jaga flash news

Wednesday, 9 January 2013

பூணூல் அணிவதன் மகத்துவம் ...........


பூணூல் அணிவதன் மகத்துவம் ...........


கல்லூரியில் படிக்கிறோம். படித்து முடித்தவுடன் ஒரு சான்றிதழ் தரப்படுகிறது.

காவலர் பயிற்சியை முடித்தவனுக்கு போலிஸ்காரனுக்குரிய அடையாள சின்னங்கள் தரப்படுகின்றன.

ஒரு சான்றிதழ் போல அடையாள சின்னம் போல காட்டப்படுவது தான் பூணூல் ஆகும்.

இந்த பூணூல் அடையாளம் எதற்கு தேவைப்படுகிறது.

மந்திரங்களில் ராஜ மந்திரம் என்று கருதப்படுவது காயத்ரி மந்திரமாகும்.

நியமனப்படி காயத்ரியை ஜபிக்கும் ஒருவன் ஞானத்திலும்,தேஜஸ்திலும் சிறந்தவனாக இருக்கிறான்.

ஒரு தாய் தனது குழந்தையை காப்பது போல காயத்ரி மந்திரம் மனித மனதை சிதற விடாமல் காக்கிறது.

இந்த மந்திரத்தை சொல்லும் தகுதியை ஒருவன் அடைந்து விட்டான் என அடையாளப்படுத்துவதே பூணூலாகும்.

பூணூல் அணிந்த பின் அதை அணிவோர் புதிய ஒரு பிறப்பு எய்துவதாக இச்சடங்குக்குப் பொருள் கூறப்படுகிறது. முதன்முதல் பூணூல் அணியும் சடங்கை உபநயனம் என்று கூறுவர். பூணூல் அணிந்தவன் காயத்திரி என்ற மந்திர அறிவுரை பெற்றுப் புதுப்பார்வை பெறுகிறான் என்பது இதன் பொருள். இவ்வாறுமுற்காலத்தில் குடும்பத் தலைமைசமூகத் தலைமையைக் குறிக்க அணிவிக்ப்பட்ட பூணூல் பின்னர் மெய்யியல் தெளிவு பெற்றோரைக் குறிப்பதாக மாறிப் பின்னர் ஒரு குறிப்பிட்ட சாதியாரின் தனிவுடைமையாகிய கதையாகி விட்டதாம். அப்படியானால்பூணூல் அணிவது தமிழரின் மரபா?.தமிழ்நாட்டில் இந்தச் உபநயனச் சடங்கைத் தீக்கை (தீட்சை) பெறுதல் என்றும் அழைப்பார்களாம். அதாவது ஒரு ஆசானிடம் அறிவுரை பெற்று இறைப்பணி புரோகிதம் அல்லது ஆசிரியப்பணி செய்ய ஏற்புப் பெறுவது என்பதே இதன் பொருள் அதாவது ஒருவகையான உரிமத்தின் அடையாளம்.

இன்று பூணூல் அணிவதுபெரும்பாலும் பிராமணர்களாக இருந்தாலும்பொற்கொல்லர்கள்(தட்டார்கள்) பூணூல் அணிந்திருப்பதை ஓர் உரிமையாகவும் சடங்காகவும் வைத்துள்ளனர்.

 பூணூல் மூன்று புரி நூல்கள் இருக்கும். இவை சிவன்விஷ்னுபிரம்மாவையும்சக்திலஷ்மிசரஸ்வதியையும் நினைவூட்டுவதாகும்.

அது மட்டுமல்லாது வேதம் சொல்லுகின்ற மனித குணங்களான சத்வராஜஷதாமஸ ஆகிய மூன்று மனித குணங்களையும் ஞாபகப்படுத்துகிறது.

முக்காலத்தையும் விழிப்புகனவுஅமைதி ஆகிய மூன்று அவஸ்தைகளையும் இது காட்டுகிறது எனலாம்.

மேலும் மனிதன் அனுபவித்தே ஆக வேண்டிய இகலோகபரலோகஅகலோக வாழ்க்கையையும் காட்டுகிறது.

