jaga flash news

Thursday, 5 November 2020

பச்சையாக ஊற வைத்த வேர்க்கடலையை உண்ண தொடங்குங்கள்..!!

பச்சையாக ஊற வைத்த வேர்க்கடலையை உண்ண தொடங்குங்கள்..!!

பாதாம், பிஸ்தா என்ற மேல் தட்டு மக்களின் உணவுகளை போலல்லாது ஏழைகளுக்கும் கிட்டக்கூடிய பல கனிமச்சத்துக்கள் நிறைந்த ஒரு உணவு பொருள் வேர்க்கடலையாகும். அது மட்டுமன்றி பாதம், பிஸ்தா போன்றவற்றை விட அதிக கனிமச்சத்துக்கள் கொண்டது. மாமிசம், முட்டை போன்றவற்றை விட புரதச் சத்து இதில் மிகுதியாக உள்ளது.

உடலுக்கு தேவையான போலிக் அமிலம், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு, வைட்டமின்கள், மாங்கனீஸ்  ஆகியவை நிலக்கடலையில் நிறைந்துள்ளன.

ஒரு கைப்பிடி வேர்க்கடலையை இரவில் ஊற வைத்து காலையில் நன்றாக கழுவி விட்டு தினமும் உட்கொண்டு வர வேண்டும். இவ்வாறு ஊற வைக்கும் பொழுது அதன் பித்த தன்மை குறைவதோடு, அப்படியே பச்சையாக உண்பதால் சத்துக்கள் அழிவில்லாது முழுதுமாக உடலுக்கு சென்று சேரும்.

ஊற வைத்த வேர்க்கடலையால் ஏற்படும் நன்மைகள்:

இரத்த ஓட்டத்தை சீராக்கி இதய பிரச்சினைகளை தடுக்கும்.

பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் சீர் கேடுகள், மாதவிடாய்காலத்தில் தோன்றும் வயிற்று வலிகள், கர்ப்பப்பை கட்டிகள் போன்றவற்றை சீராக்கும்.

எலும்பு பலம் பெறுவதால் முதுகுவலி, மூட்டுவலி, கழுத்து வலி போன்றனவற்றிற்கு தீர்வாக அமையும்..!!!

No comments:

Post a Comment