நிலாவே வா..
செல்லாதே வா...!
சந்திரன் என்னும் பெண் கிரகம் தன் பதினாறு கலைகளும் நிறையப் பெற்று பூரணமானால் பலம் மிகுந்ததாகும். ஒருவர் ஜாதகத்தில் சந்திரன் பௌர்ணமியாக அமையப் பெற்றவர்களிடத்தில் மற்ற தோஷங்களெல்லாம் மறைந்து போய்விடும். பௌர்ணமி திதியில் குழந்தை பிறப்பது உயர்ந்த அம்சம்தான்.
சந்திரனே உடல்காரகன், மனோகாரகன். பூரண பிரகாசத்துடன் காணப்படும் சந்திரன், ஜாதகனுக்கு தன் முழு பலனையும் வாரி வழங்குவார். எனினும்
6, 8, 12 ல் மறையாமலும், ராகு, கேதுவுடன் சேராமலும், பூரண சந்திரனை ஜாதகத்தில் உடையவர்கள் நிச்சயம் உடலாலும்,மனதாலும், வாழ்க்கையில் வலிமையுடையவர்களாகவே இருப்பார்கள். அவர்கள் ஜாதகத்தில் உள்ள மற்ற தோஷங்கள் நிச்சயம் கட்டுப்படுத்தப்படும்.
பௌர்ணமி சந்திரனாக இல்லாமல், தேய்பிறையாக இருந்தாலும், அது பகை வீட்டிலோ, அல்லது 6, 8, 12 போன்ற வீடுகளில் இருந்தாலும், அந்த சந்திரனுக்கு கேந்திர ஸ்தானங்களில், குரு நின்றிருந்தால், சந்திரனின் பலவீனம் குறைந்து, வலிமையாகிவிடும். மேலும் குருபகவான் தம் 5, 7, 9 பார்வைகளில் ஏதாவாது ஒன்றால் பார்த்தாலும், சந்திரனின் தோஷங்கள் நீங்கிவிடும்.
சூரியனை தவிர மற்ற கிரகங்கள் வளர்பிறை சந்திரனுக்கு இரண்டில் இருந்தால் அது சுனபா யோகம், 12 ல் இருந்தால் அது அனபா யோகம், 2, மற்றும் 12 ல் இருந்தால் அது துருதுராயோகம். மேற்படி யோகங்கள் சுப பலனையே வழங்கும்.
தேய்பிறை சந்திரனுக்கு இருபுறமும், சூரியன், ராகு, கேதுவை தவிர பிற கிரகங்கள் இல்லையெனில் அது கேமத்ருமயோகம், தரித்திரம், ஆனால் குரு கேந்திரம் பெற்றால் இந்த யோகம் பங்கமாகும்.
வளர்பிறை சந்திரன் ஆட்சி, உச்சம் பெற்று பகலில் பிறந்த ஜாதகரின் சந்திரனை குரு பார்த்தாலும், இரவில் பிறந்தவரின் சந்திரனை சுக்கிரன் பார்த்தாலும் அதி யோகமே.
(பிற கிரகங்களின் நிலை பொறுத்து
பலன் வேறுபடும்)
No comments:
Post a Comment