க்ஷேத்ர தர்ஸனம்.
.............
அஷ்டமங்கல்ய ப்ரஸ்ன ஜோதிஷன்,
அவிட்டம்திருநாள்,
அஜய்குமார்,
செல்; 8056203692,
க்ஷேத்ர தர்ஸனம் செய்யப்போகும் பக்தர்கள் நல்ல விடுமுறை, இல்லாத, மழை வருமா? வராதா? என பார்த்து, கொஞ்சம் பூஜைக்கு வேண்டிய பொருள்களும் வாங்கி க்ஷேத்ரத்தில் சென்று பகவானை நன்றாக ப்ரார்த்தித்து, வந்துவிட்டால், நேற்று வரைக்கும் செய்த பாப கர்ம்மங்கள் முழுக்க, முழுக்க தீர்ந்து விட்டது, என நினைப்பவர்கள் கட்டாயம் இந்த பதிவு படிக்க வேண்டும்,
எப்போதாவது சிந்தித்ருப்போமா? நாம் எதற்காக க்ஷேத்ரம் போகின்றோம் என்று?
அல்லது எவ்வாறு க்ஷேத்ரம் போவது என்பது பற்றியாவது தெரியுமா? என்றால் பதில் தெரியாது, என தான் வரும்,
க்ஷேத்ர தர்ஸனம் செய்யும்போது, ஒன்றை தெரிந்து கொண்டு ப்ரார்த்தனை செய்யவேண்டும்?
அதாவது க்ஷேத்ர தேவன், தேவிமார்களிடத்தில் ப்ரார்த்தித்து வரம் கேட்கும்போது, அந்த வரம், தாங்கக்கூடிய சக்தியையும் கொடு தெய்மே?! என்று வரங்களை தாங்கக்கூடிய சக்தியையும் கேட்டு வரம் பெறவேண்டும்,
சிலநேரங்களில் வரங்கள் கூட சாபங்களாக மாறிவிடும்,
சொர்க்கம் ஆக தோன்றும் வரங்கள் பின்னீடு சாபங்களாக மாற வாய்ப்புகள் உண்டு.
பிள்ளைகள் பிறக்கவில்லையே கடவுளே, நான் என்ன பாவம் செய்தேன்? என் வயிற்றில். ஒரு புழு, பூச்சி உண்டாகாதா? என ஸ்திரீக்கள் ப்ரார்த்திப்பார்கள்,
அந்த ப்ரார்த்தனை பலம் கொடுக்கும்,
ஸ்த்ரீ கர்ப்பிணி ஆவாள்,
புத்ர, புத்திரிகள் ப்ரஸவிப்பார்கள் பிற்பாடு அந்த சந்தானங்களால் பின்னீடு, புருஷனுக்கும், புருஷத்திக்கும், உபத்ரவங்கள் ஆக மாறி போவதை கண்ணால் பார்க்கின்றோம்,
மறுபடியும் பிரார்த்தனை, தெய்வமே, நான் என்ன பாவம் செய்தேன்? எனக்கு மட்டும் ராக்ஷஸ ராக்ஷஷிகள் பிள்ளைகளாக பிறந்து விட்டார்களே, என அழுவதையும் பார்த்திருக்கிறோம்,
ஆதலால் தான் தேவனிடம் ப்ரார்த்திக்கும்போது தரும் வரங்களை தாங்கக்கூடிய திட மனசக்தியையும் கேட்டு பெற வேண்டும்,
ஏனென்றால் சில வரங்கள் பின்னீடு சாபமாக மாறி தீரும்,
காயிகம், வாசிகம், மானஸீகம் என மூன்று ப்ரார்த்தனைகள் உண்டு,
காயிகம்,என்பது கைகூப்பி தொழுதல், அங்க ப்ரதக்ஷணம் செய்தல், தோப்புக்கரணம் போடுதல் போன்றவை காயிகம் என்பர்,
வாசிகம் என்பது மந்திரங்கள் சொல்லி ப்ரார்த்தித்தல், நாமகரணம் சொல்லி வேண்டுதலும், க்ஷேத்ரங்களில் கீர்த்தனங்கள் பாடி ப்ரார்த்திக்கலும் வாசிகம் என்பர்,
மானசீகம் என்பது பகவானை த்யானம் செய்வது, மனதினுள்ளினூடே பகவானை உள்ளம் உருகி கண்ணீரோடு ப்ரார்த்திப்பது மானஸீகம் எனப்படும் மானஸீக ப்ரார்த்தனை ஆகும்,
இதில் மந்திரங்கள், கீர்த்தனைகளை சொல்ல, பாட அறியாத., தன்னை உள்ளம் உருகி கண்ணீரோடு, உள்ளுருகி ப்ரார்த்திக்கும், ப்ரார்த்தனைகளை தேவன்மார்கள், தேவிமார்கள் அங்கீகரித்து தான் தீரவேண்டும் அங்கீகரிப்பார்கள்,
க்ஷேத்ர தர்ஸன ஆச்சாரங்கள்.
அதீத பக்தியோடு கூடி மாத்ரமே க்ஷேத்ரத்தினுள்ளில் போக வேண்டும்,
க்ஷேத்ர பூஜைகளை செய்யும் தந்திரிமார்களை தங்களுடைய கைகளால் ஸ்பர்சிக்க கூடாது,
ஸரீரத்தை ஜலசுத்தீகரணம் செய்யாமல் க்ஷேத்ர தர்ஸனம் கூடாது,
முதல் நாள் போட்டுகொண்ட வஸ்திரங்கள் தரித்து கொண்டு க்ஷேத்ர தர்ஸனம் செய்யக்கூடாது,
பாதணிகள், தொப்பி, தலைப்பாகை, லுங்கி, பேண்ட்,, குடையை பிடித்துகொண்டும், அதேபோல் தலையில் எண்ணெய் தேய்த்து கொண்டும் க்ஷேத்ர தர்ஸனம் கூடாது,
நகம், முடி, ரக்தம், எச்சில் போன்றவைகள் க்ஷேத்ரத்தினுள்ளில் இருக்கக்கூடாது,
ஸ்த்ரீக்கள் முடியை அவிழ்த்து விட்டு தர்ஸனம் கூடாது,
புஷ்பங்கள், எண்ணெய், கற்பூரம் போன்றவற்றை முதலில் க்ஷேத்ர தந்திரிமார்களிடத்தில் கொடுத்த பிறகே ப்ரார்த்தனை செய்ய தொடங்க வேண்டும்,அவைகள் சுத்தமாயிருக்க வேண்டும்,
வெறும்கையோடு க்ஷேத்ர தர்ஸனம் கூடாது!
உபதேவதை, தேவன்மார்களை தர்ஸித்த பிறகுதான் க்ஷேத்ர மூர்த்தியை தர்சிக்க வேண்டும்,
ஸ்த்ரீக்கள் தீண்டாரிகளாக இருந்தபிறகு, ஏழு நாட்களுக்கு பிறகும், கர்ப்பிணி ஸ்த்ரீக்கள் ப்ரஸவம் முடிந்து நூற்றி நாற்பத்தியெட்டு நாட்கள் கழிந்த பின்தான் க்ஷேத்ர தர்ஸனம் செய்ய வேண்டும்,
க்ஷேத்ரத்தில் விவாஹம் செய்பவர்களுக்கு மிக்கவாறும் விவாஹ ஜீவிதம் சுகமாக இருக்காது, காரணம் விவாஹம் செய்யக்கூடிய மண்டபமோ, அல்லது வீடோ அல்ல க்ஷேத்ரம்,
அதேபோல் க்ஷேத்ரத்தினுள்ளில் விவாஹம் செயயும் தம்பதிமார்கள் கெட்டுதாலி கெட்டிய சில நிமிஷங்களில் க்ஷேத்ரா மூர்த்தியை தர்ஸிக்க கூடாது,
பகவானுக்கும் நிவேத்யங்கள் நடக்கும்போது க்ஷேத்ரத்தினுள்ளில் போகக்கூடாது,
க்ஷேத்ர தந்திரிமார்கள் தரும் தீர்த்தத்தை மூன்று தவணை மந்திரம் சொல்லி ஜெபித்து தலையிலும், வாயிலும் தெளிக்க வேண்டும்,
தேவையில்லாத ஸ்தலங்களில் கற்பூரம் கொளுத்த கூடாது,
அதுபோல் மீதீ வந்த பஸ்மம். சந்தனம், ப்ரஸாதம் போன்றவற்றை க்ஷேத்ரத்தினுள்ளில் போட கூடாது,
விக்ரகங்களை தொடுதல் பாபமாகும்,
க்ஷேத்ர தர்ஸன காலங்களில் பரிபூர்ண நிசப்தம் உண்டாக வேண்டும்
க்ஷேத்ரத்தினுள்ளில் காதலர்களோ, யௌவன விவாஹ தம்பதிமார்கள் ஆபாசித்தல் கூடாது,
No comments:
Post a Comment