jaga flash news

Saturday, 26 January 2013

கட்டிடங்களின் வயதை நிர்ணயிக்கும் வாஸ்து

கட்டிடங்களின் வயதை நிர்ணயிக்கும் வாஸ்து
கட்டிடங்களின் வயதை நிர்ணயிக்கும் வாஸ்து நாம் கட்டுகிற வீடு எவ்வளவு காலம் நிலைத்திருக்கும் என்பதை முன்கூட்டியே நம்மால் தெரிந்து கொள்ள முடியும். மனைச் சிற்ப சாத்திரத்தில் இது பற்றிய தெளிவான விளக்கம் தரப்பட்டிருக்கிறது. பொதுவாக ஜோதிட ஆராய்ச்சின் அடிப்படையில் இந் த கணக்கு நிர்ணயிக்கப் படுகிறது. வீட்டின் உரிமையாளரது ஜென்ம லக்கனத்திற்கு நான்கு பத்தில் சந்திரன் நின்று, பதினொன்றில் குரு, செவ்வாய், சனி, ஆகியர்கள் இருந்து மனைக்கு மூகூர்த்தம் செய்தால் அந்தக்கட்டிடம் ஏறத்தாழ 100 ஆண்டுகள் நிலைத்து நிற்கும். சுக்கிரன் உதயமாக 7-ல் குரு இருக்க 10-ல் சந்திரன் இருக்க கட்டிடம் 1000 ஆண்டுகள் நிலைத்து இருக்கும். லக்கினத்தில் அல்லது 10-ல் சுக்கிரன் இருக்க மூன்றில் புதன் இருக்க குரு அஸ்தமனமாக முகூர்த்தம் செய்தால் அந் த வீடு 200 ஆண்டுகளுக்கு மேல் உறுதியாக இருக்கும். ஜென்ம லக்கினத்தில் சந் திரனும் நான்கில் புதனும் இருக்க குரு அஸ்தமனமாக முகூர்த்தம் செய்தால் அந்த வீடு 100 ஆண்டுகளுக்கு மேல் நிலைத்து நிற்கும். வியாழன் வெள்ளி வலமும் லக்கினம் 4,7- ல் சுக்கிரனும் 6 -ல் சூரியனும் மூன்றில் குருவும் பெரிய மண்டபங்கள், மாளிகைகள், கோபுடம் ஆகியவற்றைக் கட்டினால் ஆயிரம் ஆண்டுகளுக்கு குறையாமல் நிலைத்து நிற்கும்.

No comments:

Post a Comment