கர்மா உண்டா இல்லையா..!
இந்த பதிவு ஒரு ஆய்வு மற்றும் விழிப்புணர்வு பதிவு, யாரையும் குறிப்பிடும் பதிவல்ல...
கர்மா என்றால் என்ன?..
செய்யும் செயலுக்கு கிடைக்கும் பலன், அந்த பலன் நல்லவை என்றால் நல்ல கர்மா, தீயவை என்றால் தீய கர்மாவும் சேரும், பலர் கேட்பதுண்டு கர்மாவின் தமிழாக்கம் என்ன?, கர்மா : செயலின் பயன், ஒரு செயலுக்கு எதிர்வினையே கர்மா இதை நம்ப மறுப்பது அறிவின்மை ஆகும், ஒருவரிடம் நீங்கள் ஒரு பொருளை பெருக்கிறீர்கள் அந்த பொருளுக்கான விலையை கொடுத்து பெறும்போது ஒன்றுக்கு ஒன்று சமம், அதுவே அந்த பொருளுக்கான விலையை தராமல் அவரிடம் இருந்து திருடுகிறீர்கள் என்றால் அதன் எதிர்வினை தீய கர்மம் சேரும், இதையே வினை விதைத்தவன் வினை அருப்பான் என்று கூறுவது, அதே பொருளை மற்றவருக்கு பரிந்துரை செய்து அதன் வழியே அந்த வியாபரிக்கு வியாபாரம் ஆக நீங்கள் உதவினால் அதன் எதிர்வினை பயன் நல் வினை கர்மா, இந்த கர்மத்தின் பலனை இன்னொரு நாள் உங்களுக்கு தேவையான பொழுது அனுபவிப்பீர்கள், ஒருவரின் பிறப்பின் பொழுது இந்த தாய்/தந்தைக்கு தான் பிறக்க வேண்டும் என்கிற விருப்பத்தின் பேரில் பிறப்பதில்லை, அவரின் நல்ல/தீய கர்மத்தின் அளவீட்டை பொறுத்தே அவரின் ஜனனம் நிகழ்கிறது, இதை மறுத்தால் அதற்க்கான விளக்கத்தை தரவேண்டிவரும் எச்சரிக்கை, தந்தை/தாய்/உருவம் எதையும் நீ முடிவு செய்ய வில்லை உன் முன்வினை பயனே அதனை முடிவு செய்கிறது என்பதே நிதர்சனம்...
சோதிடத்தில் கர்மா?...
சோதித்து அறிவது என்பதின் சுருக்கமே சோதிடம், எதை சோதிக்கிறீர்கள்?, ஒருவரின் கடந்த கால நிகழ்வுகளையும், நிகழ்கால நிகழ்வுகளையும், எதிர்கால நிகழ்வுகளையும் சோதிக்கிறோம், அப்படி சோதிக்கும் போது எல்லோராலும் எல்லா சோதிடராலும் ஒரே விதத்தில் பலனை உரைக்க முடிகிறதா?!, இல்லையே ஏன் இந்த முரண்பாடு?, சற்று சிந்தியுங்கள் என் அனுபவத்தில் பலரை கண்டுள்ளேன் என்னை விட வயதிலும்/அனுபவத்திலும் பெரிய நிலையில் இருக்கும் சோதிடரால் கூட என்னிடம் பலன் கேட்டு வந்தவருக்கு அவரின் சூழ்நிலை/கஷ்டம் தீர வழியை உரைக்க இயலவில்லை என்று கூறுவார்கள், அதே போல் என்னிடம் ஆலோசனை பெற்ற பலர் இன்னொரு சோதிடரிடம் தீர்வை கண்டடைந்து இருப்பார்கள், இதன் உண்மை பொருளென்ன, வேறு என்ன கர்மாதான், ஒரு சோதிடர் தன்னிடம் பலன் கேட்டு வரும் அனைத்து ஜாதகருக்கும் தீர்வை கொடுத்தாரா?!, என்பதை சுய ஆய்வு செய்ய வேண்டும், நிச்சயம் 100% தீர்வை கூறிய சோதிடர் இந்த அகிலத்தில் கிடையாது, இதை நான் ஆணித்தரமாக அடித்து கூறுவேன், ஆனால் சோதிடர்கள் என்ன கூறுவார்கள் நான் தீர்வை கூறிவிட்டேன் ஆனால் ஜாதகர் தான் அதை நம்பாமல் வேறு ஒரு சோதிடரிடம் சென்றார் என்பார்கள், இதன் காரணமென்ன, நீங்கள் கூறிய தீர்வில் அவருக்கு திருப்தி இல்லை என்பது தானே, நீங்கள் சரியான தீர்வை கூறியும் அவர் ஏற்கவில்லை என்றால் அதன் காரணம் என்ன?, அவரின் முன்வினை பயனே, இதை ஏற்க மறுத்தால் அதன் பெயர் விதண்டாவாதம் ஆகும், கர்மாவே இல்லை எனில் வாழ்வில் சிக்கல் எவ்வாறு உருவாகிறது?, பிறக்கும் போதே சிக்கலில் சிக்கி கடைசிவரை எவ்வளவு சோதிடரை அணுகியும் பயனில்லாமல் இறந்து போனவர் எத்தனை எத்தனை?!, இதை எல்லாம் மருப்பீர்கள் என்றால் அதன் பெயர் வறட்டு பிடிவாதமாகும், நமக்கு மீறிய சக்தி உண்டு அந்த சக்தி நம்மை படைத்து உன் இஷ்டப்படி வாழு என்றே உலகில் சுற்றவிட்டுள்ளது, ஆனால் அந்த சக்தியின் கையில் நம் கழுத்தில் உள்ள கர்ம கயிற்றின் நுனி உள்ளது என்பதே உண்மை, அந்த சக்தி ஆட்டிவைக்கும் பொம்மைகளே நாம் அந்த பொம்மைகளின் வரைமுறையே கர்மா ஆகும், ஆகவே சோதிடம் என்பதே கர்மாவை சோதித்து ஜாதகரின் இன்னல் தீர பலனுறைப்பதே,
No comments:
Post a Comment