jaga flash news

Wednesday 2 January 2013

அக்னி நட்சத்திரம்



     க்னி நட்சத்திரம் பிறந்து விட்டால் சுபகாரியங்கள் எதுவும் செய்யக்கூடாது என்ற கருத்து பரவலாக மக்களிடம் காலம் காலமாக இருந்து வருகிறது. குறிப்பாகச் சொல்லுவ தென்றால் தென் தமிழகத்தை விட வட தமிழகத்தில் இத்தகைய நம்பிக்கை மிக அதிகாமவே இருக்கிறது.
எனக்குத் தெரிந்த ஒரு பெரியவர் பிரபலமான ஜோதிடர் ஒரவரை என்னிடம் வசைபாடித் தீர்த்தார். காரணம் என்னவென்று நான் கேட்டபோது கத்திரி நேரத்தில் என் மகன் திருமணத்திற்கு நாள் குறித்துத் தந்திருக்கிறார். இவரெல்லாம் ஒரு ஜோதிடரா என்று கூறி தனது வசைபாடலைத் தொடர ஆரம்பித்தார்.
    எனக்கு அந்தப் பெரியவரைப் பார்ப்பதற்குப் பாவமாக இருந்தது. காரணம் இவரைப் போலவே எத்தனையோ பேர்கள் கத்திரி தோஷத்தைப் பற்றிய அறியாமையில் இருக்கிறார்கள். உண்மையில் கத்திரி தோஷத்தில் சுபகாரியம் செய்யக் கூடாதா? என்று கேட்டால் ஆம் செய்யக்கூடாது என்ற பதிலையும், கத்தரி தோஷம் என்பது உண்மையில் மக்கள் நினைப்பது போல் அக்கினி நட்சத்திர காலம் இல்லை என்றும் சொல்ல வேண்டும். அப்படியென்றால் கத்தரி தோஷம் என்றால் என்ன என்பது தானே உங்கள் கேள்வி.     எந்தவொரு சுபநிகழ்ச்சிக்கும் நேரம் குறிப்பது வழக்கம். அந்தக் குறிப்பிட்ட நேரத்தில் ஒரு லக்னம் ஆட்சியில் இருக்கும். அந்த லக்னத்திற்கு 2வது இடத்திலேயும், 12வது இடத்திலேயும் ராகு, கேது, சனி, செவ்வாய், போன்ற பாவ கிரகங்கள் அமர்ந் திருந்தால் அது தான் கத்தரி தோஷ காலம் எனப்படும்.
இந்தக் காலத்தில் சுபகாரியங்களைச் செய்யக்கூடாது. மற்றபடி ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் 21ஆம் நாளிலிருந்து வைகாசி மாதம் 14ம் நாள் வரை உள்ள அக்னி நட்டசத்திர காலத்தில் சுபகாயங்கள் செய்ய சாஸ்திரங்கள் எந்தத் தடையும் விதிக்கவில்லை.
     சாதாரணமாக நீங்கள் பஞ்சாங்கத்தைப் பார்த்தாலே இக்குறிப்பிட்ட காலத்தில் பல சுபமுகூர்த்தங்கள் கணிக்கப்பட்டு இருப்பதைப் பார்க்கலாம். இப்படிக் கணித்து எழுதிய ஜோதிட சாஸ்திரிகளுக்கு அடிப்படையான இத்தகைய விஷயங்கள் தெரியாமலா கணிதம் செய்கிறார்கள்; இல்லவே இல்லை.    அக்னி நட்சத்திர காலத்தில் கிணறு வெட்டுதல், தோட்டம் வைத்தல், மரம் நடுதல், விதை விதைத்தல் போன்ற சுபகாரியங்களைத் தவிர எல்லாவிதமான நல்ல செயல்களையும் செய்யலாம். அதில் தவறில்லை

1) கத்திரி தோஷம் என்றால் என்ன ?
சூரியன் மேஷ ராசியில் சஞ்சரிக்கும் காலம் சூரியன் உச்சம் எனப்படுகிறது இந்த காலகட்டத்தில் பூமி சூரியனுக்கு அருகாமையில் சஞ்சரிப்பதால் கடுமையான வெப்பம் பூமியை பாதிக்கிறது இதனால் அதிக வெப்பம் காரணமாக மனிதனின் வாழ்வாதாரம் பதிக்கப்படுகிறது அந்த காலத்தில் அறிவியல் வளர்ச்சி காணாத காலகட்டத்தில் ஓரிடத்தில் இருந்து வேறொரு இடத்திற்கு பெயர்ந்து செல்வது கோடை வெயிலில் சாத்தியமற்றது அதுவும் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சியை நடத்துவது என்பது முடியாத காரியம் அல்லவா ! எனவேதான் முன்னோர்கள் இக்காலகட்டங்களில் சுபகாரியங்கள் செய்யகூடாது தோஷம் என்றார்கள் அதிக வெயில் காரணமாகவும் தூரங்களை கடக்க வாகனவசதி இல்லாத காரணமும் மருத்துவ வசதி இல்லாத காரணம் கொண்டும் மக்கள் ஒரு சுபகாரியம் நிகழ்த்தி அதன் மூலம் வெயில் கொடுமையினால் அல்லல் படுவதை தடுக்கவே அக்கினி iநட்சத்திரம் எனும் கத்திரி தோஷம் என்று சொன்னார்கள் .

