jaga flash news

Monday, 2 November 2020

வன்னி மரத்தின் பயன்களும் அதில் உள்ள மருத்துவ பயன்களும்.:

வன்னி மரத்தின் பயன்களும் அதில் உள்ள மருத்துவ பயன்களும்.:

வன்னி மரப்பட்டைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து, குடிநீராக பருகிவர மகப்பேறின்மை பாதிப்புகள் விலகி கருவுறும் வாய்ப்புகள் அமையும். திருக்கோவில்களில் உள்ள வன்னி மரங்களை குழந்தை வரம் வேண்டி சுற்றிவந்து அதன் பட்டைகளை சிறிது எடுத்து வீடுகளில் குடிநீராக காய்ச்சி பருகுவர்.

செரிமானக் கோளாறு.:
வன்னி மரப்பட்டை உடல் செரிமான கோளாறுகளை சரிசெய்யும். அல்சர் பாதிப்புகளை சரியாக்கும். விஷக்கடிகளின் மேல் பட்டையை  அரைத்து தடவிவர வலி நீங்கும்.  உடல் தசைகளில் ஏற்படும் வீக்கம் கட்டிகளை கரைக்க பட்டை பயன் தரும். லெப்ரசி எனும் தொழு வியாதி பாதிப்புகள் போக்கும்  அருமருந்தாகிறது.

இன்றைய காலகட்டத்தில், சிசேரியன் எனும் ஆயுதப் பிரயோகம் இல்லாமல் மகப்பேறு வன்னி மரப்பட்டைகளில் உண்டாகும் பிசினை சேகரித்து, நிழலில் உலர்த்தி பொடியாக்கி, பின்னர் அதில் சிறிதளவை எடுத்து தண்ணீரில் இட்டு கொதிக்க வைத்து பருகி வர, பெண்களுக்கு சுகப்பிரசவம் ஏற்படும்.

இயற்கையின் கருணை உடல் நல பாதிப்புகளுக்கு தீர்வாக மூலிகைகளையும் அவற்றை பக்குவப்படுத்தி மருந்தாகக் கொள்வதன் மூலம் மனித வியாதிகளுக்கு தீர்வு கொடுப்பதுடன் நின்றுவிடுவதில்லை. சில மூலிகைகள் இருக்குமிடம் சென்றாலே அவற்றின் மூலம் நம்மிடம் உள்ள உடல் நலப் பாதிப்புகளுக்கு தீர்வாகிறது.

அடர்ந்த காடுகளில் செழித்து வளரும் பல்வேறு மூலிகைகளின் மூலிகைக் காற்று வீசும் மலைப்பிரதேசங்களின் வழியே ஆன்மீக ரீதியாகவோ மன அமைதிக்காகவோ பாதயாத்திரை சென்றுவரும்போது, அந்த மூலிகைக் காற்று உடலில் பட, வியாதிகள் அகல வாய்ப்பாகிறது.

இதுபோல, வன்னி மர இலைகளையோ பட்டையையோ எடுத்து மருந்தாக உபயோகிக்க வாய்ப்புகள் இல்லாமல் இருப்போர் தினமும் வன்னி மரத்தின் அருகே சற்று நேரம் அமர்ந்து வந்தால் போதும். அதிசயத் தன்மைகள் மிக்க வன்னிமரக்காற்று, சுவாச பாதிப்புகளை போக்கி உடல் இன்னல்களை சரிசெய்து, உடலுக்கும்  மனதுக்கும் புத்துணர்வை அளிக்கும்.

No comments:

Post a Comment