தங்க நகைகளை எப்போதும் தென்மேற்கு திசையில் வைக்க வேண்டும்.. பீரோ லாக்கர்கள், வடக்கு திசையை நோக்கி இருக்க வேண்டும்... அதேபோல, ஈசானிய மூலையில் தங்க நகைகளை வைக்கலாம்... எக்காரணம் கொண்டும், வீட்டின் வடமேற்கு திசையில் தங்கம் வைப்பதை தவிர்க்கலாம்.
அதேபோல, சமையலறையில், அதிலும், மகாலட்சுமி வாசம் செய்யும் , பருப்பு, அரிசி அஞ்சறை பெட்டிகளில் தங்க நகைகளை வைப்பதை தவிர்க்க வேண்டும்.. அடுப்பு மேடையில் தங்க நகைகளை வைக்கக்கூடாது.. வட மேற்கு மூலையிலுள்ள அறையிலும் தங்க நகைகளை வைக்கக்கூடாது.
நமஸ்காரம். பதிவு அருமை அய்யா வெ.சாமி அவர்களே !
ReplyDeleteSat. 23, Aug. 2025 at .....
ReplyDelete*தண்டியலங்காரம் :*
*தண்டி − ஆசிரியர் பெயர்.
*அணி − அழகு.
*புலவன்... செய்யுளில் தான் கூறவந்த கருத்தை அழகுறச் சொல்வதற்காகப் பயன்படுத்தும் உத்தி முறைகளே *அணி* எனப்படும்.
*நாம் முதன் முதலாக பார்க்கப் போவது தண்டியலங்காரம் − பொருளணியியல். :*
*தண்டியலங்காரம் பொருளணியியலில் விளக்கிக் கூறப்படும் அணிகள் − 35.
*பொருளணியியலில்... முதல் 4− அணிகளான −தன்மை அணி, உவமை அணி, உருவக அணி, தீவக அணி, இவை பற்றி சிறிது சிறிதாக பார்க்கலாம்...!
தண்டியலங்கார ஆசிரியர் பொருளணியியலில் முதலாவதாக குறிப்பிடும் அணி *தன்மை அணி அதாவது தன்மை நவிற்சி அணி* ஆகும்.
*தன்மை என்றால் இயல்பு அல்லது இயற்கை என்று பொருள்.
*தன்மை அணி என்பது, எவ்வகைப்பட்ட பொருளையும், அதன் உண்மைத் தன்மையை விளக்குவதற்கேற்றவாறு சொற்களைக் கொண்டு பாடுவது தன்மை அணி ஆகும்.
தண்டியலங்காரம் − 29-ல்
எவ்வகைப் பொருளும் மெய்வகை விளக்கும்
சொல்முறை தொடுப்பது தன்மை ஆகும்
என்ற நூற்பாவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
*சுருக்கமாகக் கூறினால்.. *உள்ளதை உள்ளவாறு கூறல்.* இதுவே *தன்மை அணி* எனவாம்.
*சரி.. தன்மை அணிகளின் வகைகளைப் பார்க்கலாம்..!
தன்மை அணியானது *பொருள்(தன்மை) குணம் (தன்மை) இனம்(தன்மை) தொழில் (தன்மை) எனும் 4−ன் அடிப்படையில் தோன்றும்.
எனவே,
ஒரு பொருளின் தன்மையைக் கூறுவது *பொருள் தன்மை* ஆகும்.
*ஒரு குணத்தின் தன்மையைக் கூறுவது *குணத் தன்மை* ஆகும்.
*ஒரு இனத்தின் வகையைக் கூறுவது *இனத் தன்மை* ஆகும்.
*ஒரு தொழிலின் தன்மையைக் கூறுவது *தொழில் தன்மை* ஆகும்.
*பொருள் தன்மை :*
பொருள் தன்மை என்பது, ஒரு பொருளின் பலவிதமான இயல்புகளை தன்மை மாறாது உள்ளவாறு எடுத்துக் கூறுவது *பொருள் தன்மை* ஆகும்.
எடுத்துக்காட்டாக...
*நீலமணிமிடற்றன்; நீண்ட சடை முடியன்; நூல் அணிந்த மார்பன்; நுதல் விழியன்; தோல் உடையன்.*
*கைம்மான் மறியன்; கனல்மழுவன்; கச்சாலை எம்மான் இமையோர்க்கு இறை.*
*இப்பாடலின் பொருள் :*
*திருக்கச்சாலை* என்னும் ஊரில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானாகிய சிவபெருமான், கருங்குவளை மலர் போன்ற அழகிய கழுத்தை உடையவன்....
*நீண்ட சடை முடியை உடையவன்....
*முப்புரி நூல் அணிந்த மார்பினை உடையவன்...
*நெற்றிக் கண்ணை உடையவன்...
*புலித் தோல் ஆடை அணிந்தவன்...
*கையிலே மான்குட்டியையும், கனலையும் மழுவினையும்(கோடரி) ஏந்தியவன்...
*அவன் தேவர்க்கும் இறைவன் ஆவான்.*
*மேற்கண்ட பாடலில்.. *பொருள் தன்மை யாதெனில்...*
*சிவபெருமான் என்ற பொருளில் அதாவது உருவத்தில்.. பலவிதமான தோற்ற இயல்புகளை, *நேரில் பார்ப்பது போல் "உள்ளவாறு" கூறியிருப்பதால் ... இப்பாடல் *பொருள் தன்மை*ஆயிற்று.
*மீண்டும் சந்திக்கலாம் !*
Jansikannan438@gmail.com.