jaga flash news

Wednesday, 9 January 2013

4 யுகங்கள்


4 யுகங்கள்  

யுகம் என்பது இந்துக்களின் கால அளவை முறையில் காலத்தை அளக்கும் பெரிய அலகுகளில் ஒன்று. யுகங்கள் நான்கு வகைப்படும். அவை:

* கிருத யுகம்  
* திரேதாயுகம்  
* துவாபரயுகம்  
* கலியுகம்  
என்பனவாகும். இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு கால அளவுகளைக் கொண்டன. இவற்றுட் சிறிய யுகமான கலியுகம் நான்கு இலட்சத்து முப்பத்து இரண்டாயிரம் (4,32,000) ஆண்டுகள் கொண்டது. துவாபர யுகம் கலியுகத்திலும் இரண்டு மடங்கு கால அளவு கொண்டது. இது 8,64,000 ஆண்டுகளையும், கலியுகத்திலும் மூன்றுமடங்கு பெரியதான திரேதா யுகம் 12,96,000 ஆண்டுகளையும் கொண்டன. கிருத யுகம் மொத்தம் 17,28,000 ஆண்டுகள் கொண்டது. இது கலியுகத்தின் நான்கு மடங்கு பெரியதாகும்

No comments:

Post a Comment