jaga flash news

Tuesday 18 November 2014

ஜோதிட பரிகாரங்கள் பலனளிக்க என்ன செய்ய வேண்டும்?

செய்வினை கோளாறு
 வீட்டில் செய்வினை கோளாறு அல்லது கண் திருஷ்டி அல்லது துர் ஆவிகளினால் துன்பம் என்றால் அஷ்வத் சத்ரு சம்ஹார தீப எண்ணெயைக் கொண்டு வீட்டில் தீபம் ஏற்றவும்.
குழந்தைகள் கல்வியில் சிறக்க
ஊதுபத்தியில் புனுகு தடவி படிக்கும் அறையில், ஏற்றிவைக்கவும். அஷ்வத் வித்யா வாணி விபூதி தினசரி காலை, மாலை, இரவில் குழந்தைகளுக்கு நெற்றியில் பூச படிப்பில் கவனம் செலுத்தி நல்ல ஞாபக சக்தியுடன் கல்வியில் முன்னேற்றம் வரும். படிப்பில் கவனம் செலுத்தி நல்ல ஞாபக சக்தியுடன் கல்வியில் முன்னேற்றம் வரும்.
குழந்தைகள் முரட்டுத்தனம் நீங்க
1.
27 ஏலக்காயை மாலையாகக் கட்டி 18 வியாழக்கிழமை விநாயகருக்கு அணிவித்து குழந்தையின் பெயர், நட்சத்திரம் கூறி அர்ச்சனை செய்யலாம். 2. குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க: ஜாதகத்தில் சனி செவ்வாய் ஒருவருக்கு ஒருவர் பார்வை இருந்தாலோ அவ்வது சனி, செவ்வாய் சேர்ந்து இருந்தாலோ, திருச்செந்தூர் முருகன் கோவிலில் குழந்தையை முருகனுக்கு அர்ப்பணித்து திரும்பவம் சுவீகாரம் எடுக்கலாம். இதனால் குழந்தைகள் முரட்டுத்தனம் நீங்கும்
குடும்ப ஒற்றுமைக்கு தீப வழிபாடு
அஷ்வர் தீப எண்ணெய், கல்கண்டு, மற்றும் 8 மூலிகைகளின் கலவையினால் ஆனது. இதை காலை, மாலை இருவேளை ஏற்றி வழிபட குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்
வறுமை நீங்கி செல்வம் தழைக்க
எளிய வழிபாடு தேவாரப் பதிகத்தில் உள்ள "இடறினும் தளரினும்" என்ற பதிகத்தினை தினசரி படிக்கலாம். வள்ளி திருமணம் புத்தகம் படிக்கலாம் அல்லது ஒலிபதிவு வடிவில் கேட்கலாம். கிருஷ்ணாஷ்டகம் படிப்பதும் நன்மை
விவாகரத்துகளுக்குக் காரணம் என்ன?
a)   நட்சத்திரப் பொருத்தம் மட்டும் பார்க்காமல் வதூ, வரன் இவர்களின் ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளை ஆராய வேண்டும். b) செவ்வாய் தோஷத்தைப் பற்றிய சரியான அடிப்படை என்ன என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். c) திருமண மண்டபம் கிடைக்கும் நாளில் பெண்ணின் மாதவிடாய் நாளாக இருப்பின் அதைத் தவிர்க்க மாத்திரைகளை உண்ணக் கூடாது. d) திருமணம் வியாழக்கிழமையில் நிகழ்த்தக் கூடாது. வெள்ளிக்கிழமை, ஞாயிறு கிழமைகளில் திருமணம் நடந்தால் சாந்திமுகூர்த்தம் வெறொரு நாளில் நடத்தவேண்டும். தொடர்பு
குல தெய்வ வழிபாடு
இரண்டாவது குல தெய்வ வழிபாடு. குல தெய்வம் என்கிறபோது அந்த தெய்வம் முருகனாகவோ, பெருமாளாகவோ இருக்க முடியாது. குல தெய்வம் ஒரு பெண் தெய்வமாகத் தான் இருக்க வேண்டும்

திருமணத்தடை அல்லது தாமதம் ஏன்?
 திருமணத்தடைக்கு முதன்மையான காரணம் பித்ரு தோஷம். இரண்டாவதாக களத்திரகாரகன் என்னும் சுக்கிரன் ஒரு ஜாதகத்தில் கிருத்திகை, திருவாதிரை, கேட்டை, மூலம் ஆகிய நட்சத்திரங்களில் நின்றால் திருமணம் தாமதப்படும். செவ்வாய் தோஷம், காலசர்ப்ப தோஷம் என்பதை மட்டுமே கருத்தில் எடுத்துக் கொள்ளக் கூடாது.
பரிஹாரம் செய்ய வேண்டும்..

இறந்தது கன்னியா, சுமங்கலியா, பிரம்மச்சாரியா மற்றும் துர்மரணமா என தெரிந்து அதற்கு ஏற்ப தில ஹோமம் செய்ய வேண்டும். தர்பணம் மட்டும் செய்தால் போதாது. மாந்தி என்கிற கிரஹம் ஜாதகத்தில் உள்ள நிலையை வைத்து பித்ரு சாபம் மற்றும் செய்வனை கோளாறு உள்ளதா என்று கண்டுபிடித்து தக்க பரிஹாரம் செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment