jaga flash news

Thursday, 5 November 2020

பனங்கருப்பட்டி

*பலம் தரும் பனங்கருப்பட்டி நன்மைகள் அறிவோமா!*

வெள்ளை சர்க்கரை உடலில் இருக்கும் எலும்புகளையும் உள்ளுறுப்புகளையும் பதம் பார்க்கிறது.இதற்கு மாற்றாக இனிப்பும் சத்தும் நிறைந்த பாரம்பரிய பொருள் பனங்கருப்பட்டி. இது குறித்து தெரிந்து கொள்வோம்.

பனை மரத்தில் இருக்கும் பனை நீரை எடுத்து காய்ச்சும் போது கருப்பட்டி கிடைக்கிறது. வருடத்துக்கு ஆறு மாதங்கள் வரை பதநீர் கிடைக்கும். வெள்ளை சர்க்கரை பயன்பாட்டுக்கு முன்பு இனிப்பு சுவை என்றால் கருப்பட்டி மட்டும் தான். இனிப்பு பலகாரங்கள் எல்லாமே கருப்பட்டியில் தான் அதிகம் செய்யப்பட்டு வந்தது.

வெள்ளையாக இருக்கும் சர்க்கரை நாவுக்கு அப்போது மட்டுமே தற்காலிக சுவையை கொடுக்கும். ஆனால் கருப்பட்டி அப்படி அல்ல சாப்பிட்ட பிறகும் நாக்கிலும் சுவை வெகுநேரம் இருக்கும். நமது முன்னோர்கள் பயன்படுத்திய ஆரோக்கியமான உணவு முறையில் கருப்பட்டியும் முக்கியமானது.
பனை மரத்திலிருந்து பெறப்படும் பதநீர், பனைவெல்லம், நுங்கு இவற்றுக்கு மத்தியில் பனங் கருப்பட்டிக்கும் தனி இடம் உண்டு. 

இதன் மருத்துவ பயன்களை சொல்லிக் கொண்டே போகலாம். 

பாதுகாப்பாக சத்துகுறையாமல் தயாரிக்கப்படும் பனங்கருப்பட்டி வெள்ளை சர்க்கரையுடன் ஒப்பிடும் போது நூறு மடங்கு சிறந்தது. சர்க்கரை கலோரி மிகுந்தவை. ஆனால் பனங்கருப்பட்டி கலோரியில்லாமல் உடனடியாக உடலுக்கு ஆற்றலை தரும் சக்தி கொண்டவை.

கண்பார்வை குறைபாடு இல்லாம இருக்க இதை மட்டும் செய்தா போதும்!
வெள்ளை சர்க்கரை உடலுக்கு எடுக்கும் போது அவை செரிமானம் ஆக உடலில் இருக்கும் வைட்டமின் பி, கால்சியம் போன்ற சத்துகளை உறிஞ்சுகிறது. பனங்கருப்பட்டி உடலுக்குள் சென்று அசிட்டிக் அமிலமாக மாறி வயிற்றில் இருக்கும் நொதிகள் செயல்பாட்டை அதிகரிக்கிறது. இதனால் செரிமானக்கோளாறுகள் உண்டாகாமல் தவிர்க்கப்படுகிறது.
வீட்டு பெரியவர்கள் வீட்டில் இருக்கும் பெண் பிள்ளைகள் வயதுக்கு வந்தால் தோல் உளுந்துடன் கருப்பட்டி கலந்து களி செய்து கொடுப்பார்கள். இதனால் பெண் பிள்ளைகளுக்கு இரும்புசத்து போதுமான அளவு இருக்கும். 

இரும்புச்சத்து பற்றாக்குறை இருந்தாலும் அதை போக்கிவிடும். கருப்பைக்கு பலம் தரும் உணவில் கருப்பட்டியும் முக்கியமானது. 

பேறுகாலத்துக்கு பிறகு தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் உணவில் கருப்பட்டி சேர்த்துவந்தால் தாய்ப்பால் கூடுதலாக சுரக்கும். 

குழந்தைக்கு எதிர்ப்புசக்தியும் ஊட்டசத்தும் கிடைக்கும்.

வைட்டமின் பி மற்றும் அமினோ அமிலம் நிறைந்திருக்கும் கருப்பட்டி தீரா நோயான நீரிழிவை கட்டுபடுத்துகிறது. 

இதில் இருக்கும் கிளைசீமி உடலில் கலக்கும் சர்க்கரை அளவை காட்டிலும் பாதியாக குறைப்பதால் நீரிழிவு இருப்பவர்கள்அதனால் காபி, டீ குடிக்கும் போது சர்க்கரை போடாமல் குடிப்பவர்கள் கூட கருப்பட்டி கலந்து குடிக்கலாம். 

நீரிழிவு பாதிப்பு கட்டுபடுத்தாமல் இருப்பவர்களுக்கு உடலில் வேறு சில பாதிப்புகளும் உண்டாகக்கூடும். அத்தகைய பாதிப்பு நேரமால் தவிர்க்கவும் பனங்கருப்பட்டி உதவுகிறது.

இதயத்தை பாதுகாக்க தேவையான பொட்டாசியம் சத்து கருப்பட்டியில் உண்டு. இவை ரத்தத்தை சுத்தம் செய்வதோடு ரத்த அழுத்ததையும் கட்டுக்குள் வைக்க உதவுகிறது. இதனால் இதய கோளாறுகள் வராமல் தடுக்கப்படுகிறது. பொட்டாசியம் நிறைந்திருப்பதால் உடலில் இருக்கும் நரம்புகளும் ஆரோக்கியமாக இருக்கிறது.
உடம்புல யூரிக் அமிலம் அதிகமா இருந்தா கிட்னிக்கு ஆபத்தாம், ஏன்னு தெரிஞ்சுக்கங்க!
செரிமானப்பிரச்சனைகள் இருப்பவர்கள் தினமும் உணவுக்கு பிறகு ஒரு சிறுதுண்டு கருப்பட்டியை வாயில் போட்டு சுவைக்கலாம். 
இவை உமிழ்நீரோடு கலந்து செரிமான உறுப்புகளை செயல்பட வைத்து எளிதில் செரிமானம் ஆக உதவி செய்கிறது. 

மேலும் குடல் இயக்கத்தையும் சீராக்க செய்வதால் மலச்சிக்கல் பிரச்சனையும் வராமல் தடுக்கிறது.
வயிறு மந்தம், பசியின்மை பிரச்சனை இருப்பவர்கள் சீரகத்தை வறுத்து பொடித்து கருப்பட்டி கலந்து உருண்டையாக்கி தினம் ஒரு உருண்டை வீதம் 15 நாட்கள் சாப்பிட்டாலே பசி உணர்வு அதிகரிக்கும். 

பெரியவர்கள் சாப்பிடும் போது சிறிதளவு ஓமத்தை சேர்த்துகொள்வதும் பலன் தரும்.
சுக்கு காபி குடித்தால் உடல் வலி பறந்து போகும் என்று வீட்டு பெரியவர்கள் சொல்வதுண்டு. சுக்கு மல்லி காபியில் இனிப்புக்கு சேர்க்கும் கருப்பட்டி உடலுக்கு ஆற்றல் தந்து உடல் சோர்வை விரட்டி அடிக்கும். இதில் சுண்ணாம்பு சத்தும், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாக இருக்கிறது.

வளரும் குழந்தைகளுக்கு சிறுவயது முதலே இனிப்பு பலகாரங்களில் வெள்ளை சர்க்கரைக்கு மாற்றாக பனங்கருப்பட்டி கொடுத்து பழகினால் கால்சியம் குறைபாடு இல்லாமல் ஆரோக்கியமாக வளர்வார்கள்.

இனி வெள்ளைசர்க்கரைக்கு மாற்றாக இனிப்புக்கு பனங்கருப்பட்டி பயன்படுத்துங்கள். அதே போன்று கலப்பில்லாத கருப்பட்டியா என்று பார்த்

துவாங்குவதும் முக்கியம். இனி இனிப்புசுவைக்கு கருப்பட்டி பயன்படுத்துங்கள். ஆரோக்கியமாக நோய் நொடியில்லாமல் வாழலாம்.                                                                                                  🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment