jaga flash news

Monday, 4 November 2024

வாழ்க்கை எனும் வட்டம்



ஓம் நமோ நாராயணாய

சர்வம் கிருஷ்ணார்ப்பணம்

 வாழ்க்கை எனும் வட்டம் சிந்தனை பெருகப் பெருக, எண்ணம் உயரும்! 
எண்ணம் உயர உயர, பேச்சுச் சுருங்கும்! 
பேச்சுச் சுருங்கச் சுருங்க, செயல் சிறக்கும்! 
செயல் சிறக்க சிறக்க, புகழ் கூடும்! 
புகழ் கூடக் கூட, பொருள் சேரும்! 
பொருள் சேரச் சேர, மகிழ்வு நிறையும்! 
மகிழ்வு நிறைய நிறைய, வாழ்வு மலரும்!
வாழ்வு மலர மலர, மமதை ஏறும்! மமதை ஏற ஏற, பேச்சு விரியும்! 
பேச்சு விரிய விரிய, செயல் சுருங்கும்! 
செயல் சுருங்கச்சுருங்க, புகழ் குறையும்! 
புகழ் குறையக் குறைய, செல்வம் கரையும்!
செல்வம் கரையக்கரைய, வாழ்வு இருளும்! 
வாழ்வு இருள இருள, சிந்தனைப் பெருகும்!
மீண்டும்
சிந்தனைப் பெருகப் பெருக.

No comments:

Post a Comment