jaga flash news

Thursday 23 April 2020

குடம்புளி(கொடம்புளி

இக்காலத்தில் சமையலில் நாம் பயன்படுத்தும் புளி நம் பயன்பாட்டில் வந்தது கடந்த 300 ஆண்டுகளுக்கு முன்புதான். 
அதற்கு முன்பு நம் முன்னோர்கள் பயன்படுத்தியது குடம்புளி(கொடம்புளி)என்னும் பழம்புளியே.இதை தற்போது மிகுதியாக பயன்படுத்தும் கேரளத்தில் இதற்குப் பெயர் மலபார் புளி. 

இந்தோனேசியாவை தாயகமாகக் கொண்ட குடம்புளி தாய்லாந்து, மலேசியா, நம் நீலமலை மேற்கு தொடர்ச்சி மலைச்சரிவுகள் ஆகிய பகுதிகளில் மிகுதியாக பயிராகிறது. 

தற்போதைய புளியை விட மருத்துவ பலன் நிறைந்த இது புளிப்புடன் துவர்ப்பும் நிறைந்தது. இப்பழத்தை நன்கு உலர்த்தி வைத்துக் கொண்டால் பல ஆண்டுகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். 

உடல் எடையைக் குறைப்பதற்கான மருத்துவ வில்லைகளில் இதை சேர்ப்பதால் இதன் விலை வழக்கமான புளியை விட மும்மடங்கு விலையில் சந்தையாகிறது. 

நல்ல மணம் நிறைந்த இதில் மீன் குழம்பு செய்தால் அந்தத் தெருவே மணக்கும் சிறப்புடையது. நாட்டு மருந்து கடையில் மட்டுமே கிடைத்து வந்த குடம்புளி இப்பொழுது பரவலாக காய் கனிக் கடைகளிலும்  கிடைக்கத் தொடங்கியுள்ளது. 

நாமும் சில நலக்கேடுகளைக் கொண்ட வழக்கமான புளியிலிருந்து குடம்புளிக்கு மாறுவோம். 

நமது தமிழ்நிலம் தமிழ்ப்பண்ணையில் வளர்ந்து வரும் குடம்புளி மரங்கள். 
இன்னும் கூடுதலாக குடம்புளி மரங்களை வளர்க்க எண்ணியுள்ளோம். 

ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு உணவுக்காடு. 

        வாழ்க ஐயா நம்மாழ்வார்.

No comments:

Post a Comment