jaga flash news

Wednesday, 4 November 2020

பிளம்ஸ் பழங்களின் நன்மைகள்.:

பிளம்ஸ் பழங்களின் நன்மைகள்.:

பிளம்ஸ் பழங்களில் வைட்டமின் சி சாது நிறைந்திருக்கிறது இது உடலின் எலும்புகளை பலப்படுத்துகிறது, இதில் இருக்கும் மெக்னீசியம் சத்து உடலின் தசைகள் மற்றும் நரம்புகளின் சீரான இயக்கத்திற்கு உறுதுணையாக இருக்கிறது.

வைட்டமின் ஏ சத்து அதிகம் நிறைந்த பழங்கள். இவை இரத்தத்தை விருத்தி செய்யும், இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிக்கும் தன்மை கொண்டது. இரத்தத்தில் கலந்துள்ள கொழுப்புப் பொருட்களை கரைக்கும் குணமுடையது.

இந்த பிளம்ஸ் பழங்களை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு செரிமான உறுப்புகள் அனைத்தும் சீராகி, மலச்சிக்கல் போன்றவை ஏற்படாமல் தடுப்பதிலும் சிறந்த  செயலாற்றுகிறது.

சிறுநீரகக் கோளாறுகளை நீக்கும். தசைகளின் இறுக்கத்தைக் குறைத்து மென்மையடையச் செய்யும். நரம்புகளுக்கு ஊக்கத்தைக் கொடுத்து மூளை நரம்புகளுக்கு  அதிக பலம் கொடுக்கும். மனம் அழுத்தத்தைப் போக்கும் டென்ஷனைக் குறைக்கும். நினைவாற்றலைத் தூண்டும்.

கண்பார்வை தெளிவுறச் செய்யும் சக்தி, சிவப்பு நிறப் பழங்களுக்கு உண்டு. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. எலும்பு மஜ்ஜைகளைப் பலப்படுத்துகிறது. இதயத்திற்கு சிறந்த டானிக்காக இந்த சிவப்பு நிறப் பழங்கள் விளங்குகின்றன.

போலிக் அமிலங்கள் நிறைந்த பிளம்ஸ் பழங்களை கர்ப்பிணி பெண்கள் சாப்பிட்டு வருவது நல்லது.

நமது ரத்தத்தில் கலந்திருக்கும் நச்சு பொருட்களையெல்லாம் வடிகட்டி சிறுநீரக உடலில் இருந்து வெளியேற்றும் பணியை சிறுநீரகங்கள் செய்து வருகின்றன. பிளம்ஸ் அடிக்கடி சாப்பிடுவதால் சிறுநீரகங்கள் பலம் பெற்று அதன் செயல்பாடுகள் சிறக்கும். 

உடலில் இருக்கும் நச்சுக்கள் அனைத்தையும் சுத்திகரித்து சிறுநீர் வழியாக வெளியேற்றும். மூத்திர அடைப்பை போக்கும்.

No comments:

Post a Comment