jaga flash news

Thursday, 17 July 2025

வங்கி லாக்கரில் தங்க நகைகளை வைப்பது பாதுகாப்பானதா..?

 வங்கி லாக்கரில் தங்க நகைகளை வைப்பது பாதுகாப்பானதா..?

 இப்படியொரு பிரச்சனை இருப்பது தெரியுமா..? இந்தியாவில் பலரும் தங்களது எதிர்கால நலன் கருதியும், பாதுகாப்புக்காகவும் தங்கத்தை வங்கி லாக்கரில் சேமித்து வைப்பார்கள். அந்த தங்கம் பாதுகாப்பான இடத்தில் இருக்கிறது என்பதே நமக்கு நிம்மதி தரும். ஆனால், அந்த தங்கம் மெதுவாக சேதமடைந்து வருவதும், அதன் மதிப்பு குறைந்து வருவதும் எத்தனை பேருக்கு தெரியும்..? அதுகுறித்து நிதி ஆலோசகர தெளிவாக விளக்கியுள்ளார். இதுதொடர்பாக சமீபத்தில் தனது நண்பருக்கு நேர்ந்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அந்த நண்பரின் குடும்பத்தினர் தங்களின் பாரம்பரிய தங்க நகைகளை, பாதுகாப்புக்காக ஒரு வங்கியின் லாக்கரில் வைத்திருந்தனர். ஆனால், பருவமழையின் போது ஏற்பட்ட வெள்ளத்தில் அந்த லாக்கரில் தண்ணீர் புகுந்துள்ளது. இதன் விளைவாக, அந்த நகைகள் அனைத்தும் சேதமடைந்துள்ளது. ஆனால், வழக்கமான பாதுகாப்பு காப்பீட்டின் கீழ் இந்த பாரம்பரிய தங்க நகைக்கு ரூ.3 லட்சம் மட்டுமே வழங்கப்படும் என வங்கி சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அந்த நகைகளின் உண்மையான மதிப்பு ரூ.15 லட்சம் முதல் ரூ.20 லட்சத்திற்கு மேல் இருக்கும். மக்களே இத செக் பண்ணாம இனி நகை வாங்காதீங்க! பல்வேறு வங்கிகளில் உள்ள பாதுகாப்பு லாக்கர்கள் பெரும்பாலும் ரூ.3 லட்சம் வரையிலேயே காப்பீடு செய்யப்பட்டிருக்கின்றன. இது, ஒரு சாமானிய நகை தொகுப்பின் மதிப்பையும், முழுமையாக ஈடுகட்ட இயலாத அளவிற்கு குறைவாகவே இருக்கும் இன்றும் பலர் வங்கிக் லாக்கர்களை தங்கள் குடும்பத்தின் தங்க சேமிப்புகளுக்கு 'மிகப்பெரிய பாதுகாப்பு' என்று நம்புகிறார்கள். ஆனால், இது மிக தவறான நம்பிக்கை" என்று கூறியுள்ளார். -
 உண்மை என்ன..?: வங்கி லாக்கர்களுக்கு வழங்கப்படும் காப்பீடு மிகவும் குறைவானது. திருட்டு, தீவிபத்து அல்லது வெள்ளம் போன்ற இயற்கை பேரழிவுகள் நேர்ந்தாலும், அதற்கான நஷ்ட ஈடு லாக்கர் வாடகை அடிப்படையில்தான் வழங்கப்படுகிறது. இது பெரும்பாலும் ஒரு சில ஆயிரம் ரூபாய்களுக்கு மேல் செல்லாது. எனவே, லாக்கரில் நீங்கள் வைக்கும் நகைகள் ரூ.2 லட்சம் முதல் ரூ.3 லட்சத்திற்கும் மேல் இருந்தாலும், காப்பீடு அந்த அளவு மட்டுமே கிடைக்கும். நீங்கள் வைத்திருக்கும் நகைகளின் மதிப்பு கோடிகளில் இருந்தாலும், அதற்கான பாதுகாப்பு வெறும் லட்சங்கள் மட்டும்தான்  . மேலும், வெள்ளி பார்கள், பழமையான நாணயங்கள், திருமண நகைகள் போன்றவை லட்சங்களிலும், சில நேரங்களில் கோடிகளிலும் மதிப்புள்ள தங்கம் வங்கி லாக்கர்களில் பாதுகாப்பாக இருப்பதாக மக்கள் நம்புகின்றனர். ஆனால், அது உண்மை கிடையாது. இதனால், உங்களுக்கு கிடைப்பது நிம்மதி மட்டுமே. தங்கத்தை வெறும் லாக்கரில் போட்டு விட்டு மறந்து விடுவது, அதை பாதுகாக்கும் வாய்ப்பையும், அதன் மதிப்பை மீட்டெடுக்கும் வாய்ப்பையும் இழப்பதற்கு சமம். 

No comments:

Post a Comment