்ணில் பல்குணம் எழில்பெற விளங்கி
மண்ணும் விண்ணும் வானோர் உலகும்
துன்னிய கல்வி தோற்றியும் அழித்தும் − 5
2. என்னுடை இருளை ஏறத் துரந்தும்
அடியார் உள்ளத்து அன்பு மீதூரக்
குடியாக் கொண்ட கொள்கையும் சிறப்பும்
மன்னும் மாமலை மகேந்திரம் அதனில்
சொன்ன ஆகமம் தோற்றுவித் தருளியும் − 10
3) கல்லாடத்துக் கலந்து இனிது அருளி
நல்லா ளோடு நயப்புறவு எய்தியும்
பஞ்சப் பள்ளியில் பால்மொழி தன்னொடும்
எஞ்சாது ஈண்டும் இன்னருள் விளைத்தும்
கிராத வேடமொடு கிஞ்சுக வாயவள் − 15
4. விராவு கொங்கை நல்தடம் படிந்தும்
கேவேடர் ஆகிக், கெளிறுஅது படுத்தும்
மாவேட்டு ஆகிய ஆகமம் வாங்கியும்
மற்றுஅவை தம்மை மகேந்திரத்து இருந்து
உற்ற ஐம்முகங்களால் பணித்து அருளியும் − 20
5. நந்தம் பாடியில் நான்மறை யோனாய்
அந்தம்இல் ஆரியனாய் அமர்ந் தருளியும்
வேறுவேறு உருவும் வேறுவேறு இயற்கையும்
நூறு நூறு ஆயிரம் இயல்பினது ஆகி
ஏறுடை ஈசன் இப்புவனியை உய்யக் − 25
6. கூறுடை மங்கையும் தானும் வந்தருளிக்
குதிரையைக் கொண்டு குடநாடு அதன்மிசை
சதுர்படச் சாத்தாய்த் தான் எழுந்தருளியும்
வேலம் புத்தூர் விட்டேறு அருளிக்
கோலம் பொலிவு காட்டிய கொள்கையும் − 30
7. தர்ப்பணம் அதனில் சாந்தம் புத்தூர்
வில்பொரு வேடற்கு ஈந்த விளைவும்
மொக்கணி அருளிய முழுத்தழல் மேனி
சொக்கு அதுஆகக் காட்டிய தொன்மையும்
அரியொடு பிரமற்கு அளவுஅறி ஒண்ணான் − 35
8. நரியைக் குதிரை ஆக்கிய நன்மையும்
ஆண்டுகொண்டு அருள அழகூறு திருவடி
பாண்டியன் தனக்குப் பரிமா விற்று
ஈண்டு கனகம் இசையப் பெறாஅது
ஆண்டான் எங்கோன் அருள்வழி இருப்பத் − 40
9. தூண்டு சோதி தோற்றிய தொன்மையும்
அந்தணன் ஆகி ஆண்டுகொண் டருளி
இந்திர ஞாலம் காட்டிய இயல்பும்
மதுரைப் பெருநன் மாநகர் இருந்து
குதிரைச் சேவகன் ஆகிய கொள்கையும் − 45
10. ஆங்குஅது தன்னில் அடியவட்கு ஆகப்
பாங்காய் மண்சுமந் தருளிய பரிசும்
உத்தர கோச மங்கையுள் இருந்து
வித்தகம் வேடம் காட்டிய இயல்பும்
பூவணம் அதனில் பொலிந்திருந்து அருளித் − 50
11. தூவண மேனி காட்டிய தொன்மையும்
வாத வூரினில் வந்துஇனிது அருளிப்
பாதச் சிலம்புஒலி காட்டிய பண்பும்
திரூவார் பெருந்துறைச் செல்வன் ஆகிக்
கருவார் சோதியிற் கரந்த கள்ளமும் − 55
12. பூவலம் அதனில் பொலிந்து இனிதுஅருளிப்
பாவ நாசம் ஆக்கிய பரிசும்
தண்ணீர்ப் பந்தர் சயம்பெற வைத்து
நன்னீர் சேவகன் ஆகிய நன்மையும்
விருந்தினன் ஆகி வெண்காடு அதனில் − 60
13. குருந்தின் கீழ்அன்று இருந்த கொள்கையும்
பட்ட மங்கையிற் பாங்காய் இருந்துஅங்கு
அட்டமா சித்தி அருளிய அதுவும்
வேடுவன் ஆகி வேண்டுருக் கொண்டு
காடுஅது தன்னில் கரந்த கள்ளமும்
− 65
14. மெய்க் காட்டிட்டு வேண்டுருக் கொண்டு
தக்கான் ஒருவன் ஆகிய தன்மையும்
ஓரி ஊரில் உகந்தினிது அருளிப்
பார்இரும் பாலகன் ஆகிய பரிசும்
பாண்டூர் தன்னில் ஈண்ட இருந்தும்
− 70
15. தேவூர்த் தென்பால் திகழ்தரு தீவில்
கோவார் கோலம் கொண்ட கொள்கையும்
தேன்அமர் சோலைத் திருவா ரூரில்
ஞானம் தன்னை நல்கிய நன்மையும்
இடைமருது அதனில் ஈண்ட இருந்து
− 75
16. படிமப் பாதம் வைத்தஅப் பரிசும்
ஏகம் பத்தின் இயல்பாய் இருந்து
பாகம் பெண்ணோடு ஆயின பரிசும்
திருவாஞ் சியத்தில் சீர்பெற இருந்து
மருவார் குழலியொடு மகிழ்ந்த வண்ணமும் − 80
17. சேவகன் ஆகித் திண்சிலை ஏந்திப்
பாவகம் பலபல காட்டிய பரிசும்
கடம்பூர் தன்னில் இடம்பெற இருந்தும்
ஈங்கோய் மலையில் எழில்அது காட்டியும்
ஐயாறு அதனில் சைவன் ஆகியும்
− 85
18. துருத்தி தன்னில் அருத்தியோடு இருந்தும்
திருப்பனையூரில் விருப்பன் ஆகியும்
கழுமலம் அதனிற் காட்சி கொடுத்தும்
கழுக்குன்று அதனில் வழுக்காது இருந்தும்
புறம்பயம் அதனில் அறம்பல அருளியும் − 90
19. குற்றா லத்துக் குறியாய் இருந்தும்
அந்தம்இல் பெருமை அழல்உருக் கரந்து
சுந்தர வேடத்து ஒருமுதல் உருவுகொண்டு
இந்திர ஞாலம் போலவந்து அருளி
எவ்வெவர் தன்மையும் தன்வயிற் படுத்துத் − 95
20. தானே ஆகிய தயாபரன் எம்இறை
சந்திர தீபத்துச் சாத்திரன் ஆகி
அந்தரத்து இழிந்துவந்து அழகுஅமர் பாலையுள்
சுந்தரத் தன்மையொடு துதைந்து இருந்துஅருளியும்
மந்திர மாமலை மகேந்திர வெற்பன் − 100
21. அந்தம்இல் பெருமை அருள்உடை அண்ணல்
ReplyDeleteஎம்தமை ஆண்ட பரிசுஅது பகரின்
ஆற்றல் அதுஉடை அழகுஅமர் திருஉரு
நீற்றுக் கோடி நிமிர்ந்து காட்டியும்
ஊனம் தன்னை ஒருங்குடன் அறுக்கும் − 105
22. ஆனந் தம்மே ஆறா அருளியும்
மாதிற் கூறுடை மாப்பெருங் கருணையன்
நாதப் பெரும்பறை நவின்று கறங்கவும்
அழுக்கு அடையாமல் ஆண்டுகொண்டு அருள்பவன்
கழுக்கடை தன்னைக் கைக்கொண்டு அருளியும் − 110
23. மூலம் ஆகிய மும்மலம் அறுக்கும்
தூய மேனிச் சுடர்விடு சோதி
காதலன் ஆகிக் கழுநீர் மாலை
ஏல்உடைத்து ஆக எழில்பெற அணிந்தும்
அரியொடு பிரமற்கு அளவு அறியாதவன் − 115
24. பரிமா வின்மிசைப் பயின்ற வண்ணமும்
மீண்டு வாரா வழிஅருள் புரிபவன்
பாண்டி நாடே பழம்பதி ஆகவும்
பத்திசெய் அடியரைப் பரம்பரத்து உய்ப்பவன்
உத்தர கோச மங்கைஊர் ஆகவும்
− 120
25. ஆதி மூர்த்திகட்கு அருள்புரிந் தருளிய
தேவ தேவன் திருப்பெயர் ஆகவும்
இருள்கடிந் தருளிய இன்ப ஊர்தி
அருளிய பெருமை அருள்மலை ஆகவும்
எப்பெருந் தன்மையும் எவ்வெவர் திறமும் − 125
26. அப்பரிசு அதனால் ஆண்டுகொண் டருளி
நாயி னேனை நலமலி தில்லையுட்
கோல மார்தரு பொதுவினில் வருகஎன
ஏல என்னை ஈங்கு ஒழித்தருளி
அன்றுடன் சென்ற அருள்பெறும் அடியவர் − 130
27. ஒன்ற ஒன்ற உடன்கலந் தருளியும்
எய்த வந்திலாதார் எரியிற் பாயவும்
மால் அதுவாகி மயக்கம் எய்தியும்
பூதலம் அதனிற் புரண்டு வீழ்ந்து அலறியும்
கால்விசைத்து ஓடிக் கடல்புக மண்டி
− 135
28. நாத நாத என்று அழுதுஅரற்றிப்
பாதம் எய்தினர் பாதம் எய்தவும்
பதஞ்சலிக்கு அருளிய பரமநாடக என்று
இதஞ்சலிப்பு எய்தநின்று ஏங்கினர் ஏங்கவும்
எழில்பெறும் இமயத்து இயல்புடை அம்பொன் − 140
29. பொலிதரு புலியூர்ப் பொதுவினில் நடம்நவில்
கனிதரு செவ்வாய் உமையொடு காளிக்கு
அரூளிய திருமுகத்து அழகுறு சிறுநகை
இறைவன் ஈண்டிய அடியவ ரோடும்
பொலிதரு புலியூர்ப் புக்குஇனிது அருளினன்
ஒலிதரு கயிலை உயர்கிழ வோனே
− 145.
திருச்சிற்றம்பலம்
Jansikannan438@gmail.com.