jaga flash news

Wednesday, 9 January 2013

பெண்கள் எவ்வாறு வணங்க வேண்டும் என தர்ம சாஸ்திரம் கூறுகிறது?


பெண்கள் எவ்வாறு வணங்க வேண்டும் என தர்ம சாஸ்திரம் கூறுகிறது?

Temple images
பூமியில் விழுந்து கடவுளையோ பெரியவர்களையோ பெண்கள் வணங்க வேண்டும். அடிக்கடி இவ்வாறு வணங்குவதால், ஆயுளும் அழகும் கூடும். வணங்கும் பொழுது பெண்களின் கூந்தல் தரையில் விழக்கூடாது. காலின் மேலும் விழக்கூடாது; இதனால் தெய்வ அருளும், பெரியவர்களின் ஆசியும் பூரணமாகக் கிடைக்காதபடி தேவதைகள் தடுக்கும். பூமித் தாயின் அருள் கிடைக்கப் பெண்கள் விழுந்து வணங்கும்போது கொண்டை போட்டுக் கொண்டோ - அள்ளி முடிந்து கொண்டோ விழுந்து வணங்க வேண்டும். இதனால் நீண்டநாள் ஆரோக்யமாக வாழலாம் என கூறுகிறது தர்ம சாஸ்திரம்.

பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரம் செய்வர். பஞ்சாங்க என்பது தலை, கையிரண்டு முழந்தாளிரண்டு என்னும் ஐந்தும் நிலத்தில் பொருந்தும்படி வணங்குவதாம். இதை மூன்று ஐந்து அல்லது ஏழு முறை என ஒற்றைப்படையில் செய்வர் இது சிறந்த பெண்களுக்கான உடல் பயிற்சியாகும். இவ்வாறு வழிபாட்டு முறைகளில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் முறைகளை வைத்துள்ளனர் முன்னோர்கள்

No comments:

Post a Comment