என்.ஆர்.ஐ. மாப்பிள்ளையா? ஜோதிடத்தின் ஆலோசனை! | |||
என்.ஆர்.ஐ. மாப்பிள்ளையா? ஜோதிடத்தின் ஆலோசனை! --> அயல்நாட்டில் பணியாற்றி வரும் நமது நாட்டு இளைஞர்கள் (NRI) சிலர், இங்கு வந்து மணமுடித்துச் செல்லும் பெண்களை சிறிது காலத்திற்குப் பிறகு ஒதுக்கி வைத்துவிடுவது அல்லது புறக்கணித்துவிடுவது அல்லது விவாகரத்து செய்துவிடுவது போன்ற பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன. இப்பிரச்சனையை ஆழமாக ஆராய அயலுறவு அமைச்சகத்தின் அயல்நாடு வாழ் இந்தியர் பிரிவு ஒரு சிறப்பு குழுவை அமைத்து ஆய்வு செய்ய அனுப்பி வைத்தது. அக்குழுவும் பல்வேறு நாடுகளுக்குப் பயணம் செய்து ஓர் அறிக்கை அளித்தது. அயல்நாடு வாழ் மாப்பிள்ளைகளுக்கு பெண் கொடுத்து சிக்கலிற்கு ஆளான பல குடும்பங்கள் காவல் நிலையத்தில் இருந்து தூதரக அலுவலகங்கள் வரை ஏறி இறங்கிக் கொண்டிருக்கின்ற இவ்வேளையில் இப்பிரச்சனையைத் தீர்க்க ஜோதிட ரீதியான சாத்தியம் ஏதும் உள்ளதா என்று அறிய ஜோதிடரைஅணுகினோம். கேள்வி : அயல்நாட்டில் பணிபுரியும் மாப்பிள்ளைக்கு எந்த அடிப்படையில் (ஜோதிடப்படி) பெண் கொடுப்பது குறித்து முடிவு செய்வது? சென்னை நகரம் பூமத்திய ரேகையில் இருந்து 13.04 டிகிரி வடக்கு அட்ச ரேகையில் உள்ளது. அதற்கான ஈர்ப்பு சக்தி இங்கு பிறந்த வளர்ந்த பிள்ளைகளை ஒருவகையாக வளர்த்திருக்கும். தஞ்சாவூர் 10.47 டிகிரி வடக்கு அட்ச ரேகையில் உள்ளது. அங்குள்ள ஈர்ப்பு சக்தி மாறுபடும். அங்கு பிறக்கும் பிள்ளைகள் அதற்கேற்ற தன்மையுடன் இருப்பார்கள். ஒரே கிரகம் ஒரே நாளில் ஆதிக்கத்திலிருக்கும் போதுகூட, இடம் மாறுபடும்பொழுது ஒரே நேரத்தில் பிறக்கும் குழந்தைகளின் குணத் தன்மைகளும் வித்தியாசப்படும். ஒரு மாநிலத்திற்குள்ளேயே இந்த அளவிற்கு வேறுபடும்போது, அந்த அட்சாம்சம் மாறுவது போல உணவு, உடை, ஆடை அணிவது உள்ளிட்ட பழக்க வழக்கங்கள், குடும்ப பிணைப்பு ஆகியனவும் இடத்திற்கு இடம் வேறுபடுகின்றன. ஒரு கிரகம் 13.4 டிகிரி வடக்கில் உள்ள இடத்தில் பிறக்கும் பெண் குழந்தையின் மீது ஒருவிதமான கதிராற்றலை செலுத்துகிறது. அந்த இடத்தில் செலுத்தக் கூடிய ஆற்றலை அந்த மண் உள்வாங்கி அந்த குழந்தை மீது செலுத்துகிறது. அதேபோல, தஞ்சாவூரில் அதே வேளையில் பிறக்கும் வேறொரு பெண் குழந்தையின் மீது அதே கிரகம் செலுத்தும் கதிராற்றலை அந்த மண் வேறுபட்டு உள்வாங்கி அக்குழந்தையின் மீது செலுத்துகிறது. |
jaga flash news
Saturday 26 January 2013
என்.ஆர்.ஐ. மாப்பிள்ளையா? ஜோதிடத்தின் ஆலோசனை!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment