jaga flash news

Saturday, 2 November 2024

திருச்செந்தூர் முருகன் கோயிலில் சூரசம்ஹாரம் கொண்டாடப்படுவது ஏன்?


திருச்செந்தூர் முருகன் கோயிலில் சூரசம்ஹாரம் கொண்டாடப்படுவது ஏன்? கந்த சஷ்டி விரதம் எதற்காக?
 சூரசம்ஹாரம் என்ற ஒரு விஷயம் ஏன் உருவானது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இன்றளவும் முருகன் கோயில்களில் எப்படி சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.


நம்மை படைக்கும் கடவுள் பிரம்மா என்பது அனைவருக்கும் தெரியும். அந்த பிரம்மன் "படைத்த" அதாவது அவருடைய புதல்வர்கள் தட்சன் , காசிபன். இருவரும் சிவனை நோக்கி கடும் தவம்புரிந்து பல்வேறு வரங்களை பெற்றனர்.


spirtuality tiruchendur murugan

இவர்களில் தட்சன், சிவனுக்கே மாமனாராகியும் தனது அகந்தையால் சிவனால் உருவாக்கப்பட்ட வீரபத்திரனால் கொல்லப்பட்டுவிடுகிறான். அது போல் காசிபன் ஒரு நாள் அசுர குரு சுக்கிரனால் ஏவப்பட்ட மாய பெண்ணின் அழகினில் மயங்கி தான் பெற்ற தவ வலிமையை இழந்தான்.

இதைத் தொடர்ந்து காசிபனும் அந்த அசுரப் பெண்ணும் மனித உருவத்தில் முதலாம் ஜாமத்தில் இணைந்து மனித தலையுடன் கூடிய சூரபத்மன் என்பவருடன் 4 குழந்தைகள் பிறக்கின்றன. காசிபன் தனது குழந்தைகளிடம் சிவனை நோக்கி வடதிசையில் தவம் செய்து வரங்களை பெற்று கொள்ளுங்கள் என்கிறார்.

அது போல் சூரபத்மனும் சிவனை நோக்கி தவம் புரிந்து சாகாவரம் வேண்டும் என கேட்கிறான். ஆனால் சிவனோ அதற்கு மறுத்து பிறப்பு என்றால் இறப்பும் இருக்கத்தான் செய்யும். உனக்கு எந்த வகையில் அழிவு வர வேண்டும் என கேட்டார். அப்போது சூரபத்மனோ, ஒரு பெண்ணின் வயிற்றில் பிறக்காத பிள்ளைகளால் எனக்கு அழிவு வர வேண்டம் என தந்திரமாக சொல்லி வரத்தை பெற்றான்.


இதையடுத்து சூரபத்மன், முப்பது முக்கோடி தேவர்களுக்கும் தொல்லை கொடுத்து அவர்களை சிறையில் அடைத்தான். சூரபத்மனுக்கு அஞ்சி இந்திரன் தேவலோகத்தை விட்டு பூலோகம் வந்து ஒளிந்து கொள்கிறார். இதையடுத்து சிவபெருமானிடம் தங்கள் சூரனிடம் இருந்து காக்குமாறு வேண்டுகிறார்கள்.

அப்போது சிவப்பெருமான், தனது 6 நெற்றிக் கணக்கைகளை திறக்க அதிலிருந்து 6 தீப்பொறிகளையும் வாயு பகவான் ஏந்திச் சென்று சரவணப்பொய்கையில் மலர்திருந்த தாமரை மலர்களின் மீது கொண்டு போய் வைத்தார். அவை 6 தீப்பொறிகளும் 6 குழந்தைகளாக 6 கார்த்திகை பெண்களிடம் வளர்க்கிறார்கள்.

அந்த 6 குழந்தைகளையும் பார்வதி தேவி கட்டி அணைக்க அவர்கள் ஆறுமுகங்களும் இரு கரங்களும் கொண்ட முருகனாக உருவெடுக்கிறார்கள். முருகன், அசுரர்களின் வரலாற்றை அறிந்து கொண்டு காசிபனின் மகன் உள்பட்ட அனைவரையும் 5 நாட்களில் அழித்து விடுகிறார். 6ஆவது நாள் எஞ்சியவன்தான் சூரபத்மன்.


தனது சேனைத் தலைவர் வீரபாகுவை சூரனிடம் அனுப்பி திருந்துமாறு முருகன் எச்சரிக்கிறார். ஆனால் சூரபத்மன் திருந்தவில்லை. இதனால் போர்புரிய முருகனை மும்மூர்த்திகளும் அனுப்பி வைக்கிறார்கள். சூரனோ, கடலின் நடுவில் வீரமகேந்திரபுரி என்ற பட்டணத்தை எழுப்பி அங்கே வசித்து வந்தான். உடனே முருகனும் அந்த நகரை அடைந்தார்.

அங்கு சூரன், முருகனை பார்த்து, இந்த பொடியனா என்னை கொல்ல வந்தது என ஏளனமாக கேட்க, முருகனோ தனது விஸ்வரூப தரிசனத்தை காட்டுகிறார். இதனால் நடுங்கிய சூரன், முருகனிடம் மன்னிப்பு கேட்டு, இந்த கடலில் வடிவாக நான் தங்குகிறேன். உன்னை தேடி வரும் பக்தர்கள் என்னுள் வந்து குளிக்கும் போது ஆணவம் நீங்கி உன்னிடம் சரணடைவார்கள் என வரம் கேட்டான்.

முருகனும், சூரன் கேட்ட வரத்தை கொடுத்துவிட்டு அவனுக்கு ஞாபக மறதியை கொடுத்தார். இதனால் சூரனின் ஆணவம் தலைதூக்க மாமரமாக மாறி தப்ப முயன்றான். அப்போது முருகன் தனது வேலாயுதத்தை மாமரத்தின் மீது விட்டதும், அந்த மரம் இரண்டாக பிளந்தது.

சூரன் மாமரமான இடம் மாம்பாடு என்று அழைப்படுகிறது. முருகன் சூரனை வதம் செய்யாமல் அவனை ஆட்கொண்டார். சூரசம்ஹாரம் முடிந்த பின் முருகன் சிவபூஜை செய்ய விரும்பினான். இதற்காகக் கடற்கரையில் கட்டப்பட்ட கோவில் தான் திருச்செந்தூர் கோவில். மேலும் தேவர்களுக்கு முருகன் செய்த உதவிக்கு பிரதிபலனாக இந்திரன் தன் மகள் தெய்வானையை முருகனுக்கு மணம் முடித்து வைத்தான். அதனால் சூரசம்ஹாரத்துக்கு அடுத்த நாள், அதாவது 7ஆவது நாள் முருகன் தெய்வானை திருமணம் நடைபெறுகிறது.


No comments:

Post a Comment