jaga flash news

Monday, 9 November 2020

ராகு-கேதுக்களின் ஆட்சி, உச்ச / நீச மூலதிரிகோண வீடுகள்

ராகு-கேதுக்களின் ஆட்சி, உச்ச / நீச மூலதிரிகோண வீடுகள் 

ஶ்ரீபராசரர் முதல் புலிப்பாணி சித்தர் வரை ராகு-கேதுக்களின் ஆட்சி, உச்ச/நீச வீடுகளை ஒன்றுபோல சொல்லவில்லை. வேதஜோதிட காலம் முதல் இன்று வரை இது பலரால் பலவிதமாகப் பேசப்படும் விவாதப் பொருளாகவே இருக்கிறது. பருப்பொருளற்ற இருபடி நிலைகளை நிழல் கிரகங்களாய் உருவகப்படுத்தும் பட்சத்தில், ஏனைய கிரகங்களைப் போல அவற்றின் இடம் சார்ந்த குணபேதங்களையும் வரையறுப்பது அவசியமாகிறது. அந்த வகையில்  இவற்றின் ஆட்சி, உச்ச/நீச வீடுகள் குறித்து எமது பார்வையில் எழுதுகிறோம்.

கிரகம் (உச்சம் /  நீசம்)

1. சூரியன் (1/7)
2. சந்திரன் (2/8)
3. செவ்வாய் (10/4)
4. புதன் (6/12)
5. குரு (4/10)
6. சுக்கிரன் (12/6)
7. சனி (7/1)

கால புருஷனின் 1,2,4,6,7,8,10,12ம் வீடுகளில் (ராகு-கேது நீங்கலாக) அனைத்து கிரகங்களும் உச்ச/நீசமாகிறது. இதில் சந்திரனுக்கு மட்டுமே ரிஷப/விருச்சிக ராசிகள் உச்ச/நீச வீடுகளாய் இருக்கிறது. ஆனால் 3,5,9,11ம் இடங்களில் வேறு எந்தக் கிரகங்களும் உச்ச/நீசம் ஆவதில்லை. இங்குதான் ராகு-கேதுக்களின் இடம் சார்ந்த இயக்கநிலை முக்கியத்துவம் பெறுகிறது.

எமது ஆய்வுப்படி,

1. The Gate of Man என்றழைக்கப்படும் மிதுனத்தில்-ராகு உச்சமாகிறது; The Gate of God என்றழைக்கப்படும் தணுசில்-கேது உச்சமாகிறது. இவற்றின் எதிரெதிர் துருவங்களில் இவை நீசமாகிறது. இவ்விரண்டு ராசிகளிலும் ராகு-கேதுக்களின் நட்சத்திரங்களான "திருவாதரை மற்றும் மூலம்" இருப்பது இதை உறுதி செய்கிறது. மேலும், நிழல் கிரகங்கள் உபய ராசிகளில் உச்ச/நீசமாகும் நிலைப்பாடு சரியாகவே வரும்.

2. அதுபோல சிம்மத்தில்-கேதுவும்; கும்பத்தில்-ராவுகும் ஆட்சியாகிறது. இதிலும் இவற்றின் நட்சத்திரங்களான "மகம் மற்றும் சதயம்" இருப்பது இதை உறுதி செய்கிறது. மேலும், மகம் ஜகத்தினை ஆளும் என்கிற கூற்று சிம்மத்தில் கேதுவின் நட்சத்திரம் இருப்பதன் முக்கியத்துவத்தைக் குறிப்பிடுகிறது, தவிர சுக்கிரனின் நட்சத்திரமான "பூரம்" மற்றும் சூரியனின் நட்சத்திரமான "உத்திரத்தைப்" பற்றி பேசவில்லை. ஆக, சிம்மத்தில் கேது ஆட்சியாவது இதன்படி நிரூபணமாகிறது. மேலும், ஐப்பசி மாதத்தில் பிறந்த இராஜராஜ சோழனுக்கு துலாத்தில் சூரியன் நீசமாகியும் மாபெரும் சாம்ராஜ்யத்தின் சக்ரவர்த்தியாக இருந்தமைக்கு மூலகாரணம் ராகு ஆட்சியாகும் கும்பத்தின் சதய நட்சத்திரத்தில்  ஜனித்ததாலேயே எனலாம்.

3. இறுதியாக பராசரரின் கூற்றுப்படி கடக-மகர ராசிகளையே இவ்விரண்டு நிழல் கிரங்களின் மூலதிரிகோண வீடுகளாய் குறிப்பிடுகிறேன். காரணம், இவ்விரண்டு பாவங்கள்தான் கடக ரேகை (Tropic of cancer); மகர ரேகை (Tropic of Capricorn) எனப் புவியின் இருபெரும் கற்பனைக் கோடுகளாய் வானியல் உலகம் கூறுகிறது, மாறாக வேத ஜோதிடத்திலும் கடக-ராகு மற்றும் மகர-கேது அதிக முக்கியத்துவம் பெறுகிறது, நன்றி!


No comments:

Post a Comment