jaga flash news

Wednesday, 9 January 2013

நெற்றியில் திருநீறு அணிவதால் ஏற்படும் நன்மை என்ன?


நெற்றியில் திருநீறு அணிவதால் ஏற்படும் நன்மை என்ன?

Temple images
நெற்றியில் திருநீறு தரித்துக் கொள்வது உயர்ந்த தத்துவத்தை விளக்குகிறது. நாடாண்ட மன்னனும், மாசறக் கற்றவரும் கடைசியில் சாம்பலாகத் தான் போகப் போகிறோம். இந்த வாழ்க்கை மாயமானது என்பதை விபூதி உணர்த்துகிறது. பிறக்கும்போதும் மண்ணிலே பிறந்தோம். சாகும்போது மண்ணிலே தான் சாகப் போகிறோம். மண்ணிலே பிறந்த மரம் இறுதியில் மண்ணிலேயே மட்கி மண்ணோடு மண்ணாகத் தான் போகிறது. நம்மை முடிவில் அடக்கிக் கொள்ளப் போகிற தத்துவம் அதுதான். இதை நினைவுபடுத்திக் கொள்ளவே, நெற்றியில் விபூதி அணிகிறோம். மனித உடலில் நெற்றி என்பது மிக முக்கிய பாகம், அதன் வழியாக மிக அதிக மாக சக்தி வெளிப்படும், உள்ளிழுக்கவும் செய்யும். இது ஒரு வர்ம ஸாதனம் கூட. சூரிய கதிர்களின் சக்திகளை இழுத்து நெற்றி வழியாக கடத்தும் வேலையை திருநீர் செவ்வனே செய்யும், அதனால்தான் நெற்றியில் திருநீறு பூசுகிறார்கள்

1 comment:

  1. அய்யா...வெ.சாமி அவர்களே...!நெற்றியில் விபூதி அணிவது ஒரு தெய்வாம்சம். அனைத்து நோயும் நம்மைக்கண்டு பயப்படும்.ஒரு கம்பீரம் கிடைக்கும். அதாவது தெய்வ கடாட்சம் நிச்சயம் உண்டு..என எனது அனுபவத்தை வைத்து கூறுகிறேன்.

    ReplyDelete