jaga flash news

Wednesday, 19 November 2014

ஐட்லிங்கில்

எரிபொருள்

எரிபொருளை மிச்சப்படுத்தும் வழிமுறைகளை படித்தும், கேட்டும் கடைபிடிக்கும் பலர் கார் எஞ்சினை ஆஃப் செய்து, ஸ்டார்ட் செய்வதைவிட நீண்ட நேரம் ஐட்லிங்கில் விட்டுவைப்பதால் எரிபொருளை சேமிக்க முடியும் என்று கருதுகின்றனர். ஆனால், கார் எஞ்சினை ஆஃப் செய்து ஸ்டார்ட் செய்யும்போது அதிக எரிபொருளை கிரகிக்கும் என்பதும் தவறான கருத்து.

தேய்மானம்

கார் எஞ்சினை நிறுத்தி, ஸ்டார்ட் செய்யும்போது கார் எஞ்சின் பாகங்கள் அதிக உராய்வு மற்றும் தேய்மானம் ஏற்படுவதாக கருதுகிறோம். ஆனால், தற்போது வரும் பாகங்கள் இதுபோன்ற உராய்வு மற்றும் தேய்மானங்களை தாங்கும் விதத்திலும், மிகவும் தரமானதாக கொடுக்கப்படுவ

பராமரிப்பு செலவீனம்

வீணாகும் எரிபொருளுக்கு செலவிடும் தொகையையும், தேய்மான பாகத்தை மாற்றுவதற்கு ஆகும் செலவையும் ஒப்பிட்டு பார்க்கும்போது, எரிபொருளுக்குத்தான் அதிகம் செலவு ஏற்படும் என்பதை மனதில் வையுங்கள். மேலும், ஐட்லிங்கில் நீண்ட நேரம் நிற்கும்போது கார் எஞ்சின் போதுமான வெப்பநிலையில் இயங்காது என்பதால், மைலேஜ் வெகுவாக குறையும்.

சுற்றுச்சூழல் பாதிப்பு

எஞ்சினை ஆஃப் செய்து வைப்பதால், எரிபொருள் மிச்சமாவதோடு, கார் எஞ்சின் வெளியிடும் புகையால் சுற்றுச்சூழல் மாசுபடுவதும் தவிர்க்கப்படும். நகர்ப்புறங்களில் காற்று மாசுபடுதலுக்கு வாகன புகை மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது.

மாசுப்படுத்தும் அளவு

ஒவ்வொரு காரும் 10 நிமிடங்கள் ஐட்லிங்கில் நிற்பதை தவிர்த்தால், காற்றில் கார்பன் டை ஆக்சைடு அளவை வெகுவாக தவிர்க்க முடியும் என க்ரீன் லிவிங் மற்றும் சஸ்டெயினபிள் பிசினஸ் என்ற இதழ் வெளியிட்டிருக்கும் செய்தியில் கூறப்பட்டுள்ளது. எனவே, சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்க்க ஒவ்வொருவரும் சிறிய முயற்சியை செய்யலாமே.

உடல் பாதிப்புகள்

நகர்ப்புறங்களில் வாகனப் புகையால் ஏற்பட்டிருக்கும் காற்று மாசு காரணமாக குழந்தைகளின் வளர்ச்சி, நுண்ணறிவுத் திறன் ஆகியவை பெரிதும் பாதிக்கப்படுவதாக நியூயார்க் நகரில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுதவிர, பெரியவர்களுக்கு ஆஸ்துமா, அலர்ஜி மற்றும் புற்றுநோயைக் கூட ஏற்படுத்துவதாக சமீபத்திய ஆய்வுகள் எச்சரிக்கின்றன.

குழந்தைகளுக்கு பாதிப்பு

காற்றில் வாகனப் புகையின் நச்சுத்தன்மை வெகுவாக அதிகரித்து வருவதால், குழந்தைகளுக்கு பெரும் உடல் பாதிப்புகளை எதிர்கொள்கின்றனர். எனவே, நம் எதிர்கால சந்ததியினரை மனதில் வைத்து அதிக நேரம் கார் எஞ்சினை ஐட்லிங்கில் விடுவதை தவிர்க்கலாம்.

பணச்சேமிப்பு

சமீபத்திய ஆய்வுபடி, அமெரிக்காவில் வாகனங்கள் ஐட்லிங்கில் நிற்பதன் மூலம், ஆண்டுக்கு ரூ.80 கோடி அளவுக்கு எரிபொருள் மூலம் இழப்பு ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. எனவே, பணத்தையும், கார் எஞ்சினையும் பாதுகாக்க அதிக நேரம் எஞ்சினை ஐட்லிங்கிலில் விடாதீர்கள்

No comments:

Post a Comment