jaga flash news

Monday, 10 November 2014

"மிருத்யு தோஷம்",

"மிருத்யு தோஷம்", பற்றிய பதிவு இது.  { பாரம்பரிய முறை }.  ஜோதிட சாஸ்த்திரத்தில் அபமிருத்யு தோஷம் என்ற ஒரு வகை உள்ளது.  இது தற்காலிகமானது. இது மரணபயம் தரும் கண்டத்தை ஏற்படுத்தவல்லது.  இதைப்பற்றிய விளக்கமும், பொதுவாக தானாகவே செய்து கொள்ளும் பரிகார வழிபாட்டு முறைகளையும் ஜோதிட ரீதியான நிவாரண வழிமுறைகளையும், விளக்கும் பதிவு இது.  கண்டத்தால் பாதிக்கப்பட்டு, போராடிக்கொண்டிருக்கும் ஜாதகர்களுக்கு இறையருளை பெற்றுத் தரும் வழிகாட்டியாக இப்பதிவு இருக்கும் என்று நம்புகிறேன். 

 கண்டம் என்றால் மரணம் ஏற்பட்டு விடுமோ! என்று தேவையில்லாமல் அச்சப்பட வேண்டியதில்லை..ஆயுள் தீர்க்கமாக அமைந்தவர்களுக்கு எவ்வளவு கடுமையான கண்டம் ஏற்பட்டாலும் பிழைத்து விடுவார்கள்.  ஆனால் அப்போது ஏற்படுகிற அவஸ்தை சகித்துக் கொள்ள முடியாத அளவுக்கு கடுமையாக இருக்கும்  ஜாதகர்கள் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் எந்தெந்த கிரகத்தால், எந்தெந்த வகையான கண்டங்கள் ஏற்படுகிறது என்பதை, அவை தரும் நோய் வாரியாக கொடுக்கப் பட்டுள்ளது.

  1.  சூரியன்.          நெருப்பு கண்டம் தரக்கூடியவர்.  நெருப்பு என்பது வெளியில் மட்டுமல்ல.  நம் உடலுக்குள்ளும் உள்ளது.  நம் உடலில் இருக்கும் உஷணத்தால் நோய் உருவாவது. 
  2.  சந்திரன்.         நீர் கண்டத்தை தரக்கூடியவர்.  நீர் என்றால் ஆறு, குளம், குட்டை போன்ற நீர் நிலைகள் மட்டுமல்ல.  நீர் என்பது உடலுக்குள்ளும் இருக்கிறது.  அந்த நீரால் கண்டம் விளையும். உதாரண்த்திற்கு,  வயிற்றில் நீரடைத்து வீக்கம், ரத்தம் நீர்த்து போவது போன்றவை.
  3.  செவ்வாய்.          விபத்து போன்ற திடீர் ஆபத்துகளால் கண்டம் தரும்.   
  4.  புதன்.          கடுமையான ஜுரங்களால் கண்டம் ஏற்படுத்தும். உதாரணத்துக்கு.  டைபாய்ட், மூளை காய்ச்சல், பன்றி காய்ச்சல் ஆகியவை.
  5.  குரு.          கண்டுபிடிக்க முடியாத நோயை தந்து கண்டத்தை ஏற்படுத்தும்.  மருத்துவர்களால் ஒரு முடிவுக்கு வர இயலாத வகையில் அந்த நோய் அமைந்திருக்கும்.  ஒவ்வொரு மருத்துவர் ஒவ்வொரு வகையான பரிசோதனை செய்து, ஒவ்வொரு விதமாக முடிவுகளை சொல்வார்கள்.  .நமக்கு பெரும் குழப்பமாக இருக்கும்.
  6.  சுக்கிரன்.          தாக விடாயை கொடுத்து, நீர் அருந்த விடாமல் தடுக்கும்.  உடலில் நீர் சுருங்கி வறட்சியால் அவஸ்தை ஏற்படும்.. 
  7.  சனி.          பசியால் ஏற்படும் அவ்ஸ்தைய தந்து கஷ்டப்படுத்தும். இது மிகக் கொடுமையானது.  உணவு அருந்தினாலும் உடல் ஏற்றுக்கொள்ளாது.  வயிற்றுக் கோளாறால் உணவு தள்ளுபடி செய்யப்படும். ஆனால் மீண்டும் பசிக்கும். 
  8.  ராகு கேதுக்கள் இந்த பட்டியலில் இடம் பெற்வில்லை.  ஏனென்றால் அவைகளுக்கு ஆதிபத்தியம் கிடையாது. அபமிருத்யு கண்டத்தை கிரகங்கள் ஆதிபத்திய அடிப்படையில் தருகிறன.  இக்கிரகங்கள் அஷ்டமத்தில் இருக்கும்போது நோயை தருகிறன.