மூன்று நூல்களையும் இணைந்து முடிவில் போடுகின்ற முடிச்சிக்கு பிரம்ம முடிச்சி என்று பெயர்.

மனித உடலில் ஓடும் இடகலைபின்கலைசூட்சம நாடிகள் குண்டலினி சக்தியின் இருந்து துவங்குவதையும் பிரம்ம முடிச்சி உருவகமாக காட்டுகிறது.

வேதங்கள் பூணூலை பற்றி ஒன்றும் பேசவில்லை என்றாலும் சில வேத பிரம்மாணங்கள் பூணூலுக்கு ஏக்னோ பவித்ரம் என்று பெயர் கொடுத்து பேசுகின்றன.

சூத்ரவைசிகசத்ரியபிராமண ஆகிய நான்கு வருணத்தாரும் பூணூல் அணிய வேண்டும் என இந்த பிரம்மானங்கள் வலியுறுத்துகின்றன.

தொழிலையும் சாதியையும் பிறப்பின் அடிப்படையில் கொண்டு வந்த பிறகே சகல சாதியினரும் பூணூல் அணியும் பழக்கம் நின்று போய் விட்டது.

பழைய ஆரோக்கியமான சமூக நிலையை உருவாக்க விரும்பிய பாரதியார் தாழ்த்தப்பட்டோருக்கும் பூணூல் அணிவிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தினார்.

இன்றைய சமூக சீர்திருத்த காரர்கள் பூணூல் அறுப்பு போராட்டத்தை கைவிட்டு விட்டு எல்லோருக்கும் காயத்ரி மந்திரம் உபதேசம் செய்து பூணூல் அணிவிப்பது நல்ல விளைவை ஏற்படுத்தும்.

இன்றும் இலங்கையில்தாய் தந்தையரின் சிதைக்குக் கொள்ளி வைக்கும் போதும்ஈமச் சடங்குகளைச் செய்யும் போதும்மாணிக்கவாசகரின் திருப்பொற்சுண்ணத்தைப் பாடிச் சுண்ணமிடித்து சைவமுறைப்படி ஈமக்கிரியைகள் செய்யும் போதுபூணூல் அணிவது வழக்கத்திலுள்ளது.

ஈழத்தில்பெரும்பாலான இந்துக்கள் தீட்சை பெறுவார்கள்தீட்சை பெறும் சடங்கைசிறு வயதில் பாடசாலைகளிலேயே நடத்துவார்கள்ஈழத்தில் தீட்சை பெறுபவர், தான் தீட்சைபெறுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னரும்தீட்சைபெற்றபின் ஒருமாதமும் சைவ உணவுகளை உட்கொள்ள வேண்டும். (அசைவ உணவுகளை உண்பவராக இருந்தால்). அதன்பின் தீட்சைபெறும் நாளன்று நீராடியபின் கோவிலுக்குச் சென்றுதீட்சைக்கான சடங்குகளைச் செய்துமுடித்த பின் கோயில் குருக்கள் பல மந்திரங்களைக் காதில் ஒதுவார் அதில் முக்கியமானது ஓம் சிவாயநம… சில மந்திரங்களை தீட்சை பெறாத இன்னொரு இந்துவுக்குக் கூடத் திருப்பிச் சொல்லக் கூடாதென்பது நம்பிக்கை.



                              ஈழத்தில் பூணூல் அணியும் சடங்கு ( இவர்கள் யாரும் பிராமணர்கள் அல்ல )

பூணூலை பற்றி இன்னொரு முக்கியமான விஷயத்தை இங்கு சொல்ல வேண்டும்.

இயற்கை உபாதைகள் சரிவராதவர்கள் காதுகளில் பூணூலை சற்று அழுத்தமாக சுற்றிக் கொண்டால் மிக சுலபமாக பிரச்சனை தீரும்.


இது அனுபவ உண்மை மட்டுமல்ல. மருத்துவ உண்மையாகும்.

No comments:

Post a Comment