jaga flash news

Friday 14 November 2014

ஆகம சாஸ்திரம்(சைவாகமம்,பாஞ்சராத்ரம்,வைகானஸம்)

ஆகம சாஸ்திரம்
சாதாரண மக்களுக்கு நம் மதத்தில் பற்றுதல் அதிகரிக்க வேண்டும். நம் தேசப்பண்பாட்டில் சிரத்தை உண்டாக வேண்டும். நம் பாரத தேசத்தின் சிற்பக்கலை வெகுவாகப் போற்றப்பட்டு வந்திருக்கிறது. இது ஆகம் சாஸ்திரத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்த ஆகமம் ஈஸ்வரனா லேயே போதிக்கப்பட்டது என்பது நம் முன்னோர்களின் கருத்து.
ஆகம சாஸ்திரம் மூன்று வகையில் பிரகாசிக்கின்றது. சைவாகமம்பரமசிவனை ஆதியாக கொண்டதாயும்,பாஞ்சராத்ரம் மஹாவிஷ்ணு மூலமாகவும்வைகானஸம்,பிரம்மா மூலமாகவும் அருளப்பட்டன என சொல்கின்றனர். இவைகளின் நோக்கம் பகவானுடைய ஸ்வரூபகுண வீபுதியை சரியைகிரியையோகம்ஞானம் என்னும் முறைகளால் காணவழி காட்டுவதேயாகும். ஞான பாவத்தில்இம்மூன்றும் பகவானைப் பற்றி ஒரே விதமான அரூப நிலையில்,ஸச்சிதானந்தமாக பேசும் ஒற்றுமையைக் காண்பிக்கின்றன.யோகபாவத்திலும்அவரவர் இந்திரியங்களை அடக்கிக் கடவுளைக் காண வேண்டுமென்று ஒரே விதமாய்ப் பேசுகின்றன. ஆனால் கிரியா என்னும் பாவத்தில்கடவுளுக்குபாஹ்யமான ஓர் உருவைக் கொடுத்துசிலையிலோ அல்லது உலோகத்திலோ அந்த உருவத்தை உண்டு பண்ணி மனிதன் மனிதனை எப்படி எல்லாம் போற்றுவானோ அந்த விதமாக கடவுளை வழிபடும் முறையைக் காண்கிறது. சரியை பாவமானதுஅந்தந்த ஆகமங்களுக்கேற்ப ஒழுக்கங்களையும் நியமங்களையும் எடுத்துக் காட்டுகின்றது.
ஆலயங்களில் பகவானைத் தொழும் கொள்கையும்விதமும்,நம் பாரதத்தில் தனிச்சிறப்பைப் பெற்றிருக்கிறது. பகவானுக்கு உருவம் உண்டா என்பர் சிலர். ஆனால் அரூபமான ஓர் வஸ்துவை தியானிப்பது எப்படிருக்வேதம் இத்தத்துவத்தைஅடிப்படியாகக் கொண்டு பேசுகிறது. பகவான் கண்களுக்கு தெம்பட மாட்டார். “யதோவாசோ நிவர்தந்தே” என்றபடி அவர் நம் சொல்லுக்கும் கருத்துக்கும் எட்டாதவர். இப்படிப்பட்ட கடவுளால் நமக்கு என்ன பயன்இதற்கு ஓர் உதாரணம் உண்டு. ஒருவன் தன் உடலைப் பரிசுத்தமாக்கி கொள்ள காவேரியில் குளித்தேன்’ என்று சொல்கிறான். ஆனால் காவிரியென்பது கர்நாடக விலிருந்து தமிழகம் வழியாக ஸமுத்ரம் வரை செல்லும் அந்த புண்ணிய நதியின் பெயராகும். மேலே சொன்னவன் குளித்த இடமும் காவிரிதான். அவனுடைய சக்திக்கு உகந்தபடி அவன் காவிரியை அனுபவிக்கிறான். இதே விதமாகத்தான் நாம் ஒவ்வொருவரும் கடவுளை காண்கிறோம்.அனுபவிக்கிறோம். இந்த விதமாகத்தான் நாயன்மார்கள்அணுவுக்கு அணுவானை  அப்பாலுக்கு அப்பாலானைஎன்றெல்லாம் கடவுளைக் கண்டார்கள். மாணிக்கவாசகப்பெருமாள் சென்று, ‘சென்றுசென்றுதேய்ந்துஉறைந்துபகவானைக் கண்டார். கடவுளை அரூப நிலையில் தியானிக்க ஞானிகளுக்குத்தான் முடியும். உருவம் உண்டாஇல்லையா என்ற பிரசனையே அவர்களுக்கு கிடையாது.
நமது ஆகம் சாஸ்திரங்கள் பகவானுக்கு ஒரு உருவைக் கொடுக்கின்றன. ஆலயம் கட்டும் முறையையும்பகவானை உபாசிக்கும் வழியையும் காட்டுகின்றன. பெயரில்லாத ஆதமா,ஒரு சரீரத்தை அடைந்துபெயரில்லாத பரம்பொருளுக்கு பலஉருவங்களையும்பல பெயர்களையும் கொடுக்கக் காண்கிறோம். இந்தத் தத்துவத்தை அனுசரித்துநமது ஆலயங்களை அழகாக அமைக்க வேண்டும். பரிசுத்தத்தோடுகாப்பாற்ற வேண்டும். நமது ஆலயங்கள் ஆகமப்படிஏற்கனவே சாந்நித்யம் அடைந்திருக்கின்றன. கடவுள் வழிபாட்டை வழிமுறையுடன் செய்தல் வேண்டும். யாவற்றிற்கும் சில்ப சாஸ்திரம் முக்கியமானது. நமது தேசத்தின் ஹஸ்தசாமர்த்தியங்களை (கை வேலைபாடுகளை) ஆலயங்களிலேதான் குவித்து இருக்கின்றனர் 

No comments:

Post a Comment