jaga flash news

Monday, 29 October 2012

நீரிழிவு நோயை கட்டுப்படுத்த எளிய தீர்வு இதோ..!


நீரிழிவு நோய் தற்போது அனைவரின் உடலிலும் வந்துவிடுகிறது. இத்தகைய நீரிழிவு உடலில் வந்துவிட்டால், அதனை முற்றிலும் சரிசெய்ய முடியாது. ஆனால் அவற்றை கட்டுப்படுத்தி, ஆரோக்கியமாக வாழ முடியும். அதற்கு இன்சுலின் ஊசி தான் ஒரே வழி என்று நினைக்க வேண்டாம். அத்தகைய நீரிழிவை இயற்கை முறையிலும் கட்டுப்படுத்தலாம். அதிலும் காய்கறிகளில் வெண்டைக்காயை சாப்பிட்டால், நீரிழிவு கட்டுப்படும்.
நீரிழிவை கட்டுப்படுத்த எப்படி வெண்டைக்காயை பயன்படுத்த வேண்டும்..
* இரண்டு வெண்டைக்காய் துண்டுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதன் இரு முனைகளையும் நீக்கிவிட வேண்டும்.
* முனைகளை நறுக்கியப்பின் அதிலிருந்து வெள்ளை நிறத்தில் ஒரு திரவம் வரும். அப்போது அதனை கழுவிடாமல், ஒரு டம்ளர் நீரில் அந்த துண்டுகளை போட்டு, இரவில் படுக்கும் முன்பு ஊற வைத்து, மறக்காமல் மூடிவிட வேண்டும்.
* பின் காலையில் எழுந்து, அந்த துண்டுகளை நீக்கி, அந்த நீரை குடிக்க வேண்டும்.
* இதனை தினமும் காலையில் குடித்து வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறைந்துவிடும்.
* சொல்லப்போனால் வெண்டைக்காயை வேக வைத்து சாப்பிடுவதை விட, இவ்வாறு சாப்பிடுவது தான், சிறந்த பலனைத் தரும்.
ஆகவே வெண்டைக்காயை குழம்பு, பொரியல் என்று சாப்பிடுவதை தவிர்த்து, மேற்கூறியவாறு சாப்பிட்டால், நீரிழிவைக் கட்டுப்படுத்தலாம். வெண்டைக்காய் எப்படி நீரிழிவைக் கட்டுப்படுத்தும்?
* வெண்டைக்காயில் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ளது. ஆகவே இதனை அதிகம் சாப்பிட்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படுவதோடு, வயிறும் நிறைந்துவிடும். இதை ஸ்நாக்ஸ் போன்றும் சாப்பிடலாம்.
* நீரிழிவில் வகை-2 நீரிழிவு என்று ஒன்று உள்ளது. இது சிறுநீரகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் இந்த வகையான நீரிழிவு இருந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதோடு, சிறுநீரகத்திற்கும் பாதிப்பை உண்டாக்கும். ஆகவே வெண்டைக்காயை சாப்பிட்டால், சிறுநீரகத்தில் எந்த ஒரு நோயும் வராமல் தடுக்கலாம்.
* எளிதில் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ள உணவுகள் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. ஏனெனில் இந்த சத்து உடலில் இருக்கும் கார்போஹைட்ரேட்டின் செரிமான நேரத்தை குறைத்து, அவை இரத்தத்தில் கலக்காமல் தடுக்கிறது. இத்தகைய சத்து வெண்டைக்காயில் அதிகம் உள்ளது.
எனவே, வெண்டைக்காயை உணவில் அதிகம் சேர்த்து, நீரிழிவைக் கட்டுப்படுத்துங்கள்.

2 comments:

  1. அய்யா. வெ. சாமி அவர்களே.....
    வெண்டைக்காயை நன்கு சுத்தமாகக் கழுவி...பச்சையாகவே கடித்தும் சாப்பிடலாம்...தினமும்...ஒன்றிரண்டு சாப்பிட நீரளிவு கட்டுக்குள் இருக்கும்.

