jaga flash news

Monday, 10 November 2014

லக்ன சந்தி

சந்தியில் பிறந்தவர்

சந்தியில் பிறந்தவர்களைப் பற்றிய பதிவு இது. அதாவது லக்ன சந்தி. ஒரு லக்னம் முடிந்து அடுத்த லக்னம் தொடங்கும். இந்த இரண்டு லக்னங்களும் சந்திக்கும் குறிப்பிட்ட நேரத்தை லக்ன சந்தி என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. வாக்கிய கணிதம், லக்னம் முடியும் கடைசீ 20 வினாழிகையையும், லக்னம் தொடங்கும் முதல் 20 வினாழிகையையும் லக்னசந்தியாக குறிப்பிடுகிறது. திருக்கணிதம், லக்னம் முடியும் கடைசீ 4 நிமிஷங்களையும், லக்னம் தொடங்கும் முதல் 4 நிமிஷங்களையும் லக்ன சந்தியாக குறிப்பிடுகிறது. இது போன்ற சந்திகள் ராசிக்கும், நக்ஷத்திரங்களுக்கும் உண்டு. இப்படி லக்ன சந்தியில் பிறக்கும் ஜாதகர்களின் ஜாதகங்களை கணிப்பது சற்று கவனத்திற்குறியனவாகும். தவறினால் ஜோதிட பலன்கள் ஜாதகரின் வாழ்க்கையோடு பொருந்தாமல் போகலாம்.

( உதாரணம் )............... இப்படி லக்ன சந்தியில் பிறந்த ஒருவர் என்னை பார்க்கவந்தார். "இது தாங்க கடைசீ முறை. சரியில்லைன்னா. ஜாதகத்தை தூக்கி போட்டுடுவேன். எழுதுரவங்களும் சரியில்ல. சொல்றவங்களும் சரியில்ல." என்று அலுத்துக்கொண்டார். ஜாதகம் மேஷ லக்னம். நான் அவர் நடை, உடை, பாவனை, கடந்த கால நிகழ்வுகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு ரிஷப லக்னத்தோடு பொருத்தி பார்த்த போது சரியாக இருந்தது. எனவே, ரிஷப லக்னத்தை முதலாக கொண்டு எதிர் கால பலனை சொன்னேன். மேலும் ஜாதகத்தையும் ரிஷப லக்னமாக, சந்தி நேரம் வராத படி கணித்து தந்தேன்.
இன்று அவர் ஜோதிட விசுவாசி. கணிக்கும் போது அவர் ஆஸ்பத்திரியில் பிறந்த நேரத்திற்கு, லக்ன நேரம் நெருக்கமாகவும், அதே நேரம், அது புருஷ, ஸ்திரீ காலத்திற்குள் அடங்குமாறும் பார்த்துக்கொண்டேன்.

இதே போல் ராசி, நக்ஷத்திர சந்தியாலும் சிக்கல்கள் எழுவதுண்டு. இவ்விரண்டை கொண்டுதான் விவாஹ தச வித பொருத்தம் பார்க்கப்படுகிறது. சந்தி சரிபார்க்கப்படாமல் வாழ்க்கை துணையை தேர்வு செய்யும் போது, அது ஏறுக்குமாறாக அமைந்து ஜாதகரின் வாழ்க்கையே தடம் புரண்டு போவதுண்டு.

எனவே இவ்வகை ஜாதகம் அமையப் பெற்றவர்கள், ஜாதகத்தையோ, ஜோதிடரையோ வெறுத்து ஒதுக்காமல், நல்ல திறமையான, அனுபவமுள்ள ஜோதிடரை அணுகி, சந்தியை சரி செய்துகொண்டால், அதன் அடிப்படையில் ஜோதிடம் பார்த்து எதிர் கால வாழ்க்கையை நிம்மதியாகவும், ஒளிமயமாகவும் அமைத்துக்கொள்ளலாம். அவ்வகை ஜாதகர்களுக்கு நல்ல ஜாதகம் அமைத்து தருவதும் நமது கடமையாகும் என்பது எனது கருத்தாகும்.

No comments:

Post a Comment