jaga flash news

Friday, 14 November 2014

செவ்வாய் தோஷம் - விளக்கம்

செவ்வாய் தோஷம் - விளக்கம்
லக்னத்திலிருந்து செவ்வாய் 2-4-7-8-12ல் இருப்பது செவ்வாய் தோஷம் என்று பஞ்சாங்கங்களில் கொடுக்கப்பட்டுள்ளது.இது பொதுவான விதிகளே நவக்கிரங்கள் அனைத்தும் சேர்ந்து தான் ஒருவரின் குணம், நலம், வசதி, ஆயுள் என சகலத்தையும், நிர்ணயிக்கிறது. செவ்வாய் தோஷம் மட்டுமே ஒருவரின் வாழ்க்கைக்கு அதிமுக்கியமானதானது அல்ல, என்ற போதிலும் நமது தற்போது வெளிவந்துள்ள நூல்களில் வழங்கிவரும் செவ்வாய் தோஷம் பற்றிய விளக்கங்கள் தங்களின் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. என்னுடைய ஆய்வுப்படி செவ்வாய் தோஷத்தால் எவ்விதமான தீங்கும் ஒருவரால் மற்றவருக்கு வராது .
லக்னத்திலிருந்து செவ்வாய் 2-4-7-8-12 ல் இருப்பது செவ்வாய் தோஷம், அதுவே மகரம், மேஷம், விருச்சிகம் போன்ற ராசியில் இருந்து அது 7-மிடமாக இருப்பின் தவறில்லை செவ்வாய் நின்ற வீட்டின் அதிபதி அஸ்தமனம், நீச்சம் பெற்று செவ்வாய்க்கு 6-8-12ல் இருந்து வீட்டால் செவ்வாய் தோஷம் உண்டு செவ்வாய் நின்ற வீட்டின் அதிபதி லக்கனத்திற்கோ, ராசிக்கோ 5-9ல் இருப்பின் தோஷம் கிடையாது. செவ்வாய் ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம், மகரம் ஆகிய லக்கனத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய், மிருகசீசம், சித்திரை, அவிட்டம், புனர்ப+சம், விசாகம், ப+ரட்டாதி, உத்திரம், உத்திராடம், கார்த்திகை, சுவாதி, திருவாதிரை, சதயம், ப+சம், உத்திரட்டாதி போன்ற நட்சத்திரங்களைப் பெற்று எங்கு இருப்பினும் அதிலும் 2-4-7-8-12ல் இருந்து எந்தக் கிரகத்தால் பார்க்கப்பட்டு இருப்பினும் பாதகமான பலன்களைத் தருகிறது.
செவ்வாய் தோஷம் பரிவர்த்தனை இருந்தாலும் தோஷமில்லை,சூரியனுடன் சேர்ந்த செவ்வாய்க்கும் தோஷமில்லை. செவ்வாய், ராகு,கேது தொடர்பு பெற்றும் தன்னுடைய பகை கிரகத்துடன் இருக்கும் போது மட்டுமே பாதிப்பு தருகிறது. எங்களின் ஆய்வுப்படி 90 சதவீகிதம் செவ்வாய் தோஷம் என்பது எவ்விதமான பாதிப்பையும் தருவதில்லை 

No comments:

Post a Comment