    ReplyDelete
  2. அய்யா வெ.சாமி அவர்களே...திடீரென ஒருநாள், என் உள்ளங்கால் பாதம் முழுவதும், இரத்தக் கலரில் இருந்தன.சுகர் செக்அப் பண்ணும் டாக்டரிடம் செக்கப் செய்தேன். சுகர் 500 இருந்தன.அவர் காலை மாலை நடைபயிற்சி எடுத்துக் கொள்ளணும், துவர்ப்பு உணவுகள் சேர்க்கலாம், பூமிக்கு அடியில் விளையும் காய்கறிகளை தவிர்க்க வேண்டும் என கூறினார்.அவர் கூறியபடி...தினமும் அதிகாலை நான்கு மணிக்கு வெறும் வயிற்றில் நடை பயிற்சி. முழுநெல்லிக்காய், வெந்தயக் கீரை, அல்லது வெந்தயம்,முருங்கைக் கீரை,வாரத்தில் 2 நாள் பாகற்காய் அதலக்காய் என உணவில் சேர்த்து, மீண்டும் 15−ஆவது நாள் அதே டாக்டரிடம் செக்கப் செய்தேன்.120 இருந்தது. அதன்பின்பு நான் செக்கப் செய்ததேயில்லை. சாப்பாடு கண்ட்ரோல் உண்டு. எது சாப்பிட்டாலும் அளவோடு எடுத்துக் கொள்வேன். உருளைக் கிழங்கு, சாதம் இவை இரவில் எடுத்துக் கொண்டால், அன்று மட்டும் விசேஷமாக யூரின் போகும்.அதிகாலை வேலைகளை செய்து, வாக் போய், குறைத்துக் கொள்வேன்.ஆனால், தினசரி வெந்தயம் சாப்பிடுவது வாடிக்கை. மேலும் ஆவாரம்பூவை அலசி டிக்காஷன் போன்று குடித்துக் கொள்வேன். நொறுக்குத் தீவனம் அதிகம் விரும்புவதில்லை. எண்ணெய் பலகாரம் அதிகம் சேர்த்துக் கொள்வதில்லை.கடையில் புரோட்டா வகைகள் வாங்கி சாப்பிடுவதில்லை. எல்லா வேலைகளும் செய்வேன். அதுவும் சுறுசுறுப்பாகச் செய்வேன்... கால் நகங்களை முக்கியமாக பேணிக் கொள்வேன். காரணம், என் கணவரின் அக்காவுக்கு சுகர் இருந்தன. அவர்கள் கால் நகத்தை வெட்டாமல், அதில் அழுக்குகள் சேர்ந்ததால் அவர்கள் காலில் புண் வந்து, ஒவ்வொரு விரலாக வெட்டி எடுத்தார்கள். எனது வீட்டிற்கு ஒருமுறை வந்திருந்த சமயத்தி்ல் அதலக்காய் வாங்கி, அவர்களுக்கு தினசரி சாப்பாட்டில் கொடுத்து உண்ணச் செய்து,ஒரே வாரத்தில் புண் ஆறிவிட்டது. விரல்களில் இருந்து நீர் வடிந்து,இரத்தக் கசிவாகி நடக்கும் இடமெல்லாம் சொட்டு சொட்டாக வடியும்.நான் இந்த மாதிரி விஷயத்தில் டாக்டராக செயல்படுவேன். கடலை மாவு, பாசிப்பயிறு மாவு, இரண்டையும் கலந்து, உடம்பு கை கால், முழுவதும் தேய்த்து அதிகாலையில் குளிக்கச் செய்து, புண்ணெல்லாம் ஆறிவிட்டன.அதனால், நான், எனது நகங்களை வெட்டி, தூய்மையாக வைத்துக் கொள்வேன். உடம்பில் வித்யாசங்கள், அல்லது மாற்றங்கள் இருந்தால் (மேல்வலி, அல்லது அதிக யூரின்) உடனே வாக் சென்றோ, அல்லது வேலைகள் செய்தோ...