  ஜோதிட சாஸ்த்திரத்தில் கிரகங்களுக்கு தகுந்தவாறு பரிகார வழிபாட்டு முறைகள் இருந்தாலும், முதலுதவியாக, உடனடியாக மேற்கொள்ளக்கூடிய சில வழிபாட்டு முறைகள் உள்ளன.  இது ஜோதிடம் பார்க்காமலேயே, பொதுவாக இறைவனிடத்தில் நாம் நமது கோரிக்கைகளை வைத்து வழிபட்டு வேண்டிக்கொள்வதாகும். 

  1.  மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள ஸ்தலம் திருக்கடவூர்.  இறைவன் இங்கு ஸ்ரீ அமிர்தகடேஸ்வரராக எழுந்தருளியுள்ளார்.  ஸ்ரீ மார்க்கண்டேயரின் மரணபயம் போக்கிய ஸ்தலம் இது.  ஸ்ரீ மார்க்கண்டேயருக்காக யமனை காலால் உதைத்த ஸ்ரீ கால சம்ஹாரமூர்த்தியும் இங்கு உள்ளார்.  இங்கு மிருத்யுஞ்செய ஹோமம் செய்யப்படுகிறது.  இதில் கலந்து கொள்வதால் மரணபயமும், கண்டமும் நீங்கும்.  அதன் பின் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரருக்கும், ஸ்ரீ காலசம்ஹார மூர்த்திகும் அர்ச்சனை செய்ய வேண்டும்.  ஜாதகர் நேரில் சென்று இவைகளில் கலந்துகொள்ள இயலாத நிலையில் இருப்பின், தம் நெருங்கிய உற்வினரை அனுப்பி, தம் பெயரில் அர்ச்சனைகளை மட்டும் செய்து கொள்ளலாம்.  பின்பு வேத விற்பன்னர்களை கொண்டு வீட்டிலேயே மிருயுஞ்செய ஹோமம் செய்து கொள்ளலாம்.  இப்படிப்பட்ட கண்டம் நீங்கும் வழிபாடுகளை முடித்தபின்,  நோய் நீங்கும் வழிபாடுகளை தொடர வேண்டும்.  வைத்தீஸ்வரன் கோவில் சென்று ஸ்ரீ வைத்தீஸ்வரரை வணங்கி அவரின் அருட் பிரசாதமாகிய "சாத்துருண்டை" யை வாங்கி வரவேண்டும். இதனால் நோய் நீங்கும்.  திருக்கோவிலில் கிடைக்கும் சாத்துருண்டை மட்டுமே நம்பிக்கக்குரியது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.  இதுபோல் ஸ்ரீரங்கம் சென்றும் ஸ்ரீ தன்வந்திரி பெருமாளை வணங்கி பிரசாதம் பெற்று வரலாம்.  இவ்விரண்டு இடங்களில் ஓரிடம் சென்றால் மட்டும் போதுமானது.  இதுவரை சொல்லப்பட்ட வழிபாடுகள் பொதுவானவையே. நம்பிக்கையுடன் செயலாற்றுங்கள். 

  இது மட்டுமல்லாமல் ஜாதகரீதியாகவும், பரிகாரவழிபாடுகளை மேற்கொள்வது இன்னும் சிறப்புடையதாகும்.  ஒரு நல்ல, திறமையான ஜோதிடரை அணுகி, கலந்தாலோசித்து, முன்கூட்டியே பரிகாரவழிபாடுகளை மேற்கொள்வதன் மூலம் கடுமையான பாதிப்பு பெருமளவு குறையும்.  எந்த கிரகங்களால் பாதிப்பு வருகிரதோ, அந்த கிரகங்களுக்கும், அவைகளுக்குரிய தெய்வ வழிபாடுகளையும் முறைப்படி செய்து கொள்ளலாம்.  வருமுன் காப்பதும், இறைவனை சரணடைவதும், நமக்கு அவன் அருளை பரிபூரணமாக பெற்றுத் தரும்.

  இனி ஜோதிடர்களுக்கான சிறு குறிப்பு:....................................அபமிருத்யு தோஷம் என்பது, பாதகாபதியும் அஷ்டமாதிபதியும் தொடர்பு கொள்ளும் போது ஏற்படுவதாகும்.  இவர்கள் இருவரும் தசானாதனாகவும், புக்தினாதனாகவும் வரும் போது இத்தோஷம் விளைகிறது.  அன்னேரத்தில் கோசரத்தில் அஷ்டமத்தில் சனி, குரு, ராகு அல்லது கேது இருந்தால் பாதிப்பு கடுமையாக இருக்கும். ஜனன ஜாதகப்படியும், கோசரப்படியும் ஆய்வு செய்து, ஜாதரை சரியான, முறையான வழிபாடு செய்யவைத்து, அவர்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தி தர வேண்டியது 

No comments:

Post a Comment