jaga flash news

Sunday 19 April 2020

திருவாதிரை நட்சத்திரத்தில் செய்யகூடியவை

திருவாதிரை நட்சத்திரத்தில் செய்யகூடியவை

27 நட்சத்திரங்களில் 6 ம் நட்சத்திரம் திருவாதிரை ஆகும், இதன் உருவம் ரசமணி, பவழம், ருத்ராட்சம் ஆகும், இந்த நட்சத்திரத்தின் அதிதேவதை சிவன், நட்சத்திரத்தின் அதிபதி ராகு..

இந்த நட்சத்திரத்தின் அதிதேவதை சிவன் என்பதால் சிவபூஜை செய்ய உகந்த நட்சத்திரம், குறிப்பாக பைரவர் வழிபாடு செய்ய உகந்த நட்சத்திரம், திருவாதிரையில் பைரவர் வழிபாடு துவங்கினால் பைரவரின் அருளை பூரணமாக பெறலாம்..

இந்த நட்சத்திர அதிபதி ராகு என்பதால் மந்திரம் ஜெபிக்க மந்திர பிரயோகம் செய்ய உகந்த நட்சத்திரம்..

பாம்பு கடி, விஷகடிக்கு உரிய மந்திரம் ஜேபித்து சித்தி பெற உகந்த நாள்..

பேய், பிசாசு தொல்லைகள் ஆவிகளின் தொல்லைகளில் இருந்து விடுபட திருவாதிரை நட்சத்திரதன்று திருநாகேஸ்வரம், சிதம்பரம், திருவலங்காடு சென்று சிவ வழிபாடு செய்யவும்..

திருவாதிரை யாழ் நட்சத்திரமாகும் அதனால் புதிதாக வீணை வாசிக்க கற்றுக்கொள்பவர் திருவாதிரையில் தொடங்குவது நலம்..

திருவாதிரை என்றாலே நடராஜர் நினைவுக்கு வருவார் அதனால் நடன அரங்கேற்றம் செய்ய உகந்த நட்சத்திரம்..

திருவாதிரையில் வில் வித்தை, ஆயுதபயிற்சி குதிரை ஏற்றம் மல்யுத்தம் முதலியவற்றை கற்க ஆரம்பிக்கலாம்..

எள், கம்பு, கடுகு, கேழ்வரகு, போன்ற தானிய வகைகளை விதைக்க ஏற்ற நட்சத்திரம், திருவாதிரை கால புருஷ லக்னம் மேஷத்தில் இருந்து 3 ம் வீடான மிதுனத்தில் அமைந்துள்ளது, 3 ம் வீடு ஆராய்ச்சியை குறிக்கும், திருவாதிரையின் அதிபதி ராகுவாகும், ராகு ஒரு மர்ம கிரகம் என்பதாலும், மிதுன ராசியின் அதிபதி புதன் என்பதாலும், சாஸ்திரம் சம்பந்தமான ஆராய்ச்சியை தொடங்க ஏற்ற நட்சத்திரமாகும், சிதம்பர ரகசியத்தி்ற்கும் திருவாதிரை நட்சத்திரத்திர்க்கும் நெருங்கிய தொடர்புண்டு ஆகவே திருவாதிரை நட்சத்திரதன்று சிவ பூஜை செய்தால் சிதம்பர ரகசியம் அறியலாம்..

திருவாதிரையில் நோய்வாய்பட்டால் எளிதில் குணமாகாது, ருத்ரசாந்தி ஓமம் செய்தால் மட்டுமே குணமாகும், காரணம் கண்டுபிடிக்க முடியாத எந்த நோயானாலும், குனபடுத்த முடியாத எந்த நோயானாலும் திருவாதிரையில் சிவனை வழிபட்டு சிகிச்சை தொடங்க நிச்சயமாக குணமாகும்..

No comments:

Post a Comment