சுகரை கட்டுக்குள் கொண்டு வந்துவிடுவேன். ஆகவே, சுகர் என்பது ஒரு வியாதி கிடையாது.நாம் உணவை ஒரு கண்ட்ரோலுக்குள்ளே வைத்திருக்க வேண்டும். இது மிக மிக முக்கியம்.புண்கள் ஏதும் இருந்தால் தானாக ஆறணும்.இல்லையேல், உடனடியாக சுகரைக் குறைக்க முழுநெல்லிக்காய் சாறு குடித்தாலே, கப் என்று சுகர் குறைந்துவிடும். புண் தானாக ஆறிவிடும். அதிகாலை குளித்து முடித்ததும்,காலில் தேங்காய் எண்ணெய் தடவ வேண்டும்.இது மிக மிக அவசியம்.இல்லையேல், வெடிப்பு வெடிப்பாக கோடு விழுந்து அதிலிருந்து நீர் கசியும்.ஆகவே, குளித்த உடனே..கை, கால்களில் எண்ணெய் அவசியம் தேய்க்க வேண்டும். மற்றபடி எல்லோரும் அலறுகிறபடி சுகர் ஒரு வியாதி அல்ல...நான் மேற்சொன்ன முறையைக் கடைப்பிடித்தால்...ஆரோக்கியமான ஆயுள் அதிகம். சுகர் வந்தால் கூடவே கொலஸ்ட்ரால் வரும் என்பார்கள். அது யாருக்கு என்றால்...மட்டன்,சிக்கன், கொழுப்பு பதார்த்தங்கள், பூரி போன்ற எண்ணெய் உணவுகள் அதிகம் சாப்பிடுவோர்தான் இதற்கு பயப்பட வேண்டும். மீன் சாப்பிடுபவர்களாக இருந்தாலுமே...கொழுப்பு நிறைந்த மீன் சாப்பிடாமல் இருக்க எளிய மீனாகிய சாளை மீன் சாப்பிடலாம். அதுபோல் முட்டையில், அவித்த முட்டையை வாரத்தில் ஒரு நாள் சேர்த்துக் கொள்ளலாம் விருப்பப் பட்டவர்கள். இவ்வாறு நடந்து கொண்டால் கொலஸ்ட்ராலுக்கு வாய்ப்பேது.... அழகான, எந்த பக்க வியாதிகளும் இல்லாமல் உடம்பை வைத்துக் கொள்ளலாம். ஆங்கில மாத்திரை எடுத்தால், முதலில் மாத்திரை, அடுத்து இன்ஜெக்க்ஷன், அதன்பின் சிறுநீர் பாதிப்பு, அல்லது அந்த மெடிஸன் வேறு பக்க விளைவுகளை ஏற்படுத்தும். ஆகவே....மேற்கண்டவாறு எடுத்துக் கொண்டால்...எந்த பாதிப்பும் இல்லை.தினசரி வெந்தயம் ஒரு டீஸ்பூன். முருங்கக் கீரை வழக்கமாக சாப்பிடுவதுபோல். முழுநெல்லி, வாரத்தில் 2 நாள் அதிகாலை வெறும் வயிற்றில். அனைத்துக் காய்களும், கிழங்குகளும் சாப்பிடலாம். அப்போ தான் நமது உடம்புக்கு தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்கும். வயதானவர்கள் நடக்க முடியவில்லையேல், சாப்பாட்டின் அளவைக் குறைத்து, சப்பாத்தி, வெந்தயக்கீரை, வெந்தயம், பாகற்காய், மணத்தக்காளி கீரை என சேர்த்து வரலாம். தெளிவாக இருங்கள். தெளிவாக உணவை எடுத்துக் கொள்ளுங்கள். சுகரைப் பற்றி சிந்திக்காமல் இருந்தாலே சுகர் இல்லை. அதற்காக விருப்பத்திற்கு சாப்பிடுவது, அடிக்கடி உறங்குவது, உட்கார்ந்த இடத்திலேயே உட்கார்ந்திருப்பதை...தவிர்க்க வேண்டும். வாழ்த்துகள்.

    ReplyDelete