jaga flash news

Monday 16 November 2020

புத்திர தோஷம் என்பதன் உண்மை பொருள் என்ன?



  புத்திர தோஷம் என்பதன் உண்மை பொருள் என்ன?




 திருமணம் ஆகி ஓரிரு ஆண்டுகளுக்குள் குழந்தை பாக்கியம் ஏற்படாவிட்டால், ஜோதிடரிடம் போய் பலன் கேட்கும் பொழுது ,ஜோதிடர் கூறும் முதல் வார்த்தை ,உங்களுக்கு புத்திர தோஷம் உள்ளது .

குழந்தை தாமதமாவது மட்டும் புத்திரதோஷமா?

அதுமட்டும் இல்லை. 

 வேறு சில பிரச்சனைகள் இருந்தாலும், அதுவும் புத்திர தோஷமே.

புத்திர தோஷத்தின் வகைகள்.

1. குழந்தை பிறப்பே தாமதமாவது.

2. அடிக்கடி கரு உண்டாகி கலைவது

3. குழந்தை பிறந்தவுடன் இறந்து விடுவது.

 4.உடல் ஊனமாக பிறப்பது

5. மன வளர்ச்சி குறைந்த நிலையில் பிறப்பது .(Autism problem )

 6.பிறக்கும் பொழுதே நோயுடன் பிறப்பது அல்லது குறைபாடுகளுடன் பிறப்பது .(காது கேளாமை ,வாய் பேச முடியாமை,பார்வையின்மை ,சர்க்கரை நோய்)

7. பிறந்த பின் சிலர் தீராத வியாதிகளால் பாதிக்கப்படுவது (கேன்சர்), விபத்து போன்றவற்றில் உடலுறுப்புகளை இழப்பது அல்லது இறப்பது.

8. பெற்றோர் கண் முன்னே ,கடன் மற்றும் வேறு பிரச்சினைகளால் ,பிள்ளைகள் அவசியுறுவது,கஷ்டமான ஜீவனம்,குடும்ப திருமண வாழ்வில் பிரச்சனை போன்றவையும் புத்திர தோஷமே.

9. சட்டத்திற்குப் புறம்பான செயல்களை செய்து (கொலை ,கற்பழிப்பு கொள்ளை) போன்ற விஷயங்களில் சிக்கி ,தன் கண் முன்னே ,தன் பிள்ளைகள் ஜெயிலில் சித்ரவதைபடுவதும் ,பைத்திய அமைப்பில் திரிவதும் புத்திர தோஷமே.

10. திருமணத்திற்கு பிறகு தாய், தந்தையை ஒதுக்குவதும்,முதுமையில் ஒரு வாய் சாப்பாடு கிடைக்க வழியில்லாத நிலையில் , அடுத்தவரிடம் கையேந்துவதும் புத்திரதோஷமே.

 ஒரு புத்திர தோஷத்தை அறியமுடியுமா? 

 நிச்சயம் முடியும். 

அது எந்த
காலகட்டங்களில் பாதிப்பை ஏற்படுத்த போகிறது என்பதையும் ,ஜோதிடத்தின் தசாபுத்தி வாயிலாக கணிக்கமுடியும்.


No comments:

Post a Comment