செரிமான சக்தியை அதிகப்படுத்தும் சூப்பர் உணவுகள்..
இன்றைய காலகட்டத்தில் நம் மக்கள் ஃபாஸ்ட் ஃபுட்களுக்கு மிகவும் அடிமையாகிவிட்டனர் என்றே சொல்லலாம். ஆரோக்கியமான உணவை தேடி தேடி சாப்பிடுவதை தவிர்த்து உடலுக்கு கேடுவிளைவிக்கும் ஃபாஸ்ட் ஃபுட்களை தேடி சாப்பிட்டு வரும். இவை உடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை அளித்து வயிறு சம்மந்தமான பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். ஃபாஸ்ட் ஃபுட் தவிர்த்து நம் சாப்பிடும் அன்றாட உணவில் இருந்து செரிமான சக்தியையும், நல்ல பாக்டீரியாக்களை அதிகரிக்கச் செய்யலாம். எந்தெந்த உணவுகளை நாம் எடுத்துக்கொள்ளலாம் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
சூரியகாந்தி விதை: சூரியகாந்தி விதை சாப்பிடுவதால் லிகினான்கள், செல்லுலோஸ் நம் உடலுக்கு கிடைக்கும். இவை நம் செரிமான சக்தியை அதிகப்படுத்தி வயிறு சம்மந்தமான பிரச்னைகள் தீர உதவும்.
பூண்டு: உடலுக்கு பல நன்மைகள் தரக்கூடியது பூண்டு. உணவுக்கு சுவையை அதிகரிக்கச் செய்ய உதவும் பூண்டு, குடல் ஆரோக்கியத்துக்கும் பெரிதும் உதவுகிறது. பூண்டை நம் அன்றாட உணவில் சேர்த்துக்கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்வதுடன், உடலில் நல்ல பாக்டீரியாக்கள் வளர்ச்சிக்கு உதவுகரித்து.
கொண்டைக்கடலை: ப்ரோடீன் சத்து அதிகமுள்ள பொருள் கொண்டைக்கடலை. அதுமட்டுமில்லாமல் நார்ச்சத்தும் இதில் அதிகமாக உள்ளதால் செரிமான சக்தியை அதிகப்படுத்துவதோடு குடல் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது. தினமும் நம் டயட்டில் வேகவைத்த கொண்டைக்கடலை சேர்த்துக்கொள்வது நல்லது.
ஆப்பிள்: உடலுக்கு பல நன்மைகள் தரும் ஆப்பிளை தினந்தோறும் சாப்பிடுவதால் குடல் நுண்ணுயிர்கள் வளர்ச்சியை அதிகப்படுத்தி செரிமான சக்தியை மேம்படுத்துகிறது.
உருளைக்கிழங்கு: அதிக மாவுசத்து கொண்ட பொருள் உருளைக்கிழங்கு. இது நம் குடலில் உள்ள பாக்டீரியாக்களை கட்டுப்படுத்தி குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
வாழைப்பழம்: நம் அனைவருக்கும் தெரிந்ததே, வாழைப்பழம் செரிமான சக்தியை மேம்படுத்த பெரிதும் உதவுகிறது. செரிமான சக்தியை மேம்படுத்துவதோடு குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. தினமும் உங்கள் டயட்டில் வாழைப்பழங்களை எடுத்துக்கொள்வது நல்லது.
No comments:
Post a Comment