மூதேவி எங்கேல்லாம் இருப்பாள்? | |||
மூதேவி எங்கேல்லாம் இருப்பாள்? அருட்திரு இராமலிங்க அடிகளார் தீபம் இல்லாத வீட்டில் இரவில் கூட தூங்கக்கூடாது என அருளியுள்ளார்.வீட்டில் விடி விளக்கு எரியச்செய்து சுத்தமான நறுமணம் கமழும் பத்தியை எரிய விட்டபின்பே தூங்கச் செல்லவேண்டும்.இல்லாவிட்டால் ஜேஷ்டாதேவி எனப்படும் மூதேவியின் தாக்குதல் இருக்கும்.சில நிறுவனங்கள்,கடைகள்,வீடுகள் இவைகளில் மதியம் 12 மணிக்கு எல்லாவிளக்குகளை ஏற்றிய பின்பும் கூட இருளடைந்திருக்கும்.அங்கேல்லாம் மூதேவி வாசம் செய்கிறாள் என அர்த்தம். துர்வாடை,அழுக்குத்துணிகள்,துன்பம்,புலம்பல்,அலங்கோலமாக ஆடுதல்(இன்றைய கல்லூரி மாணவிகள் விடுதிகளில் தினமும் செய்வது),எதிர்மறையான எண்ணங்கள்(அதான் அடுத்தவரை கெடுக்க நினைப்பது,தவறான ஆலோசனை தருவது)அடிக்கடி கொட்டாவி விடுதல்,தீராத மனக்கஷ்டம், எப்போதும் அழுக்கு ஆடைகளை அணிதல், இவை அனைத்தும் மூதேவியின் அடையாளங்களாகும்.இவற்றில் ஒன்று இருந்தாலே வரிசையாக எல்லாமே நம்மை வந்தடைந்துவிடும். மூதேவி வராமலிருக்க நாம் நமது வீட்டில்/அலுவலகத்தில்/கடைகளில் வைத்திருக்கவேண்டியவை: தீபம், தூபம், உப்பு,மஞ்சள்,கண்ணாடி,பட்டு ஆடைகள்,தேங்காய்,பால்,வெண்ணெய்,மாவிலை,கோமியம்(பசுவின் சிறுநீர்) மூதேவியின் புகைப்படம் இணையம் முழுக்கத் தேடியும் கிடைக்கவில்லை.(இதனால் கூட இணையம் இன்னும் பிரம்மாண்டமாக வளருமோ!).எனவே புகைப்படமின்றி நாம் இந்த வலைப்பூவை பதிப்பிக்கிறோம் |
jaga flash news
Saturday 26 January 2013
மூதேவி எங்கேல்லாம் இருப்பாள்?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment