jaga flash news

Sunday, 8 November 2020

சாமையின் மருத்துவ பயன்கள்

சிறுதானிய சமையல் - சாமையின் மருத்துவ பயன்கள் இதோ...!

சாமை அரிசியில் சமையல்
புஞ்சைத் தாவரங்களில் (சிறுதானியங்கள்) சிறப்பிற்குரிய தானியமாக கருதப்படுவது.

சாமை. இதன் மருத்துவ குணங்கள் எலும்புகளுக்கு இடையில் இருக்கும் தசைகளை வலிமை பெறச் செய்கிறது.

காய்ச்சலினால் ஏற்படும் நாவறட்சியை போக்கும். 

வயிறு தொடர்பான நோய்களை கட்டுப்படுத்தும். 

ஆண்களின் இனப்பெருக்க அணு உற்பத்திக்கும், 

ஆண்மைக் குறைவை நீக்கும். 

சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் கொண்டு வர முதன்மை பங்கு வகிக்கும்.

சாமையில் மற்ற சிறு தானியங்களைக் காட்டிலும் இரும்புசத்து அதிகம் இருப்பதால் இரத்த சோகை வராமல் தடுக்கிறது. 

சாமை உடல் உறுதிக்கும், ஆரோக்கியத்திற்கும் உகந்தது. 

இளம் பெண்களின் முக்கிய உணவாக சாமை அமைவது அவசியமான ஒன்று. 
சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் கொண்டுவர முக்கிய பங்குவகிப்பது நார்சத்து. 

நெல்லரிசியைக் காட்டிலும் ஏழு மடங்கு நார்சத்து கொண்ட தானியம் சாமை. 

இதனை உணவாக உட்கொள்ளும் போது நீரழிவு நோயினை கட்டுப்படுத்தவும், வராமலும் தடுத்திட ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும்.

மலச்சிக்கலை போக்க வல்லது. நோய்களுக்கு எல்லாம் 
மூலமாக கருதப்படும் மலச்சிக்கலிருந்து விடுபட முடியும். 

இதுமட்டுமல்லாமல் வயிற்றுக் கோளறுக்கு சாமை அரிசி நல்லதொரு மருந்தாகவும் திகழ்கிறது. 

தாது பொருட்களை உடலில் அதிகரித்து உயிரணுக்களின் எண்ணிக்கையை உயர்த்துவதில் சாமையின் பங்கு குறிப்பிடத்தக்கது.
இக்காலத்தில், அதிக அளவு தேவையில்லாத கொழுப்பையும், சர்க்கரை பொருட்களையும் தரும் பீட்சா, பர்கர் மற்றும் மைதா பொருட்களை உண்பதைத் தவிர்த்து இம்மாதிரியான பாரம்பரிய தானியங்களில் செய்த உணவினை உட்கொள்ளும் போது உடல் உறுதியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.

No comments:

Post a Comment