தலைக்கு குளிச்சா சளி பிடிக்கும் என்பது உண்மை தானா?
மழைக்காலம் தொடங்கிவிட்ட நிலையில், இதுவரை தலைக்கு வாரத்திற்கு 2-3 முறை குளித்து வந்தவர்கள், இனிமேல் வாரம் ஒருமுறை தலைக்கு குளிக்கும் பழக்கத்திற்கு மாறியிருப்பார்கள். இதற்கு காரணம் எங்கு தலைக்கு குளித்தால் சளி பிடித்துவிடுமோ என்ற ஒரு பயம் தான்.
மழை நேரத்தில் அல்லது பனி காலத்தில் தலைக்கு குளிச்சா சளி பிடிக்கும் என்று சின்ன வயதில் இருந்து நம் பாட்டிமார்கள் மற்றும் தாய்மார்கள் சொல்வதைக் கேட்டிருப்போம். அதற்கேற்ப சிலருக்கு தலைக்கு குளித்தால் இப்படி சளி பிடித்து அவதிப்பட வைக்கும்.
இதனால் இன்று வரை நிறைய பேர் இதை மனதில் கொண்டு குளிர்காலத்தில் அல்லது மழை காலத்தில் தலைக்கு குளிக்க யோசித்து வருவதுண்டு. உண்மையிலேயே தலைக்கு குளித்தால் சளி பிடிக்குமா? தலைக்கு குளிப்பதற்கும், சளி பிடிப்பதற்கும் தொடர்பு உள்ளதா? அல்லது இது கட்டுக்கதை அது என்னவென்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
அதில் அவர் கூறியதாவது, "தலைக்கு குளித்தால் சளி பிடிக்குமா என்ற ஒரு கேள்வி உலகளவில் பெரும்பாலானோரின் மனதில் இருக்கும் ஒன்றாகும். இப்படி தலைக்கு குளிப்பதற்கும், சளி பிடிப்பதற்கும் என்ன தொடர்பை அறிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் குளித்து விட்டு, கை கால்கள் மிகவும் ஜில்லென்று இருக்கும் போது வெளியே சென்றால் சளி பிடிப்பதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக தெரிய வந்தது. அதில் எந்த வகையான சளி பிடித்தது என்பதை கவனிக்க வேண்டும். முதலில் சளியில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று கிருமி சளி, அழற்சி சளி. இதில் கிருமி சளி அதிகமாகுமா என்று இங்கிலாந்தில் உள்ள கார்டிப் பல்கலைகழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இரண்டு குழுக்களாக மக்களை பிரித்து, ஒரு ப்ளூ சீசனில் ஒரு குழுவினரை தலைக்கு கூட குளிக்க சொல்லவில்லை, கை மற்றும் கால்களை ஜில் நீரில் ஒரு 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் அவர்களை கவனித்துள்ளனர்.
கருஞ்சீரகத்துடன் பூண்டு தேன் கலந்து சாப்பிட்டால் உண்மையில் நெஞ்சு சளி கரையுமா? டாக்டர் என்ன சொல்றாரு பாருங்க..கருஞ்சீரகத்துடன் பூண்டு தேன் கலந்து சாப்பிட்டால் உண்மையில் நெஞ்சு சளி கரையுமா? டாக்டர் என்ன சொல்றாரு பாருங்க..
அதேப் போல் மற்றொரு குழுவினரை சாதாரணமாக வெளியே செல்ல அனுமதித்துள்ளனர். இந்த இரண்டு குழுக்களை ஒப்பிட்டு பார்க்கையில், கை கால்களை தொடர்ந்து நீரில் நனைத்த குழுவினருக்கு சளி பிடிப்பதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பது தெரிய வந்துள்ளது. இது எதனால் என்று பார்த்தால், பொதுவாக ஜில் நீரில் கை, கால்களை நனைக்கும் போது, உடலானது அந்த வெப்பநிலையை எடுத்துக் கொள்ளும். ஆனால் உடல் அதிகமாக குளிர்ச்சியாகாமல் இருக்க உடலில் ஆங்காங்கு இரத்தக்குழாய்கள் சுருங்கி, உடலின் வெப்பநிலை வெளியே செல்லாமல் பார்த்துக் கொள்ளும். இப்படி ப்ளூ சீசனில் வெளியே செல்லும் போது, இரத்தக்குழாய்கள் சுருங்கினால், உடலை ஏதேனும் கிருமிகள் தாக்கினாலும், இரத்த குழாய் சுருங்குவதால் வெள்ளையணுக்களால் கிருமிகளை எதிர்க்க முடியாமல் போய், தொற்று ஏற்படலாம். இருப்பினும், இதன் ஆபத்து குறைவு தான். எனவே தலைக்கு குளிப்பதால் கிருமி சளி பிடிக்கும் என்பதற்கான உறுதியான ஆராய்ச்சிகள் ஏதும் இல்லை." என்று கூறினார்.
அதே சமயம் அலர்ஜிக் ரைனைடிஸ் என்னும் அடிக்கடி தும்மல், அலர்ஜிக் சைனஸைடிஸ் என்னும் அழற்சியால் மூக்கடைப்பு அல்லது தலைவலி போன்றவற்றால் அவதிப்படுபவர்களை கொண்டு ஆய்வு செய்து பார்த்ததில், இவர்களின் தலைப்பகுதி குளிர்ச்சியாக்கும் போது மூளை அதிகமாக குளிர்ச்சியாகாமல் இருக்க உடம்பு சில பாதுகாப்பு செயல்முறையை மேற்கொள்கிறது. அது என்னவெனில், உள்ளே இருக்கக்கூடிய எத்மாய்டு மற்றும் ஸ்பீனாய்டு சைனஸ் சுரப்பியின் வழிப்பாதை மூடிக் கொண்டு, அதன் விளைவாக உள்ளேயே சுரப்புகள் சேர்ந்து கொள்ளும். இதன் காரணமாக தான் நிறைய பேர் தலைக்கு குளித்த பின் தலை பாரத்தை சந்திக்கின்றனர். எனவே ஏற்கனவே அழற்சி உள்ளவர்கள் ஜில் நீரில் தலைக்கு குளிக்கும் போது, தும்மல், மூக்கடைப்பு போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தலாம்." என்று கூறினார்.
"மொத்தத்தில் தலைக்கு குளித்தால் சளி பிடிக்குமா என்றால், கிரும சளி பெரிதளவில் பிடிக்க வாய்ப்பில்லை. ஆனால் அழற்சி இருப்பவர்கள் குளிக்கும் போது, சளியின் அறிகுறிகளை தற்காலிகமாக 1-2 மணிநேரம் சந்திக்க நேரிடும்." என்றும் டாக்டர் அருண்குணமார் கூறினார். எனவே நண்பர்களே, உங்களுக்கு அழற்சி பிரச்சனைகள் இருந்தால், குளிர் அல்லது மழை காலத்தில் தலைக்கு குளிக்கும் போது, சளியின் அறிகுறிகளை ஓரளவு சந்திக்க நேரிடும். ஆகவே சற்று கவனமாக இருங்கள்.
No comments:
Post a Comment