2) அக்னி நட்சத்திர காலங்களில் சுபகாரியங்கள் செய்யலாமா?
விஞ்ஞானம் வளர்ந்து வருகிறது தொழில்நுட்ப வளர்ச்சியில் மனிதன் முன்னேறிவிட்ட நிலையில் அக்னி நட்சத்திர காலத்தில் வெயிலின் கொடுமைகளில் இருந்து தப்பிக்க நிறைய மாற்று முறைகளையும் நவீன மருத்துவமும் ,வாகனவசதிகளையும் தகவல் தொழில்நுட்ப வசதியும் பெற்று உள்ள நிலையால் எதையும் சமாளிக்கும் நிலையில் இன்றைய மனிதன் உள்ளான் எனவே அக்னி நட்சத்திர காலங்களில் சுபகாரியங்கள் தாராளமாக செய்யலாம் .

3 ) ஆவணி மாதம் இரண்டு அமாவாசை வருவதால் சுபகாரியங்கள் செய்யலாமா?
சூரியன் மேஷ ராசி ,சிம்மராசியில் சஞ்சரிக்கும்போது சித்திரை மாதம் ,ஆவணிமாதம் ஆகிய மாதங்களில் சூரியன் உச்சம் ஆட்சி பெறுவதால் மலமாத தோஷம் இந்த மாதங்களுக்கு கிடையாது.எனவே ஆவணி மாதத்தில் சுபகாரியங்கள் செய்யலாம்

4 ) திருமனபொருத்தம் எவ்வாறு பார்ப்பது ? 
பெயர்பொருத்தம் , நட்ச்சத்திர பொருத்தம் , ஜாதகபொருத்தம் , சகுன நிச்சிதம் ,பூ கேட்டல் ,இதில் எது சரி ?
பத்து வித பொருத்தம் பார்க்கும் வழக்கம் 80 வருடத்திற்கு முன் உள்ள நூல்களில் காணப்படுவதில்லை மூலநூல்கள் எனப்படும் முகூர்த்த கால விதானம் , காலபிரகாசிகா போன்ற நூல்களிலும் காணப்படுவதில்லை 80 வருடத்திற்குள் இடைசொருகல்தான் இந்த பத்து வித பொருத்தம் 

எனது அனுபவத்தில் 15 ஆண்டு தொழில்முறை ஜோதிடத்தில் ஏற்பட்ட அனுபவத்தில் தச வித பொருத்த நிர்ணய அட்டவணையில் ராசி பொருத்தம் ,நட்சத்திர பொருத்தம் எடுத்துகொள்ளலாம் மற்ற பொருத்தங்கள் ஆய்வுக்கு உட்பட்டவை ஆகும் இன்றைய காலகட்டங்களில் காதல் திருமணங்கள் ,உறவு முறை திருமணங்கள் போன்றவை பத்து வித பொருத்தங்கள் பார்க்காமலேயே நடக்கின்றனஅவர்களும் நன்றாக வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்

பெயர் பொருத்தம் என்பது ஏறக்குறைய முப்பது வருடங்களுக்கு முன்பு வரை கிராமங்களில் வழக்கத்தில் இருந்தது அக்காலகட்டங்களில் ஆணுக்கு பெண் அடங்கி நடந்த காலம் பெண்களும் கணவனே கண்கண்டதெய்வம் மணாளனே மங்கையின் பாக்கியம் என்று கணவன் மனைவி ஒற்றுமையாக வாழ்ந்துவந்தனர் இன்றைய நவீன கால உலகத்தில் ஆணுக்கு நிகராக பெண்கள் அபரிமிதமான வளர்ச்சி கண்டுள்ளனர் இன்றைய தம்பதிகளுக்குள் நிறைய கருத்து வேறுபாடுகள் ஏற்படுகின்றன காரணம் மீடியா வளர்ச்சி மற்றும் பெண்களின் எதிபார்ப்புகள் இவை எல்லாம் இருக்கும் பட்சத்தில் பெயர் பொருத்தம் பார்த்து திருமணம் செய்வது இயலாத காரியம்

.சகுனம் பார்த்து திருமணம் செய்யும் வழக்கம் பண்டைய காலத்தில் நடைமுறையில் இருந்திருக்கின்றன சுபசகுனம் அசுபசகுனம் என்று பகுத்து பார்த்து பெண்பார்க்க செல்லும்போது நல்லசகுனம் அமைந்து விட்டால் அந்த சம்பந்தம் சரியாக இருக்கும் என்றும் அபசகுனம் வந்துவிட்டால் அந்த சம்பந்தம் ஆகாது என்று முடிவுக்கு வந்து விடுவர் இந்த அணுகுமுறை இன்றளவிலும் கொங்கு மண்டலத்தில் காணப்படுகிறது 

இந்தகாலத்தில் பூ கேட்டு திருமணம் செய்வது நடை முறைக்கு உதவாது பூ கேட்டல் என்பது ஜோதிடரிடம் ஜாதகபொருத்தம் பார்த்தபிறகும் ஒரு சிலர் மனநிறைவை பெறுவதற்காக பூகேட்டு கோவிலுக்கு செல்வார்கள் தாம் மனதில் நினைத்த பூ வந்துவிட்டால் திருமணம் உறுதி செய்வார்கள் இல்லையென்றால் நிறுத்திவிடுவர் ., இக்காலசூழ் நிலையில் பூகேட்டுசெய்வது என்பது நிச்சயம் சாத்தியமற்றது ஏனெனில் பூ எத்தனை முறை கேட்டாலும் ஒரேமாதிரியான பலனை கொடுப்பதில்லை. மாறி மாறி விழுந்துகொண்டே இருக்கும்.

 பிறகு திருமண பொருத்தம் எவ்வாறு பார்ப்பது ;
இருவரின் ஜாதகங்களில் உள்ள கிரக அடைவுகள் சரியாக இருக்கிறதா ஆண் ஜாதகத்தில் சுக்கிரனும் பெண் ஜாதகத்தில் செவ்வாய் வலுவாக இருக்கிறதா என்று பார்த்து இருவருக்கும் நடக்கும் திசையின் போக்கு இருவரின் வாழ்வில் எப்படி இருக்கும் என்பதை ஆராய்ந்து இருவரின் ராசியும் லக்கினமும் எவ்வாறு ஒற்றுமையாக செயல்படுவார்கள் என்று ஆராய்ந்து (லக்கினம் திட்டம் ,ராசி செயல் )ராசி லக்கினரீதியாக பொருத்தம் பார்ப்பதே சிறந்ததாகும் எனவே திருமனபொருத்தம் கிரக அடைவுகளை ஆய்வு செய்து ஜாதக கட்டங்களின் ரீதியாக பார்ப்பது நல்லது ,நட்சத்திர பொருத்தம் என்பது அடிப்படை விஷயங்களுக்கு மட்டும் எடுத்துக்கொள்ளவேண்டும்  ஜாதக நிலை பொருத்தம் முக்கியமானது இருவரின் ஜனனகால ஜாதகங்களை ஆய்வு செய்து பின்னர் முடிவு செய்ய வேண்டும்  ,இது எனது அனுபவம்.

5 ) திருமணம் செய்வதற்கு குருபலம் அவசியமா ?
திருமணம் செய்வதற்கு குருபலம் அவசியமில்லை ! காரணம் இருவர் ஜாதகத்திலும் திருமனபொருத்தம் இருந்தால் போதுமானது வியாழன் நோக்கம் என்பது அந்த காலத்தில் பெரியோர்கள் ஜாதகருக்கு திருமணம் செய்யும் கால கட்டம் வந்துவிட்டதா என்று ஜோதிடரிடம் கேட்டறிய விரும்புவார்கள் அக்கணம் ஜோதிடர் ஜாதகத்தில் நவகிரகங்களில் இயற்கை சுபர் என்றழைக்கப்படும் குரு வின் சஞ்சாரதினை பார்த்து 2 5 7 9 11 மிடத்தில்குரு இருந்தால் குருபலன் வந்துவிட்டது திருமணம் செய்துவைக்க சரியான காலம் என்று கூறுவார்கள் எந்த நூல்களிலும் குருபலன் இருந்தால்தான் திருமணம் செய்யவேண்டும் என்று வலியுறுத்தி கூறப்படவில்லை எனவே குருபலன் இல்லாவிட்டாலும் திருமணம் செய்யலாம்.

6) பரிகாரம் என்ன?
அவரவர் தன் மத சம்பிரதாயபடி படைத்த இறைவனை வழிபட்டு தொண்டுகளும் ,தான தர்மங்களும், செய்து பரிகாரம் தேடி கொள்ளவேண்டியதுதான்.

No comments:

Post a Comment