jaga flash news

Sunday 28 October 2012

இந்துக்கள், இஸ்லாமியர்கள், பவுத்தர்கள் மூவருக்கும் பொதுவானதாக கோவில்


இலங்கையின் தென் கிழக்கு கோடியில் உள்ள ஊர் கதிர்காமம். பழைய நூல்களில் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாக இதை குறிப்பிடப் படுவதுண்டு.
இந்துக்கள், இஸ்லாமியர்கள், பவுத்தர்கள் மூவருக்கும் பொதுவானதாக இந்த கோவில் இருந்து வருகிறது.எல்லா மதங்களின் விழாக்களும் இங்கே பாகுபாடின்றி கொண்டாடப் படுகிறது..
இங்கே முருகனுக்கு சிலை கிடையாது. வள்ளி,தேவயானை சமேதராக முருகன் அருள்பாலிக்கும் ஓவியம் தீட்டப் பட்ட ஒரு திரை மட்டுமே தொங்க விடப்பட்டிருக்கும்.
இந்த திரைக்குப் பின்னால் ஒரு சிறிய அறை இருக்கிறது. காற்றோ, வெளிச்சமோ நுழையாத இந்த அறையில், ஒரு பேழையில் அறுகோண யந்திரம் ஒன்று உள்ளது. இந்த யந்திரம் சூட்சுமமான சக்தி வாய்ந்தது என்கின்றனர் . இதனை உருவாக்கியவர் போகர் என இக்கோவிலில் குறிப்புகள் காணக் கிடைக்கின்றன.
இந்த யந்திரமே கதிர்காமத்து கந்தனாக உருவகிக்கப் பட்டு எல்லா மதத்தினராலும் காலம் காலமாய் வணங்கப் பட்டு வருகிறது. விழாக் காலங்களில் மட்டும் இந்த யந்திரம் அடங்கிய பேழையை யானை மீது வைத்து ஊர்வலமாய் கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment