அரசமரத்தை சுற்றுவது எப்படி? | |||
குழந்தையில்லாத பெண்மணிகள் அரசமரத்தை சுற்றிவருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதற்கு சில விதிமுறைகள் உள்ளன. 1. அரசமரத்தை வலம்வரும்போது வேகமாக நடக்கக் கூடாது. சரியான இடைவெளிவிட்டு மெதுவாக நடக்கவேண்டும். 2. கைகளை ஆட்டாமல் உடலோடு ஒட்ட வைத்துக் கொண்டோ, வணங்கிக் கொண்டோ சுற்றி வர வேண்டும். 3. சக பெண்களுடன் பேசிக் கொண்டே சுற்றக் கூடாது. இதற்கு பதிலாக ஏதாவது ஒரு துதிப்பாடலை பாடி வர வேண்டும். 4. குறைந்தபட்சம் 7 முறை வலம்வர வேண்டும். அதிகபட்சமாக 108 முறை சுற்றிவரலாம். 5. சனிக்கிழமைகளில் அரசமரத்தை சுற்றுவது மிகவும் நல்லது. சுற்றி முடித்தபின் அரசமரத்தை கட்டிக் கொள்ள வேண்டும். வயிறு மரத்தின்மீது பட்டால் கர்ப்பம் தரிக்கும் என்பது நம்பிக்கை. மலட்டுத்தனத்திற்கு காரணமான பீடைகள் நீங்கிவிடும். 6. அரசமரத்தை காலை வேளையில்தான் வலம்வர வேண்டும். மதிய வேளையில் நிச்சயமாக வலம்வரக்கூடாது. 7. ஆண்கள் தினமும் 108 முறை வீதம் 3 ஆண்டுகள் தொடர்ந்து வலம்வந்தால் கடன் தொல்லை நீங்கும். பயஉணர்ச்சி அகன்று விடும். தீராத நோய்கள் தீர்ந்துவிடும். வியாபாரத்தில் லாபம் கிட்டும். உத்தியோக உயர்வு கிடைக்கும். |
jaga flash news
Saturday 26 January 2013
அரசமரத்தை சுற்றுவது எப்படி?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment