முதல் குழந்தை ஆண் குழந்தையாகப் பிறக்க கிரக அமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்று வாடிக்கையாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில்.
சூரியன் , செவ்வாய் , குரு இந்த கிரகங்கள் ஆண் கிரகங் களாகும் .
சந்திரன் , சுக்கிரன் , ராகு இந்த கிரகங்கள் பெண் கிரகங்களாகும் .
புதன் , சனி , கேது இந்த கிரகங்கள் அலி கிரகங்களாகும் .
மேஷம் , மிதுனம் , சிம்மம் , துலாம் , தனுசு கும்பம் ஆகிய ஒற்றை ராசிகள் ஆண் ராசிகளாகும் .
ரிஷபம் கடகம் , கன்னி , விருச்சிகம் , மகரம் , மீனம் ஆகிய இவ்வாறு இரட்டை ராசிகளும் பெண் ராசிகளாகும் .
ஐந்தாமிடத்ததிபதி ஆண் கிரகமாக அமைய வேண்டுமானால் மேஷம் , கடகம் , சிம்மம் , விருச்சிகம் , தனுசு இவை லக்கினமாக அமைய வேண்டும் . அப்போது தான் சூரியன் , செவ்வாய் , குரு ஐந்தா மிடத்ததிபதியாக அமைவர் .
இத்தகைய ஐந்தாமிடத்ததிபதி ராசி சக்கரத்திலும் , நவாம் சக்கரத்திலும் ஆண் ராசியில் ஜனன காலத்தில் இருந்தால் தான் ஜாதருக்கு முதல் குழந்தை ஆண் குழந்தையாக பிறக்கும் என்பது ஜோதிட விதி.
No comments:
Post a Comment