jaga flash news

Sunday 19 April 2020

கிட்னியில் கல்

கிட்னியில் கல் 
இரவு 2 மணிக்கு தீராத வயிற்று வலி கிட்னியில் கல் என்று தெரியும் இருந்தாலும் இரவு என்ன செய்வது என்று வீட்டின் பின்புறம் உட்கார்ந்திருந்தேன். பக்கத்து வீட்டுப்பாட்டி தூக்கம் வரவில்லை என்று வெளியே உலாவிக்கொண்டிருந்தார்.

அருகில் வந்து ஏன் இங்க உட்கார்ந்திருக்க என்று விவரம் கேட்டார். என் வேதனையைக் குறிப்பிட்டேன். உடனே பொங்கலுக்குக் காப்பு கட்டியிருந்த கொத்தில் பூளைப்பூவை மட்டும் உருகி சுடுநீரில் காய்ச்சி வடித்துக் கொடுத்தார். "இந்தா இதக்குடி அரை மணி நேரத்துல சரியாகிடும்" என்று கொடுத்தார். கால் மணி நேரத்திலேயே வலி குறைந்தது. 

காலையில் ஸ்கேன் செய்து பார்த்தேன் 8mm கல் இருந்தது. மருத்துவர் ஆபரேசன் செய்ய வேண்டுமென்று தற்போதைக்கு மாத்திரை சாப்பிடுமாறு கூறினார். நான் மாத்திரை வாங்கவே இல்லை. 

பூளைப்பூ வைத்தியத்தைத் தொடர்ந்தால் என்ன என்று மனதிற்குத் தோன்றியது. தினமும் குடிக்குமளவு தண்ணீரை எடுத்து அதில் கைப்பிடிப் பூளைப்பூவைப் போட்டு காய்ச்சி 6 அல்லது 7 நாள் குடித்திருப்பேன். வலி சுத்தமாகக் காணாமல் போயிருந்தது. 

மறுபடியும் ஸ்கேன் செய்து பார்த்தேன் 3mm மட்டும் இருந்தது. மறுபடியும் 5 நாட்கள் தொடர்ந்தேன். சிறுநீரகக் கல் இல்லாமல் போனது. பாட்டியின் வழி காட்டுதலால் ஆபரேசனில் இருந்து தப்பித்தேன்.
 
அன்றிலிருந்து வாரம் ஒருமுறை பூளைப்பூவுடன் சிறு நெருஞ்சில் கொடியையும் ஒரு கை பிடி எடுத்து 2 டம்ளர் நீரில் கொதிக்க வைத்து 1 டம்ளராக வற்றியவுடன் கருப்பட்டி போட்டு டீ போல வைத்துக் குடித்துக் கொள்வேன்.

பிறகுதான் தோன்றியது. காப்புக் கட்டுவதென்பது தற்காப்பிற்காகத் தானென்றும், பாட்டி வைத்தியத்திலும் பலன்களிருக்குதென்றும்!

படித்ததில் பிடித்தது,

1 comment:

  1. சில வருடங்களுக்கு முன் அடியேனுக்கு இதே வலி வர (அம்மணி அந்த நேரத்திலேயும் இது பிரசவவலியோட நூற்றில் ஒன்னு தான் சொன்னாங்க) தீவிர சிகிச்சைக்கு போய் அவங்க.. உள்ள கிட்னியில் வைரம் வைடூரியம் கல் ஒன்னு பத்திரமா இருக்கு.. இப்பாதைக்கு வெளியே வர சான்ஸ் இல்ல..கொஞ்சம் மூவ் ஆகி இருக்கும் அதுதான் இந்த வலின்னு மருந்து கொடுத்த அனுப்பிட்டாங்க. ஆனா வெளிய வரும் போது.. ஒரு வேளை இந்த கல் வெளிய வந்துச்சின்னா.. மவனே உனக்கு அன்னைக்கு தான் தீயபாவளின்னு ஒரு எச்சரிக்கை. இப்ப எல்லாம் உப்மா சாப்பிட்டு வாயிலார் வலி வந்தா கூட.. ஒரு வேளை தீபாவளியோன்னு பயப்படுறேன்.

    இந்த மூலிகையின் ஆங்கில மற்றும் போடோனிக்கல் பெயர் என்ன ? சொல்ல முடியுமா?
    நன்றி.

    ReplyDelete