jaga flash news

Friday 4 January 2013

பட்டுப் புடவை

பண்டிகை காலங்களில். பட்டுப் புடவை கட்டுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கும். கட்டியபின் பின் அவற்றை பாதுகாப்பது அவசியம். இதோ சில ஐடியாக்கள்…

* பட்டுத் துணிகளை சோப்புப் போட்டு நீண்ட நேரம் ஊற வைப்பதையும், அலசும் போது முறுக்கிப் பிழிவதையும் தவிர்க்க வேண்டும். அடித்துத் துவைப்பதும் கூடாது.

* துவைத்து உலர்த்தும் போது, வெயிலில் உலர்த்தாமல், நிழலில், காற்றில் படும்படி போடுவது நல்லது.

* பட்டுப் புடவையை இஸ்திரி செய்யும் போது, அதன் மீது சுத்தமான வெள்ளைத் துணியைப் போட்டோ அல்லது புடவையைத் திருப்பி வைத்தோ, மிதமான சூட்டில் இஸ்திரி செய்ய வேண்டும்.

* புதிதாக வாங்கும் பட்டுப் புடவைகளை, ஒரு ஆண்டுக்குள் துவைக்க வேண்டியது அவசியம். முதலில் துவைக்கும் போது, சோப்பு போடாமல், நல்ல தண்ணீரில், உடல் பகுதியைத் தனியாகவும், பார்டர் பகுதியைத் தனியாகவும் அலச வேண்டும்.

* பட்டுப் புடவைகளை வாஷிங் மிஷினில் போட்டுத் துவைப்பதை விட, கையால் துவைப்பதே மேல்.

* பட்டுப் புடவைகளை, காற்று புகாத பாலிதின் கவர்களில் வைப்பது நல்லதல்ல; துணிப் பையில் போட்டு வைப்பது தான் நல்லது.

* பூச்சிகளை விரட்டும் நாப்தலின் உருண்டைகளை, பட்டுப் புடவை களின் மேல் போட்டு வைக்கக் கூடாது. பட்டுப் புடவைகள் கெட்டுப் போக, அது ஒரு காரணமாக அமைகிறது.

* ஒவ்வொரு முறை உடுத்திய பின்பும், பட்டுப் புடவையைத் துவைக்க வேண்டும் என்பதில்லை. உடுத்திய பின் காற்று படும் இடத்தில் புடவையை வைத்து, பின் இஸ்திரி செய்தால் போதும்.

* ஒரு படி தண்ணீரில், ஒரு தேக்கரண்டி கிளிசரினை கலந்து, பட்டுத் துணிகளை அலசி உலர்த்தினால், சுருங்காமல், இழைகள் விலகாமல் இருக்கும்.

* பட்டுப் புடவையில் எண்ணெய் கறை இருந்தால், சந்தனத்தை கறையின் மீது தடவி, சிறிது நேரம் கழித்து, அந்த இடத்தை மட்டும் நீரில் கழுவவும்.

No comments:

Post